ஜீவனுள்ள தேவனின் தவறாத உண்மைகள் 60-0626 1. நான் என்னுடைய உறவினரான ஹென்றி பிரான்ஹாமின் மனைவியை அடக்கம் செய்வதற்கான அடக்க ஆராதனையில் இரண்டு மணிக்கு கென்டக்கியில் உள்ள பிரீடிங் என்ற இடத்தில் இருக்க வேண்டும். அவருடைய மனைவி மரித்துவிட்டாள், நான் அவளுடைய அடக்க ஆராதனையை நடத்த வேண்டும் என்பதே அவளுடைய கடைசி வேண்டுகோளாயிருந்தது. அது கென்டக்கியில் உள்ள பிரீடிங்கில் உள்ளது. அது ஏறக்குறைய தென்புறமாக நூற்று ஐம்பது அல்லது அறுபது மைல்கள் அந்த அளவு தூரமாயிருக்கும் என்று நான் யூகிக்கிறேன். நான் அங்கு சென்றடைய வேண்டியிருப்பதால் சற்று முன் கூட்டியே புறப்பட வேண்டியதாயுள்ளது. 2 அதன்பின்னர், ஏன், நாங்கள் அதன்பின்னர் இன்றிரவு திரும்பி வந்து, நாளை பிற்பகல் புறப்பட்டுச் செல்ல உள்ளோம். நாங்கள்…நான் அடுத்த வாரம் ஓக்லஹாமாவில் உள்ள டூல்சாவில், டூல்சாவில் இருக்க வேண்டியதாயுள்ளது. ஆனால் டூல்சாவிற்கு செவ்வாய் கிழமைக்கு முன் நான் செல்லமாட்டேன். அதன் பின்னர் நாங்கள் சனிக்கிழமை திரும்பி வருவோம், சனிக்கிழமை இரவு இங்கிருப்பேன். 3 அதன்பின்னர் ஞாயிறு காலை, அடுத்த ஞாயிறு காலை கிட்டத்தட்ட மூன்று மணியளவில் நாங்கள் மேற்குப் பகுதிக்குச் செல்ல புறப்படவுள்ளோம், அதன்பின்னர் இந்த இலையுதிர் காலம் வரை நாங்கள் திரும்பி வரமாட்டோம். நான் திரும்பி வந்து என்னுடைய குடும்பத்தினரையும், மற்றக் காரியங்களையும் கொண்டு செல்வேன். கர்த்தருக்குச் சித்தமானால் இந்த இலையுதிர்காலத்தில் நாங்கள் எப்பொழுதாவது திரும்பி வருவோம். நிச்சயமாகவே சபையானது எனக்காக ஜெபிக்கும்படிக்கு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். 4 என்னால் இங்கு இருக்க முடியுமா என்று நான் அறிய வேண்டும். இன்றிரவு இராபோஜனமா என்று நாம் பார்ப்போம், இராபோஜனமா? [சகோதரன் நெவில், “இல்லை” என்கிறார்.—ஆசி.] இல்லை. கடந்த இராபோஜன இரவு அன்று நான் இங்கிருந்தேன். ஆனால்…திரும்பி வரவில்லை…நான் இந்த இராபோஜன நேரத்தில் இங்கிருக்கமாட்டேன். அடுத்த ஞாயிறு இரவு இராபோஜனம் இருக்குமா? [“ஆம்.”] நான் எப்பொழுதுமே அதில் பங்குகொள்ள விரும்புகிறேன், புரிகிறதா/ ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 5 [சகோதரன் நெவில், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே?” என்கிறார்.—ஆசி.] ஆம். [சகோதரி எடித் அவர்களுடைய பிறந்த நாளை நீங்கள் அறிவிப்பீர்களா? அடுத்த வெள்ளிக் கிழமை இரவு நாங்கள் அங்கே ஒரு சிறு கூட்டமாக கூடப்போகிறோம்.”] நல்லது, அது அருமையாயிருக்கும். சகோதரி எடித் ரைட் ஒரு நாள் இளையவளாய் இருக்கிறாள். அவள்…அவர்கள் அடுத்த வெள்ளி இரவு அவளுடைய வீட்டில் அங்கே ஒரு சிறு கூட்டமாக கூடப்போகிறார்கள். நல்லது. எவ்வளவு அருமையாயிருக்கும். சரி. சபைமக்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனரா? [“யார் வேண்டுமானாலும்.”] சபையோர் சகோதரி எடித் அவர்களுடைய பிறந்த நாளினுடைய…அழைக்கப்பட்டிருக்கின்றனர். அவள் ஏறக்குறைய பதினெட்டு வயதாய் இருப்பாள்; அது சரியா, சகோதரி எடித்? 6 நான் ஏறக்குறைய அன்றொரு நாள் கூறியது போன்றே, நான், “உங்களுக்குத் தெரியும், நான் இருபத்தைந்து வயதினைக் கடந்துவிட்டேன்” என்றேன். அப்பொழுது ஒரு நபர் சுற்றும் முற்றும் பார்த்து, “அப்படியா?” என்றார். 7 அதற்கு நான், “என்னுடைய இரண்டாம் முறை” என்றேன். 8 [யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே,” என்கிறார்—ஆசி.] எப்பொழுது? முப்பத்தியொன்பதாயிருக்கும். என்னே, அது சாத்தியமாக தென்படவில்லையே, அது தென்படுகிறதா? முப்பத்தி ஒன்பது. நான் எப்பொழுதுமே அவளை ஒரு சிறு பெண் என்றே குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏனென்றால் எனக்கு முதலில் எடித்தை தெரிந்திருந்தபோது, அப்பொழுது எடித்திற்கு…நான் யூகிக்கிறேன், எனக்கு முதலில் உன்னை தெரிந்திருந்தபோது, உனக்கு கிட்டத்தட்ட இருபத்திற்கு அதிகமாக, அதாவது இருபத்தைந்து, ஒருகால் இருபத்தெட்டு வயதாயிருந்திருக்கலாம் என்றே நான் யூகிக்கிறேன். 9 நீங்கள் பாருங்கள், நான் கிட்டத்தட்ட முப்பத்தியொரு வருடங்களாக பிரசங்கித்து வருகிறேன் என்று நான் நினைக்கிறேன். ஆகையால் நான் பிரசங்கிக்க துவங்கினது முதற்கொண்டு நான் உங்களை அறிவேன் என்று நான் யூகிக்கிறேன். ரைட் குடும்பத்தினர். ஆகையால் நான் அந்த ஜனங்களை அறிந்திருப்பதற்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவர்கள் நிச்சயமாகவே என்னுடைய வாழ்க்கையில் அகத்தூண்டுதலாய் இருந்து வந்துள்ளனர். 10 ரைட் குடும்பத்தினர் நித்தியத்திற்குள் கடந்து சென்றிந்தாலும், நான் அவர்களோடு வசித்துக் கொண்டிருக்கையில், அங்கே அந்த மலைப்பகுதியில் தேவன் செய்துள்ள மகத்தான காரியங்களைக் குறித்து நினைக்கும் போது, என்னுடைய தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தாமல் என்னால் அந்த இடத்தைக் கடந்து செல்ல முடியாதே! ஓ, என்னே! அங்கேதான், ஓ, ஒவ்வொரு காரியமும் அங்கே சம்பவித்திருந்தது. ஜார்ஜி கார்ட்டருக்காக கர்த்தருடைய தூதன் வருகை தந்ததை நான் அங்கே கண்டிருக்கிறேன். அவர் என்னை அன்றிரவு அந்த மலையின் மேல் அந்த விஷக்கொடி படர்ந்த இடத்தண்டை வழி நடத்தினபோது, அது சம்பவித்திருந்தது. அதன்பின்னர் அவர் என்னை அங்கே தரிசனத்தில் சந்தித்து, இலையுதிர் காலத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல புதரிலிருந்து பிரகாசித்தார். அவர்கள்…ஓ, என்னே, அநேகக் காரியங்கள் சம்பவித்திருக்கின்றன. 11 சகோதரன் ரைட் மரணத்திற்கேதுவாய்ப் படுத்துக்கிடந்தபோது, எல்லா மருத்துவர்களுமே கடந்து போய்விட்டனர். அவருடைய சபை அங்கத்தினர்கள் அங்கு இருந்து கொண்டு, “போய் உன்னுடைய தெய்வீக சுகமளிப்பவரை இப்பொழுது அழைத்துக் கொண்டு வா” என்று அவரிடத்தில் கூறிக்கொண்டிருந்தனர். 12 அப்பொழுது நான் மலையின் மேல் அமர்ந்து அவருக்காக நான்கு நாட்களாக அழுது ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கர்த்தர் ஒரு தரிசனத்தில் பேசி, “அவரை பரியாசம் செய்து கொண்டிருக்கிற நபரை அவர் அடக்கம் செய்வார் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று போய் அவரிடத்தில் கூறு” என்றார். அவர் அவ்வாறு அடக்கம் செய்தார். அது உண்மை. அந்த எல்லாக் காரியங்களுமே நடந்தன. 13 அதன்பின்னர் அங்குதான் முதன் முறையாக சபையின் சரித்திரத்தில் அவர் அந்த அணில்களைக் குறித்துப் பேசி சிருஷ்டித்ததைக் கண்டேன். அதுமட்டுமன்றி சகோதரி ஹேட்டி எந்த காரியத்தை விரும்பிக் கேட்டாலும், அது என்னவாயிருந்தாலும், பொருட்படுத்தாமல், பணமோ அல்லது எந்தக் காரியமாயிருந்தாலும், “அது இப்பொழுதே உன்னுடைய மடியில் வைக்கப்படும்” என்றார். அப்பொழுது அவளோ தன்னுடைய இரண்டு பயன்களின் ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொண்டாள். உடனே தேவன் அவர்களை அவளுக்குக் கொடுத்தார். அங்கே மலையின் மேல் அநேக காரியங்கள் சம்பவித்திருக்கின்றன. தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக என்பதே என்னுடைய ஜெபமாய் உள்ளது. 14 சிறுமி சாரோன் ரோஸ், சிறுமி சாரோன் ரோஸ் டால்டன் இங்கே சுகவீகமாயிருக்கிறாள் என்று கூறினர். சாரோன் ரோஸ் எங்கேயிருக்கிறாள்?…அவன் இருக்கிறாளா? சற்றுமுன் வெளியே சென்றுவிட்டாள். உ—ஊ. சரி, நாம் செய்யப் போவது… 15 [ஒரு சகோதரன் சகோதரன் பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார்—ஆசி.] என்னக் கூறுகிறீர்? [அந்த சகோதரன் மீண்டும் பேசுகிறார்] நல்லது, இப்பொழுது என்ன செய்ய உள்ளோம் என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் அவர்களுக்காக இப்பொழுது ஜெபிப்போமாக. 16 காரணம், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்குக் கூறுவேன். நான் சென்றடைய முடிந்தவுடனே, நான் செல்ல வேண்டிய, நான் கென்டக்கிக்கு சென்றடைய வேண்டும். நான் செல்ல வேண்டியது…நூற்றைம்பது மைல்களாயிருக்குமா என்று எனக்குத் தெரியாது. அது கென்டக்கியில் உள்ள பிரீடிங் என்ற இடமாய் உள்ளது. அது எவ்வளவு தூரம் என்பதைக் குறித்து எனக்கு ஒன்றுமேத் தெரியவில்லை. நீங்கள் டர்னிப்பைக் வழியாகச் சென்று, அதன்பின்னர் ஏறக்குறைய அதே தூரம் அல்லது இன்னும் சற்று தூரம் கூடுதலாகப் போய், அதிலிருந்து சகோதரன் பீலர் அவர்களுடைய இடத்திற்கு அருகில் சென்று, அங்கிருந்து மற்றொரு பட்டிணத்தில் என்னுடைய பாட்டனார் கட்டின ஒரு சிறு சபைக்கு செல்ல வேண்டும். நான் அந்த சிறிய மெத்தோடிஸ்டு சபையில் இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிரசங்கித்தேன். 17 இந்த பெண்மணியை அங்குதான் அடக்கம் செய்ய வேண்டும். அவள் ஒரு மருத்துவச்சியாயிருந்தாள். அவள் திடீரென்று மரித்துப் போனாள், அவளுடைய கடைசி வேண்டுகோள் அவளுடைய சவ அடக்கத்தின்போது நான் பிரசங்கிக்க வேண்டும் என்பதாயிருந்தது. ஆகையால் என்னுடைய ஜனங்களில் சிலர் நேற்றைய தினம் வந்து, நான் அவளை அடக்கம் செய்ய செல்வேனா என்று கேட்டனர், எனவே என்னால் அவர்களை திருப்பி அனுப்பிட முடியவில்லை, அவளுடைய கணவன் அங்கு அமர்ந்து, “அதுவே அவளுடைய கடைசி வேண்டுகோளாய் இருந்தது” என்று கூறி அழுது கொண்டிருந்தார். ஆகையால் அது கடினமாயிருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நான், “நான் சபைக்கு செல்ல வேண்டும். பின்னர் அங்குள்ள சபையோரை காண வேண்டும். அதன்பின்னர் அவர்களையும் கூட அழைத்துச் செல்வேன்” என்றேன். ஆகையால் நான் ஒருவிதமாக துரிதமாக செல்ல வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். 18 இப்பொழுது அவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில், நான் நினைக்கிறேன், சகோதரன் டால்டன்…[யாரோ ஒருவர், அவர் வைத்திருந்த குழந்தையோடு, “கழிவறைக்கு சென்றுள்ளார்” என்கிறார்.—ஆசி.] ஓ, பரவாயில்லை, சரி. அதாவது சற்று…நாங்கள் ஒரு நிமிடம் சற்றுக் காத்திருப்போம். 19 நீங்கள் சிறுமி ஜானிஸை இங்கே மேலே கொண்டு வாருங்கள். வேறு எவரேனும் வந்து, ஜெபித்துக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்பினாலும் சரி. நாங்கள்… 20 ஜானிஸ், நீ எப்படி இருக்கிறாய்? என்னே, இதோ—இங்கு ஒரு அருமையான பெண்மணி இருக்கிறாள். இங்கே வாருங்கள். அவள் மிகவும் அழகாயிருப்பதற்கான காரணமென்னவெனில், இது என்னுடைய சகோதரியினுடைய குழந்தையாயுள்ளது. நான் என்ன கூறுகிறேன் என்பதை ஜனங்கள் கேட்கும்படிக்கு நான் இங்கு கிட்டவந்து திருப்பிக் கூற விரும்புகிறேன். இப்பொழுது இந்த ஆசைக்குரிய சிறுமி, அவள் ஒரு ஆரோக்கியமான தாயையும், ஒரு ஆரோக்கியமான தந்தையையும் உடையவளாயிருக்கிறாள், ஆனால் ஏதோக் காரியம் இந்தக் குழந்தைக்கு சம்பவித்தது. அவள் இனிமையாய், உண்மையாகவே இனிமையாயும், சிறியதாயும், மெலிந்துமுள்ளாள். அவள் முடிந்தளவு இனிமையாயிருக்கிறாள் என்றவாறே நான் நினைக்கிறேன் என்பதை உண்மையாகவே நீங்கள் அறிவீர்கள். ஆனாலும் எப்பொழுதுமே இந்தக் குழந்தையோடு ஏதோக்காரியம் தவறாயுள்ளது. சாத்தான் இந்தக் குழந்தையை எடுத்துக்கொள்ள முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறான். ஒருகால் தேவன் தம்முடைய கரத்தை இந்தக் குழந்தையின் மீது வைத்திருக்கலாம். பார்த்தீர்களா? நம்மால் அதை கவனிக்க முடியும், நீங்கள் சாத்தான் கிரியை செய்வதை கவனிக்கும்போது, அதாவது, சற்று கவனித்துப் பாருங்கள். அங்கு எங்கோ ஏதோ ஒரு காரியம் இருக்கிறது. இப்பொழுது அவள் ஒரு சில நாட்களாகவே சுகவீனமாயிருந்து வருகிறாள். 21 நான் அங்கு செல்லவில்லை, ஏனென்றால் அவள் சுகமடைந்துவிட்டாளா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. நான் பிளாரிடோவுக்கு சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது. 22 ஆனால் அவளுக்கு ஜீரம் அதிகமாயிருக்கிறது, சகோதரியே, அது உண்மைதானே? அவளுக்கு மிக மோசமான ஜீரம் வந்துள்ளது, கிட்டத்தட்ட நூற்று…[யாரோ ஒருவர், “மூன்று” என்கிறார்.—ஆசி.] நூற்று மூன்று, அது ஐந்து பாகை அளவு ஜீரத்தை உண்டாக்குகிறது. மருத்துவர்களுக்கோ அது என்னவென்றே தெரியவில்லை. அது ஒரு கீல் வாத ஜீரம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது கீல் வாதா ஜூரமாயிருக்குமானால், அவளுடைய மாமா அதனால் மரித்ததுபோல, அது அவளுடைய இருதயத்தை ஒரு பயங்கரமான நிலமைக்குள்ளாக்கிவிடும். ஆனால் நான் இயேசு கிறிஸ்துவிற்காக இந்த குழந்தையின் ஜீவனை உரிமை கோரப்போகிறேன். பார்த்தீர்களா? 23 தாவீதைக் குறித்து நீங்கள் அறிவீர்கள், நான் அதை இதற்கு முன்பு இங்கே ஒரு முறை கூறியிருக்கிறது போல, தாவீது சவுலினிடத்தில் கூறினான், அவன் கூறினான்…இராட்சன் கோலியாத்தோடு சண்டையிட சவுல் ஒரு போர் கவசத்தையும், ஒரு ஈட்டியையும் தாவீதிற்கு தர விரும்பினான். அப்பொழுது தாவீது, “எனக்கு—எனக்கு—எனக்கு இந்தக் காரியங்களைக் குறித்து ஒன்றுமேத் தெரியாது” என்று கூறினான். மேலும் அவன், “ஆனால் இந்த கவனை எடுத்துக்கொள்ளட்டும், நான் அதில் என்ன நிரூபித்துள்ளேன் என்று கூறட்டும். உங்களுக்குப் புரிகிறதா?” என்று கேட்டான். அவன், “ஒரு சிங்கம் வந்து, என் தகப்பனுடைய ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. நான் இந்த கவணைக்கொண்டு அதனைப் பின்தொடர்ந்து சென்று, நான் அதனைக் கொன்றேன். பின்னர் நான் அந்த ஆட்டை திரும்ப மந்தைக்கு கொண்டு வந்தேன்” என்றான். 24 இப்பொழுது, இவைகளும் கூட ஆடுகளாயிருக்கின்றன; ஆட்டுக்குட்டிகளாய், ஆடுகளாய், தேவனுடைய ஆடுகளாய் உள்ளன. இப்பொழுது நாம் தேவனுடைய சபையாயிருக்கின்ற காரணத்தால் அவைகளைத் திரும்பிக் கொண்டு வரும்படி இந்தக் காலையில் நாம் அவைகளைப் பின் தொடர்ந்து செல்வோமாக. இப்பொழுதோ மருத்துவர்க்கு அந்த குழந்தைக்காக என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. 25 சகோதரன் எட் அவர்களுடைய சிறு பெண் பிள்ளையும் கூட ஒரு விதமாக காச நோய் சார்ந்த ஈளையால் பீடிக்கப்பட்ட நிலைமையில் அல்லது ஏதோ ஒன்றினால் முற்றியுள்ளது என்று நான் நினைக்கிறேன். 26 நல்லது. இயேசு இதைக் கூறினார் என்று நான் விசுவாசிக்கிறேன்: “நான் உங்களுக்கு இராஜ்ஜியத்திற்குரிய திறவுகோல்களைத் தருகிறேன். பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்” என்றார். நாம் அதை நம்முடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறோம். இப்பொழுது நாம் ஜெபிக்கையில், நம்முடைய முழு இருதயத்தோடு அதை விசுவாசிக்கும்படிக்கு தேவன் நமக்கு விசுவாசத்தை அருளுவாராக. 27 எங்கள் பரலோகப் பிதாவே, நான் இங்கே இந்த வெப்பர் குடும்பத்தினுடைய சிறிய மென்மையான, இனிமையான, மிருதுவான, இனிமை வாய்ந்த மலரினைப் பிடித்துள்ளேன். மருத்துவர்கள், அவர்கள் உண்மையுள்ளவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் இந்தக் குழந்தையோடுள்ள காரியம் என்ன என்று எப்படி கண்டறிய முயற்ச்சிக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்துள்ள எல்லாவற்றோடும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் அதைக் கண்டறிய முடியவில்லை. நான் அவளுடைய கரத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறேன். அவள் எந்த கீல்வாத நோய்க் காய்ச்சலையும் உடையவளாயில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். அப்படியிருந்திருந்தால் நீர் எனக்குச் சொல்வீர் என்றே நான் விசுவாசிக்கிறேன். அது சாத்தான் இந்த குழந்தையினுடைய ஜீவனை சுற்றிக்கொண்டிருக்க முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறான் என்றே நான் நம்புகிறேன். நாங்கள் அவளை இந்தக் காலை தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக உரிமைக் கோரிக் கொண்டிருக்கிறோம். 28 மானிட ஜீவியத்தின் சத்துருவாகிய உன்னை, சர்வ வல்லமையுள்ள தேவனின் சத்துருவாகிய உன்னை, இந்தக் குழந்தையினிடத்திலிருந்து உன்னை துரத்தும்படிக்கு இந்தக் குழந்தையின் சார்பில் நான் வருகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீ இந்த சிறு குழந்தையை விட்டுப் போ. நீ மருத்துவர்களிடத்தில் தப்பித்துச் செல்லலாம், ஆனால் உன்னால் தேவனிடத்தில் தப்பித்துச் செல்ல முடியாது. இந்தக் குழந்தையினுடைய சரீரத்தில் உள்ள உன்னைத் தாக்கும்படி இந்த விசுவாசமுள்ள ஜெபம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சரியாக இலக்கை நோக்கி குறி வைக்கப்பட்டுள்ளது. எனவே அது நீ எங்கு மறைந்திருக்கிறாயோ, அந்த முக்கியமான இடத்தைத் தாக்கும். அப்பொழுது நீ வெளிப்படுத்தப்பட்டு, வெளியேக் கொண்டுவரப்படுவாய். அந்தக் குழந்தை குணமடைந்து ஜீவிக்கும், ஏனென்றால் நாங்கள் அவளை அவளுடைய சுகமளித்தலுக்காக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அளிக்கிறோம். ஆமென். 29 டெலோரஸ், நான் அதைக் குறித்து ஒரு இம்மியேனும் கவலைப்படமாட்டேன். ஆம். ஜானிஸ் சரியாகிவிடப் போகிறாள். அவ்வளவு தான். 30 அடுத்தப்படியாக நமக்கு இங்கு ஒரு சிறு டால்டன் இருக்கிறாள். அதோ தேனே என்ன ஒரு இனிமையான குட்டிப் பெண்! என்னே, நீங்கள் இவ்வளவு பருமனாய் இருக்கிறீர்களே! [சகோதரன் பிரான்ஹாம் சிரிக்கிறார்—ஆசி.] அந்த ஆசைக்குரிய சிறுமி, உம்மையாகவே நீல நிறக் கண்களோடும், கறுப்பு முடியோடும் ஒரு குட்டி அயர்லாந்து நாட்டுக்கார பெண் போன்றே காணப்படுகிறாளல்லவா? அவளுடைய சிறு நுரையீரலில் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவளுடைய தொண்டையில் காசநோய்ப் போன்றது முற்றியுள்ளது. 31 ஓ, கர்த்தாவே, ஒரு சிங்கமும், ஒரு கரடியும் தன்னுடிய தகப்பனுடைய ஆட்டுக்குட்டிகளில் ஒன்றை கவ்விச் சென்றபோது, தாவீது அவைகளைப் பின் தொடர்ந்து சென்றான். அவனால் அந்த சிங்கத்தையும், அந்தக் கரடியையும் ஜெயங்கொள்ள முடிந்தது. நாங்கள் இந்தக் காலையில் (தாவீதைப் போல) விசுவாசிகளாயிருக்கின்றபடியால், வானங்களையும், பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனிடத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தக் குழந்தைக்காக வருகிறோம். 32 சாத்தானே, நீ இந்த குழந்தையை அல்லற்படுத்தியிருக்கிறாய், ஆனால் நீ அவளை இப்பொழுது அவிழ்த்துவிட வேண்டியதாயுள்ளது, ஏனென்றால் அந்தக் குழந்தை சுகமடையும்படிக்கு, நீ அந்தக் குழந்தையை போகவிடும்படிக்கு நாங்கள் உனக்கு கட்டளையிடுகிறோம். சாத்தானே, நான் உன்னைக் கடிந்துகொள்கிறேன்; உன்னுடைய எல்லா வல்லமைகளும் அழிக்கப்பட்டு, உன் மேல் ஜெயங்கொண்ட தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டு நான் உனக்கு கட்டளையிடுகிறேன். உனக்கு எவ்வித வல்லமைகளும் கிடையாது. அவருடைய நாமத்தில் நாங்கள் உன்னைத் துரத்த வேண்டும் என்று இந்த சுவிசேஷத்தின் மூலம் எங்களுக்கு கட்டளையிட்ட தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசத்தைக் கொண்டு நான் உன்மேல் ஜெயங்கொள்கிறேன். இது கிறிஸ்துவினால் கொடுக்கப்பட்ட ஒரு கட்டளையாயுள்ளது. எனவே நீ அவளை விட்டுப் போ. ஏனென்றால் இந்தக் குழந்தையை விட்டுப் போகும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் உனக்கு கட்டளையிடுகிறோம். அவள் சுகமாயிருப்பாள். 33 சகோதரி டால்டன் அவர்களே, நீங்கள் கொஞ்சம் கூட சந்தேகப்பட வேண்டாம். அதைக் குறித்து நீங்கள் இனி ஒருபோதும் கவலைப்பட வேண்டாம். தேவன் அவ்வண்ணமாய் கூறினார், அது அதனைத் தீர்த்து வைக்கிறது. 34 இந்த குட்டி நபர் யார்? [யாரோ ஒருவர், “லைசா வில்சன். அவளுக்கு ஒரு சதை வளர்ச்சி உள்ளது” என்கிறார்.—ஆசி.] ஓ, அவளுடைய கண்ணின் மேல் ஒரு சதை வளர்ச்சிக் காணப்படுகிறது. இப்பொழுது அவள் ஏறக்குறைய ஒரு வாலிபப் பெண்மணியாய் இருக்கிறாள். எனவே என்னால் அவளைத் தூக்க முடியுமா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவள் மிகவும் அழகாயிருக்கிறாள். அவளுடையை பெயர் வில்சன். லீலா, லீலாவா? [“லைசா.”] லைசா வில்சன். அவள் ஒரு அழகான குட்டிப் பெண்ணாயிருக்கிறாளல்லவா? அவளுடைய கண்ணில் அவளுக்கு ஒரு சதை வளர்ச்சி உள்ளது. இருக்கட்டும், இயேசு அந்த சதை வளர்ச்சிகளைக் குணப்படுத்துகிறார். அவர் குணப்படுத்துகிறாரல்லாவா? [“அவர் நிச்சயம் குணப்படுத்துகிறாரே!”] அது மரிக்க வேண்டும். [“அது கேடுவிளைவிக்கிறதல்லதானே?”] பரவயில்லை, அது—அது சற்று ஒரு தடித்த கட்டியாயுள்ளது, அது தளர்வுற்றுவிட்டது, அது எந்த வேரையும் உடையதாயிருக்கவில்லை…?…[“இருந்தாலும் அது இப்பொழுது வளர்ந்துகொண்டிருக்கிறது.”] நாம் ஜெபம் செய்வோமாக. 35 ஓ, கர்த்தாவே, நாங்கள் இந்த ஆசைக்குரிய சிறுமியை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உம்மிடத்தில் கொண்டு வந்து, தேவனுடைய சமுகத்தில் ஒரு களங்கமில்லாத குழந்தையாகவே அவளைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். பிசாசானவன் அவளுக்கு இந்தப் பொல்லாங்கைச் செய்துள்ளான். அவனால் முடிந்தால் அவன் அதனோடு அவளுடைய கண்ணைப் பறிக்கவுள்ளான். ஆனால் அவன் உமக்கு நிகாரனவன் அல்ல. 36 சாத்தானே உன் மீதும், நீ ஜனங்கள் மீது வைத்துள்ள உன்னுடைய எல்லா இன்னல்களையும் ஜெயங்கொண்டவரான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் உனக்கு கட்டளையிடுகிறோம். நீ இந்தக் குழந்தையை விட்டுப் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதனால் கொடுக்கப்பட்ட கட்டளையைக் கொண்டு அவருடைய நாமத்தில் நாங்கள் உனக்கு கட்டளையிடுகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினூடாக அவள் குணமடைவளாக. ஆமென். 37 சிறுமி லைசா, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் இனி ஒருபோதும் சந்தேகப்படவேமாட்டான். அது குணமாகிவிடும் என்று அப்படியே விசுவாசிக்கிறேன். 38 சரி, சகோதரி புரூஸ். இப்பொழுது நீங்கள் விரும்பினால், இங்கே நின்று கொண்டிருக்கிற இந்த பெண்களாகிய நீங்கள் அப்படியே இங்கு சற்று அருகில் நெருங்கி வாருங்கள், அப்பொழுது ஜனங்கள் உள்ளே வரமுடியும். சகோதரன் நெவில் நீங்கள் இங்கு வந்து, நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு எண்ணெய் பூசுங்கள். [சகோதரன் நெவில் ஜனங்களுக்கு எண்ணெய் பூசி, “இயேசுவின் நாமத்தில் அல்லேலூயா!” என்று கூறுகிறார்.—ஆசி.] [ஒரு சகோதரி, “என்னுடைய மகளுக்கு பதிலாக நான் நிற்க விரும்புகிறேன்” என்கிறாள்.—ஆசி.] உங்களுடைய மகளின் ஸ்தானத்தில். [“அந்த மகள் என்னுடைய உறவினருக்காக நிற்கிறாள்.”] உங்களுடைய உறவினரின் ஸ்தானத்தில். உறவினர்; மகள். சகோதரியே, உங்களுக்கு என்ன? [ஒரு சகோதரரி, “என் மகன்…?…தேவண்டை விடுவிக்கப்பட வேண்டும்.”—ஆசி.] இந்த அறிக்கைகள் ஜனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. 39 உண்மையாகவே நம்முடைய சகோதரி இங்கே முடமாயிருக்கிறாள். நான் அதைக் காண்கிறேன். அது மூட்டு வீட்ட வலியாய் உள்ளது, சகோதரியே, அது தானே? [யாரோ ஒருவர், “ஒரு உடைந்த இடுப்பு, மற்றும் ஒரு பக்கவாதம்” என்கிறார்.—ஆசி.] ஒரு உடைந்த இடுப்பு மற்றும் பக்கவாதம் தாக்கியுள்ளது. 40 இங்குள்ள இந்த பெண்மணிக்கு அவருடைய தலைக்குப் பின்புறத்தில் யாரோ ஒருவருடைய கரம் அதை அழுத்துவது போன்று ஒரு அழுத்தம் உண்டாயிருக்கிறது. 41 சகோதரி புரூஸ் தன்னுடைய காலை காயப்படுத்திக்கொண்டார். அவளும் கூட…[சகோதரி புரூஸ் சகோதரன் பிரான்ஹாமிடத்தில் பேசுகிறார்—ஆசி.] அவள் இன்னமும் மருத்துவமனையில் இருக்கிறாள். [“நான் அனுப்பிவிடப்பட்டேன்…?…”] நீங்கள் விழுந்தீர்களா அல்லது வேறேதாவதா? [“நான் தானியங்கி படிகட்டிலிருந்து தள்ளப்பட்டேன்…?…”] அது சபையில் இங்குள்ள நம்முடைய சகோதரிகளில் ஒருவள். அவள் தானே இயங்கும் படிகட்டுகளிலிருந்து தள்ளப்பட்டாள். எனவே அவள் உண்மையாகவே மருத்துவமனையில் இருக்கிறாள். அது உடைந்துவிட்டதா? [சகோதரி புரூஸ் பதிலுரைக்கிறார்] ஓ, தசைப்பற்றை இயக்கும் தசை நார்கள் மற்றும் இரத்தக் குழாய்கள் முதலியன. அடுத்தபடியாக அவள் நேசிக்கின்ற யாரோ ஒருவருக்காக நின்று கொண்டிருக்கிறாள். 42 இங்கே இந்த மூன்று பெண்மணிகளுமே தாங்கள் நேசிக்கின்றவர்களுக்காகவே நின்று கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் ஜெபிக்கும்போது, நாம் அதை இப்பொழுது தெரிந்து கொள்வோம். இப்பொழுது நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 43 ஓ கர்த்தராகிய இயேசுவே, இந்த விண்ணப்பங்கள் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றன. வேதம், “உங்களுடைய விண்ணப்பங்களை பரிசுத்தவான்களுடைய சபையில் தெரியப்படுத்துங்கள்” என்று உரைத்துள்ளது. இதோ அவர்கள் தங்களுடைய அன்பார்ந்தவர்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களில் சிலர் கடுமையான நோயுற்றும், சிலர் மனோரீதியான நோயுற்று, ஜீவனுள்ள தேவன் ஒருவர் உண்டு என்பதையும், இன்னும் மற்ற நிபந்தனைகளையும் மறுதலிக்கிறவர்களாயிருக்கிறார்கள். எங்களுடைய சகோதரி இங்கே ஒரு சுளுக்குற்ற கால்வீக்கத்தோடு மிக மோசமான நிலையில் இங்கே மருத்துவமனையிலிருந்து இந்தக் காலையில் புறப்பட்டுச் சென்றாள். ஒரு சகோதரி தன்னுடைய தலையின் பின்பக்கத்தில் ஒரு அழுத்தத்தை உடையவளாயிருக்கிறாள். ஒரு சகோதரி ஒரு உடைந்துபோன இடுப்போடும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுமிருக்கிறாள். கர்த்தாவே அவர்கள் எல்லோரும் இங்கிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய விண்ணபங்களைத் தெரிவித்துக் கொண்டிருப்பதோடு, பரிசுத்த ஆவியைச் சுட்டிக் காட்டுகிற எண்ணெய்யை தங்களுடைய தலையில் பிரகாசிக்கும்படி பூசியிருப்பதோடு தேவனுடைய பீடத்திற்கு முன்பாக நிற்கிறார்கள். இயேசு கிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையைங் குறித்து நான் பெற்றுள்ள எளிமையான அறிவில் நின்று அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். 44 தேவனே, நான் என்னுடைய கரங்களை அவர்கள் மீது வைக்கும்போது, அவர்களுடைய விண்ணப்பங்கள் அவர்களுக்கு பதில் அளிக்கப்படுவதாக. ஓ தேவனே, இயேசுவின் நாமத்தில் அதை அருளும். பிதாவே எங்களுடைய சகோதரி கெர்ட்டிக்கு இயேசுவின் நாமத்தில் அவ்வண்ணமே ஆவதாக. கர்த்தாவே சகோதரி புரூஸ் அவர்களுக்கும் கூட, அவளுடைய முழங்கால் மற்றும் அவளுடைய மூட்டுகளுக்கான விண்ணப்பமும் அவ்வண்ணமே அருளப்படுவதாக. எங்களுடைய சகோதரியின் தலையின் பின்பக்கத்தில்லுள்ள அந்த நிலைமைக்கும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவ்வண்ணமே அருளப்படுவதாக. அவள் அதிலிருந்து விடுவிக்கப்படுவாளாக. அவளுடைய கழுத்தின் பின்பக்கத்திலிருந்து சாத்தான் தன்னுடைய கரங்களை எடுப்பானாக. அதை அருளும். எங்களுடைய சகோதரி பக்கவாதத்தினால் செயலிழந்தும் உடைந்துபோன இடுப்பினை உடையவளாயுமிருக்கிறாள். 45 கர்த்தாவே, இவர்களில் சிலர் மிகவும் அற்பமானவர்களாயும், அவர்களில் சிலர் மிகவும் மகத்தானவர்களாயும் தென்படலாம், ஆனால் உமக்கு அவர்களில் மிகவும் சிறியவர்கள் அல்லது மிகப் பெரியவர்கள் என்று எவருமேக் கிடையாது. நீர் எல்லோருக்கும் தேவனாயிருக்கிறீர். கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் சந்தேகத்தின் வல்லமைகளை முறித்து, அல்லது தொல்லையின் எந்தக் காரியத்தையும் முறித்துப் போட்டு, அவர்களை விடுவிக்கும்படி விசுவாச ஜெபத்தைக் கொண்டு நான் ஜெபிக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களுடைய விடுதலையை அவர்களுக்கு அருளுகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டதைச் சரியாக பெற்றுக்கொள்வார்களாக. இந்த சபையானது ஜெபத்தில் உம்முடைய சரீரத்தின் ஒரு பாகமாயிருக்கின்றபடியால் நாங்கள் அவர்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விடுவிக்கிறோம். அவர்கள் அதை இப்பொழுதே உம்முடைய மகிமைக்காக பெற்றுக்கொள்வார்களாக. ஆமென். 46 தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக, இப்பொழுதே அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். போய், உங்களுடைய சுகமளித்தல்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். 47 இப்பொழுது, நம்முடைய சிந்தைகளில் சந்தேகமேக் கிடையாது, இருக்கிறதா? ஒரு சந்தேகமுமில்லை. தேவன் அதைச் செய்யப்போகிறாரா? நீங்கள் ஒவ்வொருவரும் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] தேவன் அதைச் செய்யப்போகிறார். ஒவ்வொரு…அவர் எந்தக் காரியத்தையுமே செய்யாமல் விட்டுவிடப்போவதில்லை. நாம் அவர் செய்யும்படி கேட்டுக்கொண்டதையே அவர் சரியாகச் செய்யப் போகிறார். காரணம் அவரால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாமல், தேவனாய் நிலைத்திருக்க முடியாது; பாருங்கள். நாம் சந்தேகப்படவில்லையென்றால், அவர் அதை நமக்கு அருளுவார். 48 இப்பொழுது உண்மையாகவே ஜெபம் தேவைப்படுகிற யாரோ ஒருவருக்காக ஜெபிக்க மறந்துவிடாதீர்கள். அது யார் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியுமா? அது எனக்குத்தான். ஆம், ஜெபம் தேவைப்படுகிற ஒருவன் நான் தான். இப்பொழுது பிளவில் நிற்கிறேன். மேலும் கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் மற்றும் ஓக்லஹாமா மற்றுமுள்ள பல்வேறுபட்ட இடங்களினூடாக ஒரு பெரிய நீண்ட தொடர் கூட்டங்களுக்குச் செல்கிறேன். ஜனங்கள் கனடாவிலிருந்தும் மற்றுமுள்ள ஒவ்வொரு இடத்திலிருந்தும் வந்து கொண்டிருப்பார்கள். நான் ஊழியக்காரர்களின் வேறுபாடுகளோடும், கருத்துக்களோடும், பிசாசின் வல்லமைகளோடும் பிளவில் நிற்க வேண்டும். முடிவின் நேரமோ நெருங்குகிறது. 49 அன்றொரு நாள் யாரோ ஒருவர் என்னுடைய வீட்டிற்கு வாருங்கள் என்றார். அது ஜெர்மானியிலிருந்து ஆகாய விமானத்தின் மூலம் இங்கு வந்த ஒரு பெண்மணியும், மற்றும் இன்னின்ன இடத்திலிருந்து வந்த மற்றொரு நபராயுமிருந்தது. கர்த்தர் அவர்களை வரும்படிக் கூறியிருந்தாராம். அவர்கள் இதற்கு, அதற்கு என மற்றொருவரும் கூட வந்திருந்தார். யாரோ ஒருவர் தெருவின் குறுக்கே வந்து, “நீர் எப்படி அவ்வாறு தொடர்ந்து செயல்படுகிறீர்?” என்று கேட்டார். பார்த்தீர்களா? அதற்கு நான், “ஓ, அது அவருடைய கிருபையாயிருக்கிறது” என்றேன். ஆமென். 50 அப்பொழுது நான் உடனே ஆகாய விமானத்தில் ஏறி, முழு இரவும் கலிபோர்னியாவிற்கு இல்லை அரிசோனாவிற்கு இல்லை பிளாரிடாவுக்கு பயணிக்க வேண்டியதாயிருந்தது. திரும்பி வந்தபோது ஒரு புயலில் சிக்கிக் கொண்டோம். பிசாசு எங்களை வீழ்த்த முயன்றான் என்பதை நீங்கள் அறிவீர்கள். கர்த்தரோ எங்களை உள்ளே அழைத்து வந்தார். அதன்பின்னர் அடுத்த நாள் காலை, அதாவது நேற்றைய தினம் ஒரு ஊழியக்காரரின் அவசர நிலைமைக்காக நான் கலிபோர்னியாவில் உள்ள பேக்கர்ஸ்பீல்டு என்ற இடத்திற்கு போக வேண்டியதாயிருந்தது. அது சற்றுமுன்…என்னால் அதைச் செய்ய முடியாமற் போயிற்று; அவ்வளவு தான். பாருங்கள், அதன்பின்னர் நான் யாரோ ஒருவரிடத்திற்கு சென்று, பின்னர் நான் அங்கிருந்து எங்கே செல்ல வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது. உங்களுக்குப் புரிகிறதா? அது, இதோ இந்த ஒன்று, இந்த ஒன்று, இந்த ஒன்று, இந்த ஒன்று என்ற விதமாய் இருக்கும். நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன்பின்னர் எந்த ஒன்று? மேலும் நீங்கள் அவர்கள் எல்லோரையும் காணவில்லையென்றால், அது யாரோ ஒருவரைப் புண்படுத்துகிறது. உங்களுக்குப் புரிகிறதா? உங்களால் அவர்கள் எல்லோரையுமே பார்க்க முடியாது. ஆகையால் நீங்கள் அப்படியே காத்திருக்க வேண்டும், நீங்கள் வழி நடத்தப்படுவதை உணரும் விதத்தை அறிந்து, அதன்பின்னரே செல்ல வேண்டும். 51 நம்முடைய மேய்ப்பரைக் குறித்து ஒரு நல்ல வாழ்த்துரையைக் கூற வேண்டுமென்று விரும்பினேன். கடந்த இரவு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நான் சகோதரன் உட் மற்றும் சார்லி இன்னும் மற்றவர்களுக்காக நள்ளிரவில் செய்தியை அறிவித்தேன். ஒரு மரிக்கும் தருவாயிலிருந்த பெண்மணி அங்குப்படுத்துக்கொண்டு மரித்துக் கொண்டிருக்க, அவளுடைய சகோதரிகளும் இன்னும் மற்றவர்களும் அங்கிருந்தனர். அப்பொழுது அவள் சிறிது நேரம் சுய உணர்வின்றி இருந்து, பின்னர் திடீரென்று விழித்தெழுந்து கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டாள். நான் அங்கே பிளாரிடாவில் பாவியான மற்றொரு மனிதனை கர்த்தராகிய இயேசுவினிடத்திற்கு வழி நடத்த வேண்டியதாயிற்று. இரவின் எல்லா நேரத்திலுமே ஒவ்வொரு காரியத்திற்கும், நெருக்கடி நிலைகளின் பேரில் நீங்கள்—நீங்கள் சில நேரத்தை அறிந்து கொள்ள ஒரு ஊழியக்காரரை துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய மேய்ப்பர் மருத்துவமனைக்கு வந்தபோது, அவர் எப்படி ஜனங்களண்டை வருகை புரிந்து, வியாதியஸ்தருக்காக ஜெபித்து, கடமையின் பாதையில் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்ற அருமையான கருத்துரைகளை அவரைக் குறித்துக் கேள்விப்பட்டேன். ஒரு கர்த்தருடைய ஊழியக்காரனாய், கடமையின் பாதையில் உண்மையாயிருந்து கொண்டு இந்த சிறிய மந்தையின் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதற்காக நான்—நான் மிகவும் பாராட்டுகிறேன். நீங்கள் பாராட்டுகிறதில்லை…நீங்கள் அவரை பாராட்டுகிறீர்கள், நிச்சயமாகவே நீங்கள் பாராட்டுகிறீர்கள், ஆனால் நாம்… ஒரு உண்மையுள்ள கர்த்தருடைய ஊழியக்காரனுக்கு, நீங்கள் பாருங்கள், நாம் அதை வெளிப்படுத்தி பாராட்டக் கூடிய ஏதோ ஒரு வழி உண்டு. 52 அண்மையில் சாண்டகுவாவில் நடைபெற்ற நம்முடைய கடைசி கூட்டத்தில் யாரோ ஒருவர் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் எப்படி அதைப் போன்று தொடர்ந்து செயல்படுகிறீர்கள்?” என்று கேட்டார். 53 அதற்கு நான், “இங்குள்ள ஜீன் கோட், பேட் டெய்லர் மற்றும் இந்த ஒரு கூட்ட நபர்கள் நான் அந்த கூட்டங்களில் ஒன்றில் இருக்கும்போது, அவர்கள் முகங்குப்புற விழுந்து, பல நாட்கள் உபவாசித்து சாப்பிடமால் இருந்து, எனக்கான ஒவ்வொரு காரியத்திற்க்காகவும் ஜெபிக்கிறார்கள்” என்று கூறினேன். அது தான் என்னைத் தொடர்ந்து செயல்படச் செய்கிறது. புரிகிறதா? அதுதான் பெலனாயுள்ளது. அந்த ஒத்தாசை கர்த்தரிடத்திலிருந்து வருகிறது. சகோதரன் டால்டன், ஓ, அப்படியே அவர்களில் அநேகர், அநேக நண்பர்களும் உபவாசித்து, ஜெபித்து, தங்களுடைய உணவு மற்ற காரியங்களை ஏற்க மறுத்து உபவாசித்து, ஜெபிக்கிறார்கள். 54 இப்பொழுது மிகவும் பின்னால் உள்ள சகோதரன் ஜீன் ஒலிப்பதிவு செய்ய ஆயத்தமாயிருந்தால், இப்பொழுது நான்…சகோதரன் நெவில் சற்று நேரம் கழித்து ஆராதனைகளை தொடர்ந்து நடத்துவார். நான் சற்று நேரம் மாத்திரம் பேச விரும்புகிறேன். 55 இப்பொழுது தேனே எடித் உன்னுடைய பிறந்த நாள் விருந்துக் கூட்டம் வெள்ளிக் கிழமை உள்ளது என்று கேள்விப்பட்டபடியால், கூடுமானவரை நான் திரும்பி வர இயலும், அந்த நேரத்தில் ஓக்லஹாமாவிலிருந்து திரும்பி வர முடிந்தால், நான் வர முடிந்தால் ஒரு கால் வெள்ளிக்கிழமை இரவு அங்கிருப்பேன். 56 இப்பொழுது நாங்கள் வெளியே சென்றிருக்கும்போது, நீங்கள் எல்லோரும் எங்களுக்காக ஜெபியுங்கள். வேதம் கூறியுள்ளதுபோல, “நாம் பிரிந்திருக்கையில், கர்த்தர் தாமே உங்களுக்கும் எனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்.” நாம் மீண்டும் சந்திக்கும் வரை நம்மால் முடிந்தளவு அவருடைய ஊழியத்தை மிகச் சிறந்த முறையில் செய்யும்படி ஜீவிக்க அவர் பாதுகாத்து, உங்களை ஆசீர்வதிப்பதோடு, என்னையும் பாதுகாத்து, ஆசீர்வதித்து, நம்மிருவருக்கும் உதவி செய்வாராக. நான் சத்துருவை சந்திக்கும்படி வெளியே ஊழியக் களத்தில் இருக்கையில், நான் உங்களுடைய ஜெபங்களையே சார்ந்திருப்பேன். ஆகையால் நீங்கள் எங்களுக்காக ஜெபியுங்கள். ஊழியஞ் செய்கிற சகோதரர்களாகிய நீங்கள் எல்லோருமே, சகோதரன் யூம்ஸ், சகோதரன் பீலர், மற்றும் இங்குள்ள உங்களில் அநேகர் எனக்காக ஜெபியுங்கள். நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். 57 இப்பொழுது, நாங்கள் பரிசுத்த யோவானின் புத்தகம் 4-ம் அதிகாரத்திற்கு திருப்ப விரும்புகிறோம். நான் இந்தக் காலையில் கர்த்தருக்குச் சித்தமானால், “ஜீவனுள்ள தேவனின் தவறாத உண்மைகள்” என்று அழைக்கப்படும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன் 58 நான் பரிசுத்த யோவன் 4-ம் அதிகாரத்தில் 14-ம் வசனத்திலிருந்து 23-ம் வசனம் உட்பட வாசிக்க விரும்புகிறேன். இப்பொழுது இயேசு கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயினிடத்தில் பேசுகிற ஒரு உரையாடலின் பேரிலான ஒரு காட்சியைப் படிக்கத் துவங்கிக் கொண்டிருக்கிறோம். பரிசுத்த யோவான் 4-ம் அதிகாரம், 14-ம் வசனம் துவங்கி 23-ம் வசனம் உட்பட வாசிக்க விரும்புகிறோம். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது: நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீருற்றாயிருக்கும் என்றார். 59 இப்பொழுது ஆங்கிலத்தில் நித்தியம் என்பதற்கு கூறப்பட்டுள்ள everlasting என்ற வார்த்தை உண்மையாகவே அங்கு சரியாக பொருள்படவில்லை. நீங்கள் ஜேம்ஸ் அரசனின் ஆங்கில வேதாகமத்தை வைத்திருப்பீர்களேயானால், அதில் everlasting என்று உள்ள அந்த வார்த்தையின் மேல் ஒரு ஆங்கில எழுத்து போடப்பட்டு, அதன் நடுப்பக்க குறிப்பில் அதற்கு eternal life என்று ஆங்கிலத்தில், அதாவது நித்திய ஜீவன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். மூலப் பதிப்போ, “to Eternal Life” நித்திய ஜீவனுக்கு என்றே கூறுகிறது. ஆங்கிலத்தில் Everlasting என்ற பதம் குறிப்பிட்ட கால அளவைக் குறிக்கிறது. ஆனால் Eternal என்ற ஆங்கிலப்பதம் என்றென்றைக்குமாய் என்று பொருள்படுகிறது. …நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகமலும், நான் இங்கே மொண்டுகொள்ளவராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தர வேண்டும் என்றாள். இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார். அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது. நீங்கள் அறியாதைதைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படைப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 60 நசரேயனாகிய இயேசுவின் நாட்களில், அவர் பூமியின் மேல் இங்கே மாம்சத்தில் நடக்கும்போது, தன்னுடைய நாளில் இருந்த ஜனங்கள் தங்களுக்கு விடுதலையைக் கொண்டுவரும் ஒரு மார்க்கத்தைத் தேடிக் கொண்டிருந்ததை அவர் கண்டறிந்தார். அவர்கள் தங்களுடைய எல்லா பொல்லாங்குகளிலிருந்தும், தங்களுடைய சத்துருக்களிலிருந்தும் அவர்களை விடுவிக்கும் ஒரு மார்க்கத்தையே விரும்பினார். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கான ஒவ்வொரு சவாலையும் கிறிஸ்தவ மார்க்கம் சந்தித்தது. அவர்களுக்கு தேவைப்பட்டிருந்த ஒவ்வொரு காரியத்தையும், அவர்கள் கேட்டுக் கொண்டதற்கான ஒவ்வொரு காரியத்தையும் கிறிஸ்தவ மார்க்கமானது சந்தித்தது. அது அவர்களுடைய தேவைகள் ஒவ்வொன்றிற்கும் சவாலிட்டது, ஆனால் அவர்களோ அதை ஏற்றுக் கொள்ள மனதில்லாதிருந்தனர். 61 அது ஏறக்குறைய இன்றைக்கும் அதேக் காரியமாய் உள்ளது. அப்பொழுது இருந்தவிதமாகவே ஜனங்கள் இன்றைக்கும் இருப்பதை நாம் கண்டறிகிறோம். அவர்களுக்காக ஏதோ ஒரு காரியத்தைச் செய்யும் ஒரு மார்க்கத்தையேத் தேடுகிறாரர்கள். அவர்களுக்கு ஒரு உண்மையைக் கொண்டு வரும் ஒரு மார்க்கத்தையேத் தேடுகிறார்கள். மெய்யான, உண்மையான கிறிஸ்தவமார்க்கம் அந்த சவால்கள் ஒவ்வொன்றையும் சந்திக்கிறது, ஆனாலும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு அது தேவைப்படுகிறதில்லை. இன்றைய ஜனங்களின் சுபாவம் அவ்வாறே உள்ளது. நான் மறுபடியும் பிறந்த சபையைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கவில்லை. நான் தேசத்தைக் குறித்தும், நாடு முழுவதிலும் உள்ளதையேப் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு அது தேவைப்படுகிறதாய்த் தென்படுகிறதில்லை. 62 உங்களுக்கு ஏதாவது ஒரு காரியம் வேண்டுமாயின், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளும் வரையில் உங்களால் இளைபாற முடியாது. இயேசு, “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” என்று மலைப்பிரசங்கத்தில் கூறியுள்ளார். அவர்கள் பசிதாகமுள்ளவர்களாயிருந்தால் நலமாயிருக்குமே! 63 ஆனால் நாமோ இன்றைக்கு உண்மையாகவே ஜனங்களுக்கு தேவைப்படுகிற ஒரு காரியத்தைக் கொடுக்க முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறதில்லை. அவர்களுக்கு அது தேவைப்படுகிறதில்லை. ஜனங்களுடைய மனப்பான்மை மாறியுள்ளது. அதே சமயத்தில் இன்றைக்கு உலகத்திற்கு சரியாக தேவைப்படுகிறது என்னவெனில், அவர்கள் பயந்துகொண்டும், அச்சமடைந்து கொண்டும், விடுவிக்கப்பட வேண்டுமென்றிருக்கிற காரியங்களிலிருந்து விடுதலையளிக்கூடிய இயேசு கிறிஸ்துவின் மார்க்கமேயாகும். 64 அவர் இங்கே பூமியின் மேலிருந்த நாட்களில் அவர்கள் நசரேயனாகிய இயேசுவை ஏற்றுக்கொள்ள முடியாமலும், அவரை விசுவாசிக்க முடியாமலும், அவர்களுடைய விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியாமலுமிருந்ததற்கான காரணங்களில் ஒன்று என்னவெனில் அது அவர்களுக்கு மிகவும் வழக்கத்திற்கு மாறானதாயிருந்தது. அது அவ்வாறேயிருந்தது…அவரோ அவர்களுக்கு விடுதலையைக் கொண்டு வந்தார். தேவன் அவர்களுக்கு விடுதலையை அனுப்பியிருந்தார். அதுவோ அவர்களுக்கு மிகவும் வழக்கத்திற்கு மாறானதாயிருந்தது, எனவே அவர்கள்—அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால் அது அவர்கள் வழக்கமாக ஏற்றுக்கொள்கிற மார்க்க முறையில் வரவில்லை. 65 அது இன்றைக்கும் அதேவிதமாக மிகவும் முதன்மையான நிலைமைகளில் இருந்துகொண்டு அதைக் குறித்த இணையான காரியங்களைக் காணும்படிக்கு மிகவும் கவர்ந்திழுத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய ஜனங்களோ, “சிவந்த சமுத்திரத்தை பிளந்த தேவன் எங்கே? குஷ்டரோகிகளை குணமாக்கின தேவன் எங்கே? சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கின தேவன் எங்கே?” என்று கேட்டு வியப்புறுகிறார்கள். அதே சமயத்தில் அது சமீபத்தில் உள்ள போது, அவர்களோ அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறதில்லை. ஏன்? அதேக் காரணத்தையே அவர்கள் உடையவர்களாயிருந்தனர். அது மிகவும் முரண்பாடாய் உள்ளது. அது வழக்கத்திற்கு மாறானதாய் உள்ளது. அவர்கள், அவர்கள் விரும்புவது… 66 அந்த நாளில் அவர் கோட்பாடுகளை அல்லது வேறு ஏதோ முறையைக் கொண்டு வந்திருந்து, அவர்கள் ஏதோ சமய சடங்காச்சாரங்களினூடாக செல்ல வேண்டியிருந்திருந்தால், அப்பொழுது அவர்கள் அதை மகிழ்ச்சியாய் ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் அவர் அதைச் செய்த விதத்தில் அதை அவர் கொண்டு வந்த காரணத்தால், அவர் அதைக் கொண்டு வந்த முறைமையில் ஜனங்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. 67 இன்றைக்கும் அது அதேவிதமாக, சரியாக அதேவிதமாக உள்ளது. அவர்கள்—அவர்களுக்கு அது வேண்டும், ஆனால் தேவன் அதைக் கொண்டுவருகிற நிலையில் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறதில்லை. அதைக் கொண்டுவர தேவன் கொண்டுள்ள ஒரே வழி அதுவேயாகும். நம்முடைய சிந்தனையின் மட்டத்திற்கு நாம் தேவனைக் கொண்டு வர முடியாது. நாம் அவருடைய சிந்தையின் மட்டத்திற்கு உயர்ந்து, அவரைச் சந்திக்க அவர் நமக்காக அருளின அடிப்படை ஆதாரங்களின பேரில் அவரை சந்திக்க வேண்டும். புரிகிறதா? அவர்களுக்கு விடுதலை வேண்டும். 68 அவர்கள் தங்களுடைய எல்லா ஸ்தாபன கோட்பாடுகளையும், பரிசேயர்களையும், சதுசேயர்களையும், ஏரோதியர்களையும், இன்னும் அதிகமான பல்வேறுபட்ட முறைமைகளையும், மார்க்க உட்பிரிவுகளையும் உடையவர்களாயிருந்தனர். ஒவ்வொருவருவரும், ஒரு பிரிவினர் உயிர்த்தெழுதல், தேவதூதன், ஆவி இல்லையென்று நம்பியிருந்தனர். மற்றொரு பிரிவினர் உயிர்த்தெழுதலும், தேவ தூதனும், ஆவியும் உண்டு என்று நம்பியிருந்தனர். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் உங்களுடைய கரங்களை கழுவ வேண்டும் என்றும், நீங்கள் அந்தவிதமாக செய்ய வேண்டும் என்பதிலும் ஒரு பிரிவினர் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். 69 அது இன்றைக்கு உள்ளது போன்றேயாகும். இப்பொழுது நாம் அந்தவிதமான ஒரு உபதேசத்தை உருவாக்க முடிந்து, கிறிஸ்து அந்தவிதமான ஒரு குறிப்பிட்ட காரியத்திற்குள் வர முடிந்தால், அப்பொழுது ஜனங்கள் அதை ஏற்றுக்கொள்ள மகிழ்ச்சியடைவர். 70 அவர் ஜனங்களை ஜீவிக்கும்படிக்குச் செய்ய, கிரியை நடப்பிக்க, தங்களுடைய நடத்தையையும், தங்களுடைய மனப்பான்மையையும் மாற்ற, அவர்களுடைய வழிகளை மாற்ற, அவர்களுடைய ஜீவியத்தை மாற்ற தம்முடைய உயிர்த்தெழுதலின் தம்முடைய வல்லமையில் வரும்போது, அவர்களோ அதனோடு எந்த சம்மந்தமும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. 71 அவர்கள் ஜீவிக்கின்ற விதமாக அவர்கள் ஜீவிக்க விரும்புகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் ஜீவித்து வந்துள்ள வாழ்க்கை முறையிலேயே தொடர்ந்து தரித்திருக்க விரும்புகிறார்கள். ஆனால் அதே சமயத்தில் மிகவும் பக்தியாய் இருக்கவும், ஒரு சபைக்குச் செல்லவும், அதில் ஒரு அங்கத்தினராயிருக்கவும் விரும்புகிறார்கள். அதாவது அவர்கள் ஞாயிறு காலையில் அல்லது என்ன நேரமாயிருந்தாலும் சபைக்குச் சென்று போதகரிடத்திலிருந்து பதினைந்து நிமிட நேர பிரசங்கத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள், பின்னர் அங்கிருந்து நடந்து சென்றுவிடுகின்றனர். இந்தவிதமாகவே வாரத்தில் ஒரு முறை தாங்கள் பெற்றுள்ள மார்க்கத்தை ஒருவிதமான அரைகுறை வழியில் திருப்திபடுத்துகின்றனர். அதன்பின்னர் அவர்கள் திரும்பிப்போய், அந்த வாரத்தின் மற்ற நாட்களில் அவர்கள் விரும்புகிற எந்தக் காரியத்தையும் செய்கிறார்கள். 72 இப்பொழுது தேவன் இந்த நாட்களில் என்ன செய்யப் போவதாயிருந்தார் என்பதை அவர் வாக்களித்திருந்தார். நான் எவரையும், எந்த ஊழியக்காரரையும், எங்கிருந்தாலும் சரி, தேவன் சபைக்கு அளித்த ஒரு வாக்குத்தத்தை, அவர்கள் செய்வதாக அவர் என்ன கூறினாரோ அதை செய்கிறார்களா என்று கேட்க விரும்புகிறேன். ஆனால் உண்மையான சபையோ இப்பொழுது அதை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு அது தேவைப்படுகிறதில்லை. அவர்கள் அதை விரும்புகிறதில்லை. 73 இயேசு மானிடர்களண்டைக்கு தேவனைக் கொண்டு வந்தார். தேவன் மானிடராக்கப்பட்டார். இயேசு பிறந்தபோது, தேவன் மனிதனோடும், மனிதனுக்குள்ளும் ஐக்கியங்கொள்ளும்படிக்கு, (என்னத்திற்கு?) அதாவது தேவன் என்னவாயிருக்கிறார் என்பதை மனிதனன்டைக் கொண்டுவர, சபை என்னவாயிருக்கிறது என்றல்ல; ஆனால் தேவன் என்னவாயிருக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படியான ஒரு நோக்கத்தை நிறைவேற்றி முடிக்கவே தேவன் மனிதனானார். தேவனை மனிதனுக்கு அளிக்கும்படிக்கே இயேசு வந்தார். மனிதன் அதை விரும்பவில்லை. 74 இறைக்கும் பரிசுத்த ஆவியானவர் அதே முறையில் தேவனை மனிதனுக்கு அளிக்க வருகிறார்; ஆனால் மனிதனோ சபைக்குச் செல்ல விரும்புகிறான். அது—அது—அது அவனுடைய—அவனுடைய—அவனுடைய சிந்தனையை மூழ்கடிக்கிறது. அவனால்—அவனால் அதன் ஆழத்தை கண்டறிய முடியாது. தேவன் அறிவாற்றலுள்ள கருத்தினால் அறியப்படுகிறதில்லை என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தேவன் புதியப் பிறப்பினால், பரிசுத்த ஆவியினால் அறியப்படுகிறாரேயன்றி, வேறெந்த வழியிலும் அறியப்படுகிறதில்லை. இயேசு, வேதம், “பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக் கூடாது” என்று தெளிவாக நமக்கு மேற்கோள் காட்டியுள்ளது. நீங்கள் ஒருபோதும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லையென்றால், அவர் கிறிஸ்து என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை, ஏனென்றால் அந்த ஒரே வழியிலே அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். 75 நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் நீங்கள் மனமாற்றமடைந்திருக்கவில்லை. வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. பேதுரு இரட்சிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, அசுத்த ஆவிகளை துரத்த, சுவிசேஷத்தை பிரசங்கிக்க அதிகாரம் அளிக்கப்பட்ட பிறகு, அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் அவன் குணப்படவில்லை என்று அவனிடத்தில் தெளிவாகக் கூறினார். அவர், “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என்றார். அதுவோ காட்டிக்கொடுக்கப்படும் இரவாய் இருந்தது. அப்பொழுது அவன் இன்னும் குணப்படாமலிருந்தான். எந்த மனிதனும் மாற்றமடைந்து, தனக்குத்தானே மரித்து, பரிசுத்த ஆவியானவர் அந்த நபருடைய கட்டுப்பாட்டை உடையவராயிருக்கும் வரையில் அவன் உண்மையாகவே மனமாற்றமடைந்திருக்கவில்லை. அவர்கள் அதைச் செய்ய விரும்புகிறதில்லை. 76 இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர்தாமே ஒரு நபரிடத்தில் தவறாயும், மற்றவரிடத்தில் சரியாக நடக்கவும் செய்யமாட்டார். அது ஒவ்வொரு நபரையும் அதனுடைய குணாதிசயத்திற்குள் வரும்படிச் செய்யும். பாருங்கள், ஏனென்றால் அது உங்களை வழி நடத்துகிற ஆவியாய் உள்ளது. அது உங்களை அதனுடைய சுபாவத்திற்கு கீழ்ப்படியும்படிக்கு கொண்டுவருகிறது. நீங்கள் அதை உங்களுடைய சுபாவத்திற்கு கீழ்படியும்படிக்கு கொண்டு வருகிறதில்லை. அது உங்களை அதனுடைய சுபாவத்திற்கு கீழ்ப்படியச் செய்கிறது. பரிசுத்த ஆவியானவர் உங்களை ஜீவிக்கச் செய்கிறார், அதை செய்ய விரும்புகிறார். ஓ, பரிசுத்த ஆவியானவர் உள்ளே வருகிறபோது, நீங்கள் எப்படியாய் உலகத்தின் காரியங்களை விட்டுவிட வாஞ்சிக்கிறீர்கள். அது எப்படியாய் உங்களை சுத்திகரித்து, உங்களைக் கழுவி, அவரைப் பின்பற்றும்படியான வாஞ்ச்சையை உங்களுக்குள் வைத்து, அதைக் குறித்து அதிகமாக பசிதாகம் கொள்ளச் செய்து உங்களையே நீராட்டுகிறது. அவர் உண்மைகளைக் கொண்டு வருகிறார். 77 இப்பொழுது, தேவன் மனுஷனை இங்கே வைத்தபோது, அவர்—அவர் கர்த்தராகிய இயேசுவின் நாட்களில், மனுஷனுக்கு தம்முடைய வல்லமைக்கான ஒரு உண்மையான சாலை வரைபடத்தை அளித்தார். 78 ஒரு சாலை வரபடமானது உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறுகிறது, நீங்கள் எந்த வழியாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்லுகிறது. நீங்கள் செல்ல வேண்டுமென்றால், நாங்கள் அடுத்த சில நாட்களில் புறப்பட்டுச் செல்லும் போது…நான் இந்த தேசத்தை அநேக முறை கடந்து சென்றுள்ளேன். என்னுடைய மனைவியும் நானும் இதைக் குறித்து வியப்படைந்துள்ளோம். கடந்த சில வருடங்களாகவே, நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்று யாராவது கேட்டால் என்னால் அதைக் குறிப்பிட்டு கூற முடியும். நீங்கள் இங்கிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் கலிபோர்னியாவிற்கு செல்கிற எந்த பாதையில் சென்றாலும், நீங்கள் போய் சேர்ந்துவிடலாம் என்று என்னால் உங்களுக்குக் கூறமுடியும். நான் அதை எந்த ஒரு நேரத்திலும் தவறவிட்டதாக எனக்குத் தெரியவில்லை. …அதாவது சில நேரங்களில் சரியாக என்னுடைய துவக்க நேரத்தை ஓட்டும் நேரத்தோடு கணக்கிட்டு சராசரி நேரத்திற்குள் சென்று விடுவேன். காரணம் நான் சற்று முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சென்று வந்துள்ளேன், நீங்கள் அதை அறிவீர்கள். 79 அந்தவிதமாகவே தேவன் தம்முடைய வார்த்தையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். நாம் அதை அறிவோமே! நாம் அதில் பயணித்துள்ளோம். நாம் அதை முயற்ச்சித்துள்ளோம். அது எங்கே வழி நடத்திச் செல்லுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது அவருடைய சாலை வரைபடம் அவருடைய வேதமாய் உள்ளது. வேதமே தேவனுடைய வல்லமைக்கு வழி நடத்திச் செல்லுகிற சாலை வரைபடமாய் உள்ளது. விசுவாசமே உங்களை வல்லமைக்கு வழி நடத்திச் செல்லுகிறது. வல்லமையோ வாக்குத்தத்தை உண்டாக்குகிறது. நமக்கு வல்லமையே தேவையாயிருக்கிறது. 80 இப்பொழுது சில தினங்களுக்கு முன் சகோதரி உட் அவர்களும், என்னுடைய மனைவியும், நானுமாக ஒரு அறையில் அமர்ந்து ஞானஸ்நானத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இங்கே நம்முடைய அநேக விலையேறப்பெற்ற சகோதரர்கள் இருக்கிறார்கள், தேவன் அவர்களுக்கு பரிசுத்த ஆவியைத் தந்ததற்காக நாம் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அங்கே பின்னால் அமர்ந்துள்ள சகோதரன் வில்லார்ட் காலின்ஸ் மற்றும் சகோதரன் இக்கர்சன் மற்றும் அவர்களுடைய மனைவிகளும் என்று கூட நான் நினைக்கிறேன், சகோதரன் சார்லி காக்ஸ் மற்றும் அவருடைய மனைவி மற்றும் அங்கே பின்னால் அமர்ந்துள்ள சகோதரன் மைக் ஈகன் இன்னும் ஓ, எத்தனையோ பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனர். அது நமக்கு மத்தியிலே பேசப்படத் துவங்கியுள்ளது. ஓ, அது நாம் ஆராயும்படிக்கு செல்லப் போகும், பசியாயும், தேவனுடைய உண்மைகளுக்காக நம்மை இழுக்கிற ஒரு இடத்திற்கும் செல்ல உயிர்ப்பிப்பதாக. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். 81 இப்பொழுது சாலை வரைபடம் நமக்கு எதைச் சுட்டிக் காட்டுகிறது? அவர்கள் அதை அறிந்து கொள்ள வேண்டும். இயேசுவே கூறினார், அவர் இங்கே பூமியில் இருந்த நாட்களில், அவர், “நீங்கள் மாயக்காரரே!” என்றார். அவர், “உதயமாகிறபோது செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? நீங்கள் என்னை அறிந்திருந்தால், நீங்கள் என் நாளையும் அறிந்திருப்பீர்களே” என்றார். 82 அவர் வரும்போது இந்தக் காரியங்கள் சம்பவிக்கும் என்று வேதம் கூறவில்லையா? அதைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைக்கவில்லையா? அதைக் குறித்து எரேமியா, எசேக்கியல் மற்றும் எல்லா சிறிய தீர்க்கதரிசிகளும் உரைத்திருக்கவில்லையா? ஒவ்வொரு காரியமும், அந்த சாலை வரைபடம் அந்த ஒரு சேருமிடத்தையே சரியாக சுட்டிக்காட்டுகிறதே! அவர் வந்தபோது, அவர்கள் தங்களுடைய சபைகளில் கோட்பாடுகளையும் மற்றக் காரியங்களையும் உடையவர்களாயிருந்தபடியால், அவர் என்னத்திற்காக வந்தார் என்பதையும், மனிதனுக்குள் தேவனைக் கொண்டு வருவதற்கும், மனிதனுக்குள் தேவனை உருவாக்குவதற்கும், அவர்களை மீண்டும் ஒன்று சேர்த்து இணைக்கவும் வந்த உண்மையைக் காண அவர்கள் தவறிப்போய்விட்டனர். 83 யோபுவும் கூட, அவனுடைய துயர நாட்களில், அவன், “ஓ, என்னால் அவரை மாத்திரம் காணமுடிந்தால்!” என்றான். வேறு வார்த்தைகளில் கூறினால், “நான் அவருடைய வீட்டிற்குச் சென்று, அவருடைய வாசலைத் தட்ட முடிந்தால் நலமாயிருக்குமே! எனக்காக பிளவில் நிற்கக் கூடிய ஒருவரை நான் கண்டறியக் கூடுமானால் நலமாயிருக்குமே!” என்றான். மேலும், “நான் பாவம் செய்திருக்கவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் இன்னமும் நான் நீதிமானாயிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். நான் எந்த ஒரு காரியத்தையும் செய்திருக்கவில்லை என்பதை நான் அறிவேன், ஏனென்றால் நான் தகனபலியின் பேரில் நின்றுகொண்டிருக்கிறேன்” என்றான். ஆனால் அவன் மெய்ம்மையில் குறைபாடோடிருந்தான். அவன் முறைமையை உடையவனாயிருந்தான், ஆனால் மெய்ம்மையில் குறைபாடு கொண்டிருந்தான். எனவே அவன், “ஓ, ஒரு பாவமுள்ள மனிதன் மேலும், ஒரு பரிசுத்த தேவன் மேலும் தம்முடைய கரங்களை வைக்கக் கூடிய ஒருவரை நான் கண்டறிய முடிந்து, அவனுக்கு மெய்ம்மைகளை கொண்டுவர முடிந்தால் நலமாயிருக்குமே!” என்றான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அமர்ந்து, தன்னுடைய பருக்களை தேய்த்து சுரண்டிக்கொண்டிருக்கையில் ஆவிக்குள்ளானபோது, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மீது வர, மின்னல்கள் மின்னிட, இடிகள் முழங்கிட, அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்!” என்று கூச்சலிட்டான். அங்குதான் உங்கள் மெய்ம்மையே உள்ளதே! “அவர் என்றோ ஒரு நாள் வருவார்.” ஏன்…முடியவில்லை…அங்கே முன்பிருந்த பண்டைய கோத்திரப் பிதாக்கள் அதற்காக எதிர் நோக்கியிருந்தனரே! 84 இயேசு, “நீங்கள் என்னை அறிந்திருந்தால், என்னுடைய நாளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றார். அவர் தேவனையும் மனிதனையும் ஒன்றாக இணைக்கவே வந்தார். அவர், அந்த ஒருவரே வந்தார். தூதன் அதை செய்திருக்க முடியாது. அவரைத் தவிர வேறு யாருமே அதை செய்திருக்க முடியாது. அவர் தேவனையும், மனிதனையும் ஒன்றாக்கவே வந்தார். 85 அவர், “நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்” என்றார். அவர் தேவனை மனிதனோடு ஒன்று சேர்க்கவே கொண்டு வந்தார். அங்கே மனிதன் தேவனுக்கு ஒரு உதவியாளனாக உண்டாக்கப்பட்டபோது, அவன் தானே ஒரு பூமிக்குரிய தேவனானான். அது உண்மை. ஆனால் அவன் பாவத்தின் மூலமாக தன்னுடைய மூல ஸ்தானத்தை இழந்து விட்டபோது, காளை மற்றும் வெள்ளாட்டுகடாவின் இரத்தமானது இந்தப் பாவத்திற்கான பாவ நிவிர்த்தியை செய்ய முடியவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்ததினால் அதைச் செய்ய முடிந்ததே! ஓ, எப்படியெனில்… 86 பாருங்கள், அவர், அவர் சாலை வரைபடத்தைக் காண்பிக்கிறார். அவர், அவர் அதை நிரூபித்தார். சாலை வரைபடமானது அதற்கு சரியாக வழி நடத்தினது. “நீங்கள் மோசேயை அறிந்திருந்தால், நீங்கள் என்னையும் கூட அறிந்திருப்பீர்களே! நீங்கள் வார்த்தையை அறிந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே!” 87 சாத்தான் அவரை சந்தித்தபோது, சாத்தான் அவருக்கு சுற்று வழியைக் காண்பிக்க முயன்றான். அவர் சாலைவரைபடத்தை உடையவராயிருந்தபோது, சாத்தான், “நீர் பாரும், இதோ இங்கே அது இதைக் கூறுகிறதே” என்று கூறினான். அப்பொழுது அவர், “ஆனால் இதுவும் கூட எழுதப்பட்டிருக்கிறதே…” என்றார். 88 ஓ, ஏராளமான பக்க வழிகள் உள்ளன, இது, அது, அல்லது மற்றது என, “ஓ, நான் இதைச் செய்யும் வரையில்.” அதுவல்ல இது. நீங்கள், நீங்கள் தேவனை ஒரு தனிப்பட்ட உறவுமுறையிலும், அனுபவத்திலும் கண்டறிய வேண்டும். நீங்கள் அதைப் பெற்றிருப்பதாக உரிமை கோரி, அதே சமயத்தில் இன்னமும் உலகத்திற்காக வாழ்ந்தால், அப்பொழுது ஏதோக்காரியம் தவறாயுள்ளது. பிசாசு தவறான வேதவாக்கியத்தின் பேரில் உங்களுக்கு பக்கவழியைக் காண்பித்திருக்கிறான். 89 நாம் சாலை வரைபடத்தை பின்பற்றுவோமானால், அப்பொழுது அது, “நெடுஞ்சாலையில் இன்ன—இன்ன இடத்தில் இங்கே திரும்பு” என்று கூறினால், அந்த விதமாகவே திரும்பி விடுங்கள். அப்போஸ்தலர் 2:38, “மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தால், அது இடப்பக்கம் திரும்பவில்லை; அதாவது நீங்கள் அந்த வழியாகவே திரும்ப வேண்டும். அது எப்படியிருந்தாலும் நான் கவலைப்படுகிறதில்லை, நீங்கள் அந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டும். அவர், “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்குமானது” என்று கூறியிருந்தால், அப்பொழுது அது கடந்த காலத்திற்கானது என்று பொருள்பட்டிருக்கவில்லை. “நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் யாவருக்கும்” என்றே அது கூறப்பட்டுள்ளதே! அது தேவனுடைய சாலை வரைபடமாயுள்ளது. நாம் அதைப் பின்பற்ற வேண்டும். சாலையோ குறிக்கப்பட்டுள்ளது. நீங்களோ, “நான் அதில் இருக்கிறேன் என்பதை நான் எப்படி அறிந்து கொள்வேன்?” என்று கேட்கலாம். 90 கர்த்தராகிய இயேசுவின் இரத்தந்தோய்ந்த அடிச்சுவடுகள் அந்த பாதையை உண்டுபண்ண, சீஷர்கள் அதன்மேல் அதே அஸ்திபாரத்தைப் போட்டனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நடத்தினார். அந்த சாலை வரைபடத்தை பின்பற்றுங்கள். 91 ஒரு சில இரவுகளுக்கு முன்னர், யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம் பகுத்தறிதறிந்து கூறும்போது முற்றிலும் சரியாயுள்ளார். ஆனால் அவருடைய வேதாந்த கருத்திற்கு வரும்போது, அவர் முற்றிலும் தவறாயிருக்கிறார்” என்றார். தீர்க்கதரிசி என்ற வார்த்தை “வார்தையின் தெய்வீக வியாக்கியானி” என்று பொருள்படுகிறது என்று வேதம் போதிக்கிறது என்பதை எந்த ஒரு நபரும் அறிவர். அந்த அடையாளங்கள் மாத்திரம் பெருகுகின்றன. போதகர்கள் போன்றவர்களால் வார்த்தையைப் போதிக்க முடியும். ஆனால் நீங்கள் இயற்கைக்கு மேம்பட்ட ஏதோ ஒன்றை, அது போன்ற தெய்வீகமானவை வருவதைக் காணும்போது, அந்தக் காரியம் மாத்திரமே அதை நிரூபிக்கிறது. அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. 92 நசரேயனாகிய இயேசு, அவர் பூமியின் மேல் இருந்த போது, ஜனங்கள் அவரை அநேக சமயங்களில் மீன்கள், அப்பங்கள் போன்றவற்றிற்காகப் பின் தொடர்ந்தனர். அவர்களால் அவரிடத்திலிருந்து அவைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவரும் அவர்களை அவ்வாறு பெற அனுமதித்தார். அவருடைய புகழானது ஒரு முறை உயரத் துவங்கினது. அதன்பின்னர் ஒருநாள் அவர் ஐயாயிரம் பேரைப் போஷித்தப் பிறகு திராளானக் கூட்டம் கடலின் மறுகரையில் அவரைச் சந்திக்கச் சென்றன. ஒரு கூட்டம் அவரோடு சேர்ந்துகொண்டு, அவரோடு பின் தொடர்ந்து வந்தது. அப்பொழுது அவர், “நீங்கள் ஏன் வந்தீர்கள்? அற்புதத்தின் நிமித்தமாக அல்ல, ஆனால், அப்பங்கள் மற்றும் மீன்களினிமித்தமாகவே, அந்தக் காரணத்தினால்தான் நீங்கள் வருகிறீர்கள்” என்றார். ஓ, அவர்களில் சிலர், உங்களுக்குத் தெரியுமா, அவர்கள்—அவர்கள் அவர் என்ன செய்தார் என்பதைப் போய்க் காணவில்லையென்றாலும், தாங்கள் ஏதோ ஒன்றை தவறவிட்டுவிடுவோம் என்று எண்ணினார்கள். அதை ஆழமாக அறிந்து கொண்டார்களா? இல்லை ஐயா? 93 அதன்பின்னர் இயேசு, அதே பரிசுத்த யோவான் 6-வது அதிகாரத்தில் சுவிசேஷத்தைக் கூறத் துவங்கினபோது, அவர்கள் அவரிடத்தில் இடறலடைந்தனர். அந்த நேரம் முதற்கொண்டு, அவருடைய புகழானது மங்கத் தொடங்கி, “அவர் அப்பொழுது அந்த புகழ் வாய்ந்த அதே ஒருவராய் இருக்கவில்லை.” 94 ஒரு தற்காலிக பிரசங்கியாரைப் போல அல்லது யாரோ ஒருவரைப் போல எண்ணி அவரை, “அவர்கள், ‘ஏன், இங்கே ஒரு நிமிடம் பொறும். நீர்—நீர் உம்முடைய பிரசங்கத்தினால் ஜனங்களை இடறலடைச் செய்து கொண்டிருக்கிறீர். நீர், நீர் அதைச் செய்யக் கூடாது’” என்றனர். இப்பொழுது ஒரு நவ நாகரீக பிரசங்கியாரோ, “ஓ, சரி, ஒருகால் சபைக் கோட்பாடு என்னைக் கூறுகிறது என்பதை நான் கவனிப்பது மேலானதாயிருக்கும். புரிகிறதா? ஒருகால் சபையானது அதைக் குறித்து என்னக் கூறுகிறது என்பதைக் காணும்படி நோக்கிப்பார்ப்பதே எனக்கு நலம், ஏனென்றால் அவர்கள் என்னை மாற்றிவிடுவார்கள்” என்று கூறுவார். 95 அதாவது நம்முடைய கர்த்தர் அவ்வாறு இருக்கவில்லை. நம்முடைய கர்த்தர் தேவனுடைய சித்தத்தைச் செய்ய மாத்திரமே வந்தாரே! அவர் வார்த்தையைப் பின்பற்றினார். தேவனை தனக்குள் கொண்டுள்ள எவருமே அதேவிதமாகவேப் பின்பற்றுவார். அவர் நின்றுவிட்டாரா? இல்லை ஐயா. அதே சமயத்தில் அவருடைய—அவருடைய புகழ் எல்லா நேரத்திலும் குறைய ஆரம்பித்துவிட்டது. அது முதல் அநேகர் அவரோடு பின் தொடர்ந்து செல்லவில்லை. அவர்கள் அவரித்திலிருந்து தூரமாய் விலகிச் சென்றனர். அதற்கு அடுத்த அதிகாரத்தில் இன்னும் அநேகர் விலகிச் சென்றனர். அடுத்த அதிகாரத்தில் இன்னும் அநேகர் விலகிப் போய்விட்டனர். அவர் எங்கேயிருந்தவர்? கல்வாரிக்கு செல்லும் பாதையிலே! ஆனால் அவர் எப்போதாதவது நின்றாரா? இல்லை ஐயா. அவர் ஒருபோதும் தேவனுடைய வார்த்தையோடு விட்டுக்கொடுத்து சமரசமாகவில்லை. அவர் நேராக நெருஞ்சாலையில் நடத்தப்பட்டார். அவர் சாலை வரைப்படத்தின்படியேச் சென்றார். அவர், அவருக்கு முன்பாக ஒரு பாதை அமைக்கப்பட்டிருந்தது, அந்த பாதையில் அவர் நடக்க வேண்டியதாயிருந்தது. 96 மறுபடியும் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கு முன்பாகவும் ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்தப் பாதைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். தேவன் அதற்கு வெளியே அடையாளக் குறியிடுகிறார். அது இரத்தத்தினால் அடையாளமிடப்படுகிறது. ஆவியானது எப்பொழுதுமே இரத்தத்தில் ஜீவிக்கிறது, ஏனென்றால் இரத்ததினூடாகவே ஜீவன் உண்டாகிறது; இரத்த உயிரணு ஜீவ உயிரனுவாயுள்ளது. அப்படியானால் நாம் அவரைப் பின்பற்ற வேண்டும், அந்த சாலை வரைபடமானது எப்படி நம்மை நடத்துகிறது என்றும், நாம் எந்த ஒரு வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையுமே அது காண்பிக்கிறது என்று நாம் காண்கிறோம். அது எப்பொழுதும் அந்தவிதமாகவே இருந்து வந்துள்ளது. அது நமக்காக தேவனால் அருளப்பட்ட வழியாய் உள்ளது. வார்த்தை தேவனால் அருளப்பட்ட வழியாய் உள்ளது. 97 ஒரு மனிதன் வேதவாக்கியத்தை புரிந்து கொள்கிற ஒரு இடத்திற்கு வரும்போது, புகழின் நிமித்தமாக, சில சபை இன்னலின் நிமித்தமாக, அவனுடைய ஜனங்களின் நிமித்தமாக அவன் அதை பிரசங்கிக்க அனுமதிக்கபடவில்லையென்றால், அப்பொழுது அந்த மனிதன் ஒருபோதும் தேவனோடு செல்லவேமாட்டான். அது என்னவாயிருந்தாலும் பொருட்படுத்தாமல், நீங்கள் திரும்பி வந்து வார்த்தையை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள், நீங்கள்—நீங்கள் எங்கோ உள்ள ஒரு மாற்றுப் பாதையிலிருந்து விலகிச் செல்லவில்லையென்றால், அப்பொழுது உளையான பாவ சேற்றிற்குள் மூழ்க்கிவிடுவீர்கள். நான் எந்த நபருக்கும் சவாலிடுகிறேன். 98 அங்குள்ள என்னுடைய நூலகத்தில் எனக்குத் தெரிந்த எல்லா பண்டைய சரித்திர புத்தகங்காளான நிசாயா பிதாக்களுக்கு முன்னர், ஜோஸிபஸ் என்பவர் எழுதிய பண்டைய புத்தகங்களையும், ஈசலப் என்பவருடைய இரு பாபிலோன்கள், ஃபாக்ஸ் என்பவருடைய இரத்த சாட்களின் புத்தகத்தையும், அநேக, அநேக மற்ற பண்டைய சரித்திர புத்தகங்களையும் நாங்கள் வைத்துள்ளோம். எந்த ஒரு நேரத்திலுமே சபையானது, அதனுடைய கோட்பாடுகளின் பேரில் நின்றுவிடக் கூடிய ஒரு நிலைமைக்கு எப்போதும் கொண்டுவரப்பட்டதேயில்லை, அதாவது தேவன் அதை மீண்டும் எழுப்பியிருந்தார். அவள் உளையான சேற்றிற்குள் அங்கே மூழ்கியிருந்தாள். அது உண்மை. அவள் அப்படியே ஒருபோதும் ஆவிக்குரிய பிரகாரமாக அழிந்து போய்விடவில்லை, அழிந்து போகவில்லை, அவள் அவ்வாறு ஒருபோதும் அழிந்து போகவும் மாட்டாள். அது தேவனுடைய திட்டமல்ல. 99 தேவனுடைய திட்டம் பரிசுத்த ஆவியாயுள்ளது. அது தேவனால் அருளப்பட்ட வழியின் காரியங்களைச் செய்தலாகும். இப்பொழுது இதைக் கவனியுங்கள். நோவாவின் நாட்களில்…தேவனுடைய திட்டம் எப்பொழுதுமே ஒரு துன்பபடக் கூடிய வழியாயுள்ளது. அந்தக் காரணத்தினால்தான் ஜனங்கள் அதை விரும்புகிறதில்லை. 100 நோவாவின் நாட்களில் அவர்கள் பக்தி மார்க்கத்தை உடையவர்களாயிருந்தனர். நாம் கிறிஸ்தவ மார்க்கத்தை உடையவர்களாயிருப்பது போன்று அவர்கள் அதை இரண்டாயிரம் ஆண்டுகளாக உடையவர்களாயிருந்தனர். இப்பொழுது உள்ளது போன்றே அப்பொழுதும் அங்கே விமர்சகர்கள் இருந்தனர். நோவாவின் நாட்களில் என்ன சம்பவித்தது? நோவா அந்த பேழையின் ஒரே வாசலில் நின்று, எந்த மானிட கற்பனைக்கும் முரண்பட்டதாயிருந்த பேழையைக் கட்டினான் என்பதை நாம் கண்டறிகிறோம். அப்பொழுது ஒருபோதும் மழை பெய்யாமலேயிருந்தது, ஆகாயத்தில் ஒரு மேகமும் இருக்கவில்லை. ஆனால் மழை பெய்யப்போவதாயிருந்தது என்று தேவன் கூறியிருந்தார். அது தேவனுடைய வார்த்தையாயிருந்தது. தேவனோ, “பேழையை ஆயத்தம்பண்ணு” என்று கூறியிருந்தார். நோவா பேழையை ஆயத்தம்பண்ணி, அந்த ஒரே வாசலில் நின்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்த்தான். அது மாத்திரமே சுவிசேஷத்திற்கான தீர்வாயிருந்தது. 101 இன்றைக்கு அது என்ன ஒரு மாதிரியாயுள்ளது! தேவனண்டை வழி நடத்துகிற ஒரு வாசல் உண்டு, அந்த வாசல் கிறிஸ்துவாயுள்ளது. கிறிஸ்து நமக்குள்ளே பரிசுத்த ஆவியாக ஜீவிக்கிறார். நாம் தேவனுடைய பேழையின் வாசலில், பரிசுத்த ஆவியின் வாசலில் நின்று, “இதுவே வழியாயுள்ளது” என்று பிரசங்கிக்க, அதே திட்ட வரைபடத்திற்கே மற்ற யாவரும் வருகின்றனர். 102 நோவா தேவனால் அருளப்பட்ட வழியாயிருந்தான். எகிப்திலிருந்து வெளிவந்த விடுதலையின் நாட்களில், மோசே தேவனுடைய வழியாய், பாருங்கள், ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஊழியத்தை உடையவனாய், ஒரு—ஒரு வழியாயிருந்தான். பாருங்கள், நோவா வித்தியாசமான ஏதோ ஒன்றை உடையவனாயிருந்தான். நோவா மற்ற எல்லோரிலும் வித்தியாசமானதாயிருந்த ஒரு மார்க்கத்தை உடையவனாயிருந்தான்; அவன் தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். ஜனங்கள் தேவனுடைய வார்த்தைக்கு பயன்படுத்தப்படவில்லை. அவர்கள் தங்களுடைய பிரமாணங்களை உடையவர்களாயிருந்தனர், அவர்கள் விரும்பியிருந்ததை உடையவர்களாயிருந்தனர். ஆகையால் அவர்கள் கோட்பாடுகளுக்கே செவிகொடுத்துக் கொண்டிருந்தனர், வார்த்தைக்கு அல்ல. ஆனால் நோவா வார்த்தையை உடையவனாயிருந்தான். 103 மோசே வார்த்தையை உடையவனாயிருந்தான். மற்றவர்கள் எதை உடையவர்களாயிருந்தாலும் பொருட்படுத்தாமல், மோசே கர்த்தர் உரைக்கிறதாவதை உடையவனாயிருந்தான். எது அதை நிரூபித்தது என்று பாருங்கள். அவர் அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்திருந்தார், ஒவ்வொரு அடையாளமும், அற்புதமும் ஒரு சத்தத்தை உடையதாயிருந்தது. இப்பொழுது, தேவன், “அவர்கள் முந்தின அடையாளத்தின் சத்தத்திற்கு செவி கொடுக்கவில்லையென்றால், அவர்கள் பிந்தின அடையாளத்தின் சத்தத்திற்கு செவிகொடுப்பார்கள்” என்று கூறியிருந்தார். 104 இப்பொழுது இன்றைக்கு ஜனங்கள், அவர்கள் இயேசுவின் நாட்களில் இருந்ததுபோலவே, இவர்களும் அற்புதத்தையே பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். “ஓ, அவர் சற்று வித்தியாசமான ஏதோ ஒரு சிறு காரியத்தைச் செய்யலாம். அது செய்யப்பட்டதை நான் காணவில்லை. அவரால் இந்த ஒன்றை பகுத்தறிய முடியுமா என்று நாம் பார்ப்போம். அவரால் அதைச் செய்ய முடியுமா என்று நாம் பார்ப்போம்.” நீங்கள் பாருங்கள், அந்தவிதமாகவே அவர் செய்கிறார். அவர்கள் வெறுமென அப்பத்துக்கும் மீனுக்காகவுமே பின் தொடர்ந்தனர். ஆனால் அது மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டியதற்கு வந்தபோது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அது உண்மை. அப்பொழுது அவர்கள் உங்களை கண்டனம் செய்கிறார்கள். 105 அப்பொழுதும் அவர்கள், “ஓ, நீர் இவைகளுக்கு முரணாக பிரசங்கிக்கிறீர்” என்று கூறுவதன் மூலம் அவர்கள் இயேசுவை கடிந்து கொண்டனர். அது அவரை நிறுத்திவிடவில்லை. அவர் தொடர்ந்து முன்னோக்கி சென்றார். 106 ஒரு பெரிய ஊழியக்காரர் அன்றொரு நாள் தன்னுடைய கரங்களை என்மீது வைத்து, “சகோதரன் பிரான்ஹாம், இந்த சபைகளில் இருந்து கொண்டிருக்கிற இந்த ஜனங்களுக்கு எதிராக எந்தக் காரியத்தையும் நீர் ஒருபோதும் கூறக் கூடாது என்று நான் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறேன்” என்றார். மேலும் அவர், “சகோதரன் பிரான்ஹாம், நீர் அவர்களை …நீர் அவர்கள் எல்லோரும் உம்மோடு கோபப்படுபடிச் செய்துவிடப் போகிறீர்” என்றார். 107 அப்பொழுது நான், “என்னுடைய உள்ளத்தின் ஆவியும், என் ஆத்துமாவும் அதற்கு எதிராக கூக்குரலிடும்போது, நான் அதை எப்படி தடுக்க முடியும்?” என்று கேட்டேன். அதற்கு அவரோ, “பரவாயில்லை, நான் அதற்கு எதிராக ஒன்றையும் கூறவில்லை” என்றார். 108 மேலும் நான், “உங்களால் முடியாது. நீங்கள் கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். நீர் அவர்களுடைய டாலர்களை பெற்றுக்கொள்ள வேண்டும். நான் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லையே” என்றேன். 109 எனக்குத் தேவையான ஒரே காரியம் தேவனாகிய கர்த்தரின் உயிர்த்தெழுதலின் வல்லமையேயாகும். நமக்குத் தேவையெல்லாம் பரிசுத்த ஆவியேயாகும். சத்தியத்தின் பேரில் நிற்க வேண்டும். எத்தனை ஸ்தாபனங்கள் அதற்கு எதிராகப் போனாலும் நான் கவலைப்படுகிறதில்லை, அது இன்னமும் தேவனுடைய வார்த்தையாய் உள்ளது. “வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. இந்த புஸ்தகத்தில் ஒருவன் எதையாகிலும் கூட்டினால் அல்லது இதிலிருந்து எடுத்துப் போட்டால், அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும்.” அது இருக்கிறவிதமாகவே, வரைபடம் அதை கூறுகிறவிதமாகவே நான் அதை விசுவாசிக்கிறேன். அதுவே இதுவாகும், தேவனுடைய வழியாயிற்றே! மோசே அடையாளங்களை உடையவனாயிருந்தான். அவன் தேவனுடைய ஊழியக்காரனாயிருந்தான் என்பதை அவர் நிரூபித்தார். 110 தேவன் எப்பொழுதுமே மனிதன் மூலமாக கிரியை செய்ய விரும்புகிறார். அது மனிதன் மூலமாக கிரியை செய்யும்படியான தேவனுடைய திட்டமாயுள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] தேவன் மனிதன் மூலமாக கிரியை செய்கிறார். அவர் பூமியிலே மனிதனை அவருடைய உதவியாளராக உண்டுபண்ணினார். அவர் மனிதனை தம்மைக்காட்டிலும் சற்று சிறிய ஒரு தேவனாக உண்டுபண்ணினார். 111 இப்பொழுது அண்மையில் நாம் ஆதியாகமம் 1:26—ஐக் குறித்துப் பார்த்து வந்த போதனையில், அவர் ஏல், ஏலா, ஏலோஹீம், எல்லாவற்றிற்கும் போதுமானவர், தன்னில்தானே ஜீவிக்கிறவர் என்பவராயிருந்தார் என்பதைப் பார்த்தோம். அப்பொழுது அவருக்குள் பிதாவினுடைய, குமாரனுடைய, பரிசுத்த ஆவியின் தன்மைகள் இருந்தன; மூன்று தேவர்கள் என்றல்ல, அந்த யுகங்களில் அவர் ஜீவிக்க வேண்டியதாய் அவருக்குள்ளிருந்த மூன்று உத்தியோகங்கள். அவர் ஒரு இரட்சகராயிருந்தார், அவர் ஒரு இராஜாவாயிருந்தார், அவர் ஒரு தேவனாயிருந்தார். இந்த எல்லாக் காரியங்களுமே வெளிக்காட்டப்பட்டன. அவை தேவனுடைய தன்மைகளாயிருந்தன, பாருங்கள், ஆனால் அது ஆதியில் அவருக்குள் இருந்தது. 112 தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் உண்டாக்கினபோது, அவர் அவனை தேவனிலும் சற்று குறைவானவனாகவே பூமியின் மேல் வைத்தார். இயேசு, “நீங்கள் தேவர்களாயிருக்கிறீர்கள் என்று உங்களுடைய வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? என்று கூறினபோது, அவரே அதை வலியுறுத்திக் கூறினார். தேவனுடைய வார்த்தை யாரிடத்திற்கு வந்ததோ அவர்களை தேவர்கள் என்று அவர்கள் அழைத்திருக்க,” அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்தனர். “நான் என்னை தேவனுடைய குமாரன் என்று கூறும்போது, நீங்கள் எப்படி என்னைக் கண்டணம் செய்ய முடியும்?” என்றார். அவரே கூறினார். புரிகிறதா? அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை, பாருங்கள். ஆனால் மனிதன் இங்கே பூமியின் மேல் ஆளுகை செய்யும்படி வைக்கப்பட்டான். அவர் ஒவ்வொரு காரியத்தையும் அவனுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தார். 113 ஆதாம் எதை இழந்திருந்தானோ, இயேசு அதைத் திரும்பளித்துவிட்டார் என்று அவரே நிரூபித்தார். அவர் இயற்கையை நிறுத்தினார். அவர் மரித்தோரை எழுப்பினார். அவர், அவர் ஒவ்வொரு காரியத்தையும் செய்திருந்தார். “உலகமானது இன்றைக்கு தவித்துக்கொண்டிருக்கிறது,” வேதமே, “தேவனுடைய புத்திரர வெளிப்படுவதற்காகவே” என்று கூறியுள்ளது. ஏனென்றால் தேவன் அந்தக் காரியங்களை உண்மையாக்க, மீண்டும் உண்மைகளுக்குள் தம்முடைய பிள்ளைகளைக் கொண்டு வர விரும்புகிறார். அது ஜனங்களை இடறச் செய்கிறது. 114 சாத்தானால் அவர்களிடத்திலிருந்து சத்தியத்தை விலக்க முடியவில்லையென்றாலும், சாத்தான் அவர்களிடத்திலிருந்து வெறித்தனத்தை உண்டாக்குகிறான்; அவர்களை இந்தப் பக்கத்திலும், அந்தப் பக்கத்திலும் தூக்கி எறிவதனால், அவர்கள் வேதப் பிரகாரமாயில்லாத இரத்தம், எண்ணெய், உணர்ச்சிவசப்படுதல்கள் போன்ற எல்லாவிதமானக் காரியங்களையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள். 115 ஆனால் வரைப்படத்திலேயே தரித்திருங்கள்! நெடுஞ்சாலையிலே தரித்திருங்கள். வேதவாக்கியத்தோடு தரித்திருங்கள். அதை விட்டுவிடாதீர்கள். அந்த காரணத்தினால்தான் மனிதன் வஞ்சிக்கப்படாதபடிக்கும், ஒரு பக்கமாகச் செல்லாமல் வார்த்தையில் தரித்திருக்கும்படிக்கே இயேசு வந்தார். மகத்தான பரிசுத்த பவுல், “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்,” என்றான். ஆம், ஐயா. 116 காரணம், சாத்தான் ஏதேன் தோட்டத்தில் ஒளியின் தூதனாக வந்து ஏவாளிடம் கூறினான். ஏன், அவன்—அவன் ஒரு போதும் மறுதலிக்கவில்லை, அவன், “ஓ, பரவாயில்லை, அதெல்லாம் சரிதான். ஓ, நிச்சயமாகவே, தேவன் அதைக் கூறியிருக்கிறார்; ஆனால், உனக்குத் தெரியுமா, நீ அதிக வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வாய்” என்றான். நாம் இன்றைக்கு அநேக ஏவாளின் வெளிச்சங்களைப் பெற்றுள்ளோம், சாத்தானின் வெளிச்சங்களையும், காரியங்களையும் பார்க்கிறோம். வேதம், “கடைசி நாளில், அதாவது, பிசாசும் தன்னை ஒளியின் தூதனாக வெளிப்படுத்துவான்” என்று உரைத்துள்ளது. இங்கே இந்த எல்லா கோட்பாடுகளும், ஸ்தாபனங்களும் மற்றும் இந்த எல்லா அர்த்தமற்றவைகளும் இருந்து வருகின்றன. அதில் பாதிகூட வேதப்பிரகாரமானதாய் இருக்கவில்லை. அது உண்மை. 117 நெடுஞ்சாலையில் தரித்திருங்கள். சாலை வரைபடத்தில் தரித்திருங்கள். சீஷர்கள் சென்ற பாதையில் செல்லுங்கள், அவர்கள் பிரசங்கித்த வார்த்தைக்குச் செல்லுங்கள். அதில் ஜீவியுங்கள்! “அது சத்தியம் என்பதை நான் அறிவேன்” என்று அதைக் குறித்து சாட்சி பகருங்கள். கடைசி நாட்களில் அடையாளங்கள், தேவன் மனிதனுக்குள் ஜீவிக்கிறார். அது தேவனுடைய திட்டமாயுள்ளது. 118 தேவன் நம்பக்கூடிய யாரோ ஒருவரை, அவர் நம்பிக்கைக் கொண்டிருக்க முடிந்த, தேவனில் நம்பிக்கை வைக்கக் கூடிய, அவரை விசுவாசிக்கக் கூடிய யாரோ ஒருவரை அவர் கண்டுபிடிக்க வேண்டியதாயுள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? [சபையோர், “ஆம்” என்கின்றனர்.—ஆசி.] நிச்சயமாக. தேவன் தம்முடைய நம்பிக்கையை வைக்கக்கூடிய யாரோ ஒருவரைக் கண்டறிய வேண்டியவராயிருக்கிறார். ஆகையால் அவர் தம்முடைய நம்பிக்கையையும், தம்முடைய வல்லமையையும் வைக்கக் கூடிய அப்படிப்பட்ட ஒரு மனிதனைக் கண்டறியும்போது, அப்படிப்பட்ட ஒரு மனிதன் பாதையைப் பின்பற்றி, சாலை வரைபடத்தில் தரித்திருந்து, பாருங்கள், அவன் வல்லமையான ஸ்தானத்திற்கு வரும் வரையில் தொடர்ந்து சரியாக செல்கிறான். விசுவாசம் அதற்கு அவனை வழி நடத்தும், ஏனென்றால் அவன் வார்த்தையில் விசுவாசத்தை வைத்துள்ளான். அது அவனை வாக்குத்தண்டைக்கு, வாக்குத்தத்தண்டைக்கு…வழி நடத்தும். அவர் வல்லமையண்டைக்கு, அவனை வழி நடத்துவார், வல்லமை அவனை வாக்குத்தத்தண்டை வழி நடத்தும். அப்பொழுது அவன் வாக்குத்தத்தத்தைப் பெற்று, வெளிப்படத் துவங்கும்போது, அது என்ன செய்கிறது? அது அவிசுவாச கண்களையும் வெதுவெதுப்பானவர்களையும், கோட்பாட்டை சேவிக்கும் சகோதரனையும் குருடாக்குகிறது. அது முற்றிலும் உண்மை. 119 அதைத்தான் அது அங்கே இயேசுவின் நாட்களில் செய்தது. அவர், “நான் வந்திராவிட்டால், நீங்கள் பாவத்தைக் குறித்து அறிந்திருக்கமாட்டீர்கள். ஆனால் இப்பொழுது நான் இங்கு இருக்கிறேன்…” என்றார். ஆமென்! “இப்பொழுது நான் இங்கு இருக்கிறேன், உங்களுக்கு எந்த சாக்குபோக்கும் கிடையாது.” 120 இன்றைக்கு தேவன் பரிசுத்த ஆவியை இந்தக் கடைசி நாட்களில் அனுப்புவார் என்றும், இந்தக் காரியங்கள் சம்பவிக்கும் என்று தம்முடைய வாக்குத்தத்தத்தை அவர் உண்டு பண்ணியிருந்தால், நீங்கள் அதை சந்தேகிக்கக் கூடும்; ஆனால் இப்பொழுது அவர் வந்து, அதை செய்து கொண்டிருக்கிறார், எனவே இந்த உலகிற்கு எவ்வித சாக்குபோக்கும் கிடையாது. அது பூமி முழுவதையும் நிரப்புமளவிற்கு தேசம் தேசமாக, ஒவ்வொரு இடம் இடமாக முழங்கப்பட்டுள்ளது. அது உண்மை. அவர்களுக்கு சாக்குபோக்கு இல்லை. தேவன் வந்து, அதைக் கொண்டுவராமலிருந்திருந்தால் அவர்கள் அதை அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் அவர் அதை இப்பொழுது நமக்கு கொண்டு வந்துள்ளார், ஆகவே அதனால் உண்மைகளில், வார்த்தையைப் பின்பற்றும் உண்மைகளில் இருக்கிறோம். சத்தியத்தைப் பின்பற்றுகிறோமே! அதில் தரித்திருக்கிறோமே! 121 “ஓ, நான் இங்கே பாப்டிஸ்டு சபைக்குச் செல்கிறேன்,” அவர்கள், “நாங்கள் சத்தியத்தை உடையவர்களாயிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். மெத்தோடிஸ்டுகள், “நாங்கள் சத்தியத்தை உடையவர்களாயிருக்கிறோம்” என்கிறார்கள். இப்பொழுது அது எந்த ஒன்று? நீங்கள் இருவரும் வித்தியாசமாயிருக்கிறபடியால், எந்த ஒருவர் சத்தியத்தை உடையவராயிருக்கிறார். ஏழாம் நாள் ஆசாரிப்புக்காரரிடத்திற்கு சென்றால், “நாங்கள் தான் சத்தியத்தை உடையவர்களாயிருக்கிறோம்” என்பார்கள். கிறிஸ்துவின் சபை என்ற ஸ்தாபனத்தண்டைச் சென்றால், “நாங்கள்தான் சத்தியத்தை உடையவர்களாயிருக்கிறோம்” என்பார்கள். 122 சரி, சத்தியத்தில் நடக்க ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு, அது வார்த்தையோடு தரித்திருப்பதாகும். யாரோ ஒருவர் எங்கோ வார்த்தையிலிருந்து விலகிச் சென்றிருக்கலாம். அவர்கள் சத்தியத்தின் ஒரு பாகத்தையே உடையவர்களாயிருக்கிறார்கள், ஆகையால் அவர்கள் போய், அதில் ஒரு மாற்றுப் பாதையை அமைக்கிறார்கள். அவர்கள் நெடுஞ்சாலையைச் சென்றடைந்தும், மாற்றுப்பாதையில் செல்கின்றனர். வார்த்தையோடு தரித்திருங்கள்! 123 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் குற்த்தும் அவர்களிடத்தில் பேசுங்கள். “ஓ, அது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லையே” என்பார்கள். 124 அது ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறதே! ஜனங்கள் மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டதாக அவன் கூறினானே. அவன், “ஓரு தூதனே வேறு ஏதாவது காரியத்தைக் கூறினால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றான். அது ஒரு வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதே! 125 மோசே, “நான் என்னுடைய…எடுத்தால்…நான் என் பாதரட்சைகளுக்குப் பதிலாக என்னுடைய தொப்பியைக் கழற்றுவேன். என்னுடைய பாதரட்சையின் கொக்கியைக் கழற்றக் கடினமாயுள்ளது, எனவே நான் என்னுடைய தொப்பியைக் கழற்றி, மரியாதையைத் தெரிவிக்கிறேன்” என்று கூறியிருந்தால் என்னவாயிருக்கும்? தேவனோ, “பாதரட்சைகள்” என்றாரே! தேவன் பாதரட்சைகளை கழற்றும்படி கேட்டாரேயன்றி தொப்பியை அல்ல; அவர் கூறினதென்னவென்றால் பாதரட்சைகள். 126 தேவன் தம்முடைய ஒவ்வொரு வார்த்தையும் எழுத்திற்கு எழுத்து நிறைவேற்றப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறார். அது நிறைவேற வேண்டும். அவர் என்ன செய்யும்படிக் கூறுகிறாரோ, நீங்கள் அதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் அதிலிருந்து ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது. “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.” அது நிலைத்திருக்க வேண்டும். ஒரு, ஒரு சிறு எழுத்தாகிலும் அல்லது ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் அதிலிருந்து ஒழிந்துபோகாது, அவை யாவும் நிறைவேற்றப்பட வேண்டியதாயுள்ளது. 127 இப்பொழுது, மனிதன் தேவனுடைய பிரஜையாயிருந்தான். தேவன் மனிதன் மூலமாகக் கிரியை செய்கிறார். 128 ஆகையால் மனிதன் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போது, சரியாக நெடுஞ்சாலையை அடைந்து, புறப்படத் துவங்கி, இந்த உண்மைகளைக் கண்டடைந்து, முன்னோக்கிச் செல்லும்போது, அது என்ன செய்கிறது? அவிசுவாசியான சகோதரன், அவன் இவனை நோக்கிப் பார்ப்பேன், அது அவனைப்போல…அவனால், அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் அதை ஏற்றுக்கொண்டால், அவன் தன்னுடைய சபையைவிட்டுச் செல்ல வேண்டும். அவன் தன்னுடைய சபையைவிட்டுச் செல்வானானால், அவன் தனிமையாய் நிற்பான். 129 அங்கே அந்த நேர்முகப் பேட்டிக்குப் பிறகு, ஒரு ஊழியக்காரர் என்னிடத்தில் கூறினார், ஒரு ஊழியக்காரர், “இங்கே பாருங்கள்” என்றார். 130 நான் மேடையின் மேல் அவர்களிடத்தில் கூறினேன், நான், “நான் மிகவும் தவறாயிருந்தால், இங்கே நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இங்கே இருக்கிறீர்கள், எனவே யாராவது ஒருவர் வந்து, எது சரியானது என்று எனக்குப் போதியுங்கள்” என்றேன். யாருமே வந்ததாக நீங்கள் பார்க்கவில்லை, நீங்கள் பார்த்தீர்களா? நீங்கள் பார்க்கவேமாட்டீர்கள், ஏனென்றால் அங்கு அது சரியானதாய் இருக்கவில்லை. 131 ஒரு ஊழியக்காரர், விசேஷித்த ஊழியக்காரர், நான் அவருடைய பெயரைக் கூற மாட்டேன். அவர் ஒரு விலையேறப்பெற்ற சகோதரன். அவர் வந்து, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, உங்களுடைய ஊழியத்தை நிச்சயமாகவே, நீங்கள் தொடர்ந்து அதைச் செய்ய முடியும். ஆனால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோமானால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோமானால், எங்களுடைய சபை எங்களை புறக்கணித்துவிடும், அப்பொழுது நாங்கள் எங்கே போக முடியும்?” என்று கேட்டார். 132 நான், “கிறிஸ்து இயேசு எல்லாவற்றிற்கும் போதுமான மறைவிடமாயிருக்கிறாரே! அங்கேதான் நீங்கள் போக வேண்டும். கிறிஸ்துவண்டைச் செல்லுங்கள்” என்றேன். “நல்லது” என்று அவர் கூறி, “ஆனால் எங்களுடைய ஊழியம் என்னவாகும்?” என்று கேட்டார். 133 அதற்கு நான், “உங்களுடைய ஊழியம் மற்ற எவருடைய ஊழியத்தைப் போன்றே அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, அது கிறிஸ்துவினுடையதானால், நீங்கள் எங்கே போக வேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை” என்றேன். 134 அப்பொழுது அவர், “நான் அந்தவிதமாக ஞானஸ்நானங் கொடுத்தால், அவர்கள் என்னை என்னுடைய சபையிலிருந்து வெளியே உதைத்துத் தள்ளிவிடுவார்கள்” என்றார். அதற்கு நான், “அவர்கள் என்னை உதைத்துத் தள்ளினார்கள். ஆகையால் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணினது?” என்று கேட்டேன். 135 நெடுஞ்சாலையில் தொடர்ந்து செல்லுங்கள். அப்படியே திட்ட வரைபடத்தைப் பின்பற்றுங்கள். நிச்சயமாகவே, அப்படியே அதனோடு தொடர்ந்து செல்லுங்கள், அவர்கள் என்ன செய்தாலும் கவலைப்படாதீர்கள். 136 சவுல் பயிற்றுவிக்கப்பட்டிருந்த சேனையை உடையவனாயிருந்தான். சவுல் அறிவாற்றல் கொண்ட ஒரு மகத்தான சேனையை உடையவனாயிருந்தான். கொஞ்சங்காலத்துக்கு முன்னர் நான் இங்கு எங்கோ பிரசங்கித்ததுபோல, அவர்களுக்கு, அவர்களுக்கு சாமுவேல் தேவைப்படவில்லை. அவர்கள் அந்த மகத்தான சேனையை உடையவர்களாயிருந்தனர். ஓ, நிச்சயமாக! சாமு…சாமுவேல் அவர்களிடம் கூறினான், அவர்கள் இந்த ராஜவை தேர்ந்தெடுக்கும் முன்னர் அவன் அவர்களை வழி நடத்தினான். தேவன் அவர்களுடைய ராஜாவாயிருந்தார். 137 தேவன் நம்முடைய ராஜாவாயிருக்கிறார்! தேவனைத் தவிர மற்றக் காரியம் நமக்கு ஏன் வேண்டும்? ஒரு கிறிஸ்தவன் பரிசுத்த ஆவியைத் தவிர மற்றக் காரியத்தினால் தான் வழி நடத்தப்பட வேண்டும் என்று ஏன் விரும்ப வேண்டும்? எனக்குத் தெரியவில்லை. என்னால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. 138 சாமுவேல் அவர்களை அழைத்தான். அவன், “நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன்” என்று கூறி, “நான் கர்த்தருடைய நாமத்தில் உங்களிடத்தில் உரைத்த எந்தக் காரியமாவது எப்போதாவது நிறைவேறாமல் போனதுண்டா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “இல்லை” என்றனர். 139 மேலும் அவன், “நான் உங்களுடைய பணத்தை எப்போதாவது எடுத்துக்கொண்டேனா? நான் எப்போதாவது பணத்திற்காக உங்களிடத்தில் கெஞ்சினேனா?” என்று கேட்டான். 140 அதற்கு அவர்கள், “இல்லை, நீர் எந்த பணத்திற்காகவும் எங்களிடத்தில் கெஞ்சினதில்லை. நீர் என்ன உரைத்தீரோ, கர்த்தர் அதை நிறைவேற்றினார். நாங்கள் அதை அறிவோம்” என்றனர். 141 அப்பொழுது சாமுவேல், “அப்படியானால் நீங்கள் ஏன் தேவனைப் புறக்கணித்துவிட்டு, ஒரு இராஜா வேண்டுமென்கிறீர்கள்? நீங்கள் உலகத்தாரைப் போல செயல்பட விரும்புகிறீர்களே” என்றான். 142 அதைத்தான் பெந்தேகோஸ்தேயினர் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். அது அறிவாற்றல் கொண்ட பேராற்றல் வாய்ந்தவர்களை உருவாக்க விரும்புகிறது. அது சபையிலிருந்து வல்லமையை எடுத்துப் போட்டுவிட விரும்புகிறது. அது ஒரு ஸ்தாபனத்தை வளரச் செய்து, அதில் அதிக அங்கத்தினர்களைக் கொண்டுவர விரும்புகிறது. அது அர்த்தமற்றதாயுள்ளதே! நீங்கள் ஒரு மனிதனை ஒரு கோட்பாட்டண்டை கட்டும்போது, நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் அவனிடத்திலிருந்து பரிசுத்த ஆவியை எடுத்துப் போட்டுவிடுகிறீர்கள். அவர் எங்காவது அதை அளிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் சென்றுவிடுவார்; மனிதனால் அவனுடைய கோட்பாட்டினிமித்தமாக ஒன்றுமே செய்யமுடியாது. இப்பொழுது அவர் கூறினார்… 143 அப்பொழுது உண்மையாகவே, சவுல் தன்னுடைய சேனையை பயிற்றுவித்திருந்தான். ஓ, என்னே. எந்த வழியில் ஒரு ஈட்டியை எரிய வேண்டும் அல்லது எந்தக் காரியத்தையும் எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்த இஸ்ரவேலர்களை அவன் உடையவனாயிருந்தான். ஆனால் அங்கே ஒரு நாள் கோலியாத் என்ற ஒரு சாவாலிடுபவன் வந்தான். சகோதரனே, அப்பொழுது அதற்கு ஒரு அறிவாற்றல் கொண்டு பயிற்றுவிக்கப்பட்ட பேராற்றல் வாய்ந்தவரைக் காட்டிலும் அதிகமான ஒன்று தேவைப்பட்டது. 144 அதற்கு இயற்கைக்கு மேம்பட்ட ஒரு காரியத்தைக் குறித்து அறிந்திருந்த ஒரு மனிதன் தேவைப்பட்டது. ஆனால் தேவன் அப்படிப்பட்ட ஒரு மனிதனை உடையவராயிருந்தார். அதற்காக கர்த்தருக்கு நன்றி. தேவன் எப்பொழுதுமே யாரோ ஒருவரை உடையவராயிருக்கிறார். அவர் எப்பொழுதுமே அவ்வாறு உடையவராயிருக்கிறார். அவர் தம்முடைய கரங்களை வைக்கக் கூடிய ஒரு மனிதனை உடையவராயிருந்தார். அங்கே ஒரு சிவந்த மேனியுடைய சிறு பையன் இருந்தான், மிகப்பெரிய தோற்றங்கொண்டிருக்கவில்லை. ஆனால் அவன் அங்கு வந்து, “அந்த விருத்தச்சேதனமில்லாத பெலிஸ்தியன் இந்த சேனையை தீட்டுப்படுத்த நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நீங்கள் என்னிடம் பொருட்படுத்திக் கூறுகிறீர்களா?” என்று கேட்டான். அங்கே சவுல் அங்குள்ள எல்லாரைப் பார்க்கிலும் உயரமானவனாய் இருந்தான். அவனுடைய எல்லா அறிவுப் பூர்வமான பயிற்சியும் எந்த நன்மையையும் செய்யவில்லை. 145 இப்பொழுது சபைகள் அதைத்தான் செய்திருக்கின்றன. அவர்கள் பரிசுத்த ஆவியைவிட்டு விலகிச் சென்றுவிட்டனர். அவர்கள் தேவனுடைய வல்லமையிலிருந்து விலகி விட்டனர். அவர்கள் ஆவியின் வழி நடத்துதலிருந்து விலகிவிட்டனர். நாம் பெற்றுள்ள… நாம் கீசின் குமாரகளையும் கூட பெற்றுள்ளோம். நாம் இங்கே ஆப்பிரிக்காவில் வேதத்தின் பேரில் ஒரு முகமதியனால் சவாலிடப்பட்ட நம்முடைய பெரிய பேராற்றல் வாய்ந்தவர்களில் ஒருவரை உடையவர்களாயிருந்தோம். என்ன சம்பவித்தது? அவர் மற்றொரு கீசின் குமாரனைப்போல தப்பிச் சென்றுவிட்டார். நம்முடைய சகோதரனை அவமதிப்பதற்காகக் கூறவில்லை. 146 ஆனால் அவர்கள் தேவனால் விடுவிக்க முடியும் என்பதை அறிந்திருந்த ஒரு மனிதனை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் அங்கே குட்டி தாவீதைக் கொண்டு வந்தனர். அப்பொழுது தாவீது, “எனக்கு உங்களுடைய ஈட்டிகளைக் குறித்தும், உங்களுடைய அறிவாற்றல் வாய்ந்த பயிற்சியைக் குறித்தும் ஒன்றுமேத் தெரியாது. ஆனால் நான் ஒரு காரியத்தை அறிவேன். நான் ஒரு காரியத்தை அறிவேன், நான் சத்துருவினால் கொண்டு செல்லப்பட்ட ஆட்டைப் பின் தொடர்ந்து சென்றேன். உ—ஊ. தேவன் அவைகளைத் திரும்பக் கொண்டு வரும்படிச் செய்தார்” என்றான். மேலும் அவன், “இந்த விருத்தச்சேதனமில்லாத பெலிஸ்தியனிடத்திலிருந்து விடுக்கும்படி அவர் எவ்வளவு அதிகமாய் என்னை அனுமதிப்பார்” என்றான். 147 இன்றைக்கு நமக்குத் தேவை என்னவெனில் ஒரு உண்மையை விரும்புகிற புருஷரும், ஸ்திரீகளுமேயாகும். அல்லேலூயா. ஒரு கோட்பாட்டையல்ல; ஒரு உண்மையை, அதுதான் இன்றைக்கு உலகத்திற்கு தேவையாயுள்ளது. கோட்பாடுகளும், நாகரீகங்களோ அல்ல; நமக்கும் தேவனில் உள்ள உண்மைகளே தேவை. உலகம் அதை விரும்புகிறதில்லை. உலகம் அதை விரும்புகிறதில்லை. அவர்கள் அதை ஏற்றுகொள்ளமாட்டார்கள், அதை ஏற்றுக்கொள்ள விரும்புகிறதில்லை. ஆனால் சபையானது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவர் உண்மைகளின் தேவனாயிருக்கிறார். ஆம் ஐயா. 148 அன்றொரு இரவு, நான் இப்பொழுது உள்ள சில நண்பர்களோடு, அவர்களின் கூட்டத்தோடு சிசில் பி.டிமிலி அவர்களினுடைய தயாரிப்பான சிம்சோனும் தெலீளாளும் என்ற திரைப்படத்தை இங்கே காணச் சென்றிருந்தேன். நான் அதைக் குறித்து அதிகமாக கேள்விப்பட்டிருந்தேன். எனவே நான் காரோட்டிச் சென்று அந்தத் திரைப்படம் எப்படித்தான் காணப்படுகிறது என்று பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன். நான் அதைப் பார்த்தபோது, நியாயாதிபதிகளின் நாட்களில் தேவன் சிம்சோனைப் போன்ற ஒரு நபரில் என்னக் கண்டார் என்று வியப்புறத் துவங்கினேன். 149 பாருங்கள், தேவன் மனிதனை பயன்படுத்துகிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆனால் அவர் மாத்திரம்…முடிந்தால்…அவர் ஒரு மனிதனைக் கண்டுபிடிக்கும்போது, அவர் பயன்படுத்தக் கூடிய யாரோ ஒருவரை கண்டுபிடிக்கும்போது, அந்த மனிதனை மாத்திரமே அவரால் உபயோகிக்க முடியும். நியாயாதிபதிகளின் நாட்களில் ஒரு இடைவெளி இருந்தது, அப்பொழுது அவரால் ஒரு மனிதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் செய்ய முடிந்த ஒரேக் காரியம் ஒருவரை எழுப்ப, அவன் ஏதோ ஒரு வழியில் செல்வான்; அதன்பின்னர் மற்றொருவனை எழுப்ப, அவன் வேறு ஏதோ ஒரு வழியில் செல்வான். அவர் முற்றிலுமாய் வலுவான நம்பிக்கை வைக்கக் கூடிய மனிதன் ஒருவரும் அவருக்கு இல்லாதிருந்தது. 150 இந்த சிம்சோனுக்குள் அவர் என்னக் கண்டார் என்று நான் வியப்புற்றேன். சிம்சோன் இன்றைய நம்முடைய ஏராளமான தலைவர்களில் ஒருவனைப் போல, பெண்களுக்கு நன்கு பிடித்திருந்த ஒரு மனிதனாய், ஸ்திரீகளுக்குப் பின்னே இடம் விட்டு இடம் ஓடிக்கொண்டிருந்தான். இன்றைய நம்முடைய ஏராளமான தலைவர்களில் ஒருவனைப் போல, வார்த்தையின் பேரில் சமரசமாகிவிட்டுக் கொடுக்கும் ஏராளமான நம்முடையவர்களில் ஒருவரைப் போல், ஒரு ஸ்திரீ அவர்களை வழி நடத்த அனுமதித்துவிட்டு, அவர்களை பிரசங்கிமார்களாய் இருக்க, அதுபோன்ற காரியங்களைச் செய்ய அனுமதிக்கிறார்கள். ஓ, இரக்கம்! 151 ஒரு பெண் பிரசங்கியாருக்கான வேதவாக்கியத்தை எடுத்துக்காட்டும்படி நான் வந்த எந்த மனிதனிடத்திலும் கேட்கிறேன். பவுல், “வேதமும் அப்படியே சொல்லுகிறது” என்று கூறினது போல, என்னால் அதை பழைய ஏற்பாட்டில் நிரூபிக்க முடியும். நான் நேற்றைய தினம் பழைய ஏற்பாட்டின் பிரகார முறையை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் அங்கே அதில் அவர்கள் விசேஷித்த காவலரை உடையதாயிருந்ததையும், அதாவது ஒரு ஸ்திரீ இரண்டாம் அல்லது மூன்றாம் பிரகாரத்திற்குள் கூட வரமுடியாதபடி இருந்ததை நான் கண்டேன், எனவே பிரசங்க பீடத்தில் என்பதை தனியே விட்டிவிடுங்கள். அவர்கள் வெளியே புறஜாதியார் வராமல் தடுக்க ஆலயத்தில் விசேஷித்த காவலரை உடையவர்களாயிருந்தனர், அதற்கு அடுத்தபடியாகவே ஸ்திரீகள் இருந்தனர். அப்பொழுது லேவியர்கள் வந்து மகாபரிசுத்த பிரகாரத்திற்குள் பிரவேசித்தனர். ஸ்திரீகள் இரண்டாம் பிரகாரங்களிலும் கூட வரமுடியாமலிருந்தனர். அது முற்றிலும் உண்மை. இன்றைக்கு நாம் ஸ்திரீகளை நம்முடைய விக்கிரங்களாக உருவாக்கியுள்ளோம். நம்முடைய தலைவர்களில் அநேகர் அழகான ஸ்திரீகளை, அதுபோன்ற காரியங்களைச் செய்ய தூண்டுகின்றனர், ஆவிக்குரிய பிரகாரமான ஸ்திரீ, சபையின் அழகாயிருக்க அனுமதியுங்கள். 152 ஒரு ஸ்திரீ சபைக்கு மாதியாயிருக்கிறாள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் மணவாட்டியாயிருக்கிறோம். சபை ஒரு மணவாட்டியாயுள்ளது. 153 ஏராளமான மணவாட்டிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஸ்திரீகளை வசீகரிக்க அனுமதிக்கிறார்கள். இன்றைய ஊழியக்காரார்கள் சத்தியத்திலிருந்து சபைகள் அவர்களை இழுக்க அனுமதிக்கிறார்கள். அவள் என்ன செய்கிறாள்? அவள் சிம்சோனுடைய தலைமுடியைக் கத்தரிக்கிறாள், அவள் அவனுடைய வல்லமையை துண்டிக்கிறாள், அவள் தன்னுடைய சொந்த வழியினை உடையவளாயிருக்கிறாள். 154 என்னுடைய சகோதரிகளுக்கு விரோதமாகக் கூறவில்லை. தேவன் ஒரு மனிதனுக்கு ஒரு மனைவியைக் காட்டிலும் மேலான ஒரு காரியத்தை அளித்திருக்க முடிந்திருந்தால், அப்பொழுது அவர் அதை அவனுக்கு அளித்திருந்திருப்பார். 155 ஆனால் எல்லா ஸ்திரீகளும் மனைவிகளாயிருக்கவில்லை, எல்லா ஸ்திரீகளும் மனைவிகளாயிருக்கவில்லை. எல்லா பெண்களும் தாய்மார்களாயிருக்கவில்லை. பிள்ளைகளை வைத்துள்ள எல்லோரும் தாய்மார்கள் அல்ல. ஒரு நாய்க்காக சிறந்த மரியாதைகளைக் கொண்டுள்ள சிலரை நான் பார்த்திருக்கிறேன்; ஜனங்களோ தங்களுடைய பிள்ளைகளை ஒழுக்கக்கேடாக ஆடையணியச் செய்து வீதியிலே செல்ல விடுகின்றனர். ஜனங்களோ இந்த பழைய சிறிய ஆடைகள் போன்ற காரியங்களோடு ஒழுக்கக்கேடாக ஆடையணிந்து கொண்டு வெளியே வருகின்றனர். 156 நான் நேற்றய தினம் வீதியிலே மனிதர்கள் செல்வதைக் கண்டேன். நான் ஏதோ ஒரு காரியத்திற்காக பட்டிணத்திற்குள் சென்று கொண்டிருந்தபோது, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அழகான வாலிப மனைவியானவள் சிறிய ஆடைகள் அணிந்து பயங்கரமாய் காணப்பட வீதியில் அவளோடே செல்வதைக் கண்டேன். அது ஆண்மைத் தன்மைக் கொண்ட மனிதன் அல்ல; அது ஒரு பெண்மைத்தன்மை கொண்ட மனிதனாகும். தன்னுடைய மனைவி அந்தவிதமாய் உடை உடுத்த அனுமதிக்கிற எவரும் அதிக அளவில் ஆண்மைத் தன்மையைப் பெற்ற ஒரு மனிதனாயிருக்கவில்லை. ஓ, அவன் வலுவான சதைகளைக் கொண்டவனாயிருக்கலாம்; அது அறிவற்ற மிருகமாயுள்ளது. 157 ஒரு மனிதன் என்பது “நற்பண்போடிருப்பதாகும்.” இயேசு எப்போதும் வாழ்ந்தவர்களிலேயே மிக மகத்தானவராயிருந்தார், அவர் ஒரு சிறிய உருவம் கொண்ட நபராய் “நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தவராய்” இருந்தார், ஆனால் இயேசு கிறிஸ்துவைப் போல ஒரு குணாதிசயத்தை பூமியில் விளங்கப்பண்ணின ஒரு நபர் எப்போதுமே இருந்ததேக் கிடையாது. 158 நான் சில மனிதர்கள் இருநூற்றைம்பது பவுண்டுகள் எடையுள்ளவர்களாயிருந்து, அதே சமயத்தில் அவர்களுக்குள் ஒரு வீசும் கல்லெடை அளவுகொண்ட அந்தச் சிறிதளவு ஆண்மைத்தன்மை இல்லாதிருப்பதையும் கண்டிருக்கிறேன். அது உண்டாகும்போது…[ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.]… ஒருபோதும் ஒரு குதிரையைப் போல வலிமையாயிருப்பதல்ல. சில நேரங்களில் அவர்கள் ஒரு குதிரையின் ஞானத்தைக் கூட பெற்றிருக்கவில்லை. ஆகையால் ஒரு குதிரை அறிவுத்திறனுள்ள காரியங்களை அறிந்துள்ளது. ஒரு குதிரை அதை சிறப்பாக அறிந்துள்ளது. இப்பொழுது அது உண்மையாயுள்ளது. இப்பொழுது, நீங்கள் ஆண் குதிரையை பெண்குதிரையை பலாத்காரமாய்க் கற்பழிக்க அனுமதிக்கும்படி முயற்சித்து என்ன சம்பவிக்கிறது என்று கண்டறியுங்கள். குதிரையானது மேலான அறிவுத்தினைப் பெற்றுள்ளது. புரிகிறதா? மனிதன் ஏராளமான வாழ்க்கை முறைகளைக் கொண்டிருக்கும்போது, அவன் ஒரு குதிரையைப் போன்ற அறிவுத்திறனை ஒருபோதும் பெற்றிருக்கவில்லை. 159 நாம் ஒரு கிழப் பெண் பன்றி என்றழைக்கிறோம், அவளை பெண்பன்றி என்று கூறுகிறோம், ஒரு கிழ நாயை ஒரு அசுசியானது என்று கூறுகிறோம். ஒரு அசுசியான நாய் அல்லது ஒரு பெண்பன்றியைப் பார்க்கிலும் தேவனுடைய ஏராளமான அழகிய முகங்கங்களைக் கொண்ட இந்த ஸ்திரீகள் இங்கே பார்வையில் கோடிக்கணக்கான மடங்கு இழிவாய்க் காணப்படுகின்றனர். அது முற்றிலும் உண்மையே! 160 அதை நேரடியாகவே வெளிப்படையாய் கூறினால், அந்தக் காரணத்தினால்தான் ஜனங்கள் அதை விரும்புகிறதில்லை. அப்பொழுது இயேசு அவர்களுக்கு சத்தியத்தைக் கூறினபோது, அவர்கள் அவரிடத்திலிருந்து விலகிச் சென்றனர். ஆனால் வேளையானது வந்துவிட்டது, இப்பொழுது பிதாவனவர் தம்மை ஆவியில் ஆராதிக்கும்படியான, ஆவியில் நடக்கும்படியான, ஆவியில் ஜீவிக்கும்படியாக, சத்தியத்தை கூறும்படியான ஒரு காரியத்தையே வாஞ்சித்துக் கொண்டிருக்கிறார். 161 சத்தியம் எப்பொழுதுமே ஒன்று விடுதலையாக்கிறது அல்லது கட்டுகிறது. நீங்கள் கட்டப்பட்டிருந்தால், அப்பொழுது நீங்கள் விடுதலையாயில்லை, நீங்கள் விடுதலையாயிருந்தால், நீங்கள் அந்த விதமாய் ஜீவிக்கமாட்டீர்கள். 162 நீங்களோ, “பரவாயில்லை, நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளேன்” என்று கூறி, நீங்கள் ஜீவித்த விதமாகவே இன்னமும் ஜீவிக்கிறீர்களா? உங்களுக்கு ஏதோக் காரியம் சம்பவித்துள்ளது. நீங்கள் பெந்தேகோஸ்தே நாளில் இறங்கி வந்த பரிசுத்த ஆவியை ஒருபோதும் பெற்றிருக்கவில்லை; அதுவே உங்களை வித்தியாசமாக்கும். 163 “நான் அந்நிய பாஷைகள் பேசுவதில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. நான் தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை. நான் இந்தக் காரியங்களில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை” என்று கூறலாம். அப்படியானால் நீங்கள் ஒருபோதும் பெந்தேகோஸ்தேவில் விழுந்த பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. நீங்கள் நிச்சயமாகப் பெற்றிருக்கவில்லையே! 164 நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டீர்கள்? “நான் ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருக்கிறேன்!” எப்படி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலா? அப்படியானால் நீங்கள் செய்கிறவிதமாகவே நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதில் வியப்பொன்றுமில்லையே! புரிகிறதா? 165 பவுல், “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். 166 அவர்களோ, “நாங்கள் எற்கெனவே விசுவாசித்துள்ளோம். நாங்கள் பாப்டிஸ்டுகள்” என்றனர். அப்போஸ்தலர் 19-ல், அது அவ்வண்ணமாயிருக்கவில்லையா என்றுப் பாருங்கள். “நாங்கள் பாப்டிஸ்டுகளாயிற்றே!” அவன்—அவன், “இயேசுவுக்கு ஞானஸ்நானங்கொடுத்த அதே மனிதனாகிய யோவானிடத்தில் நாங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம்” என்றான். 167 அப்பொழுது பவுல், “அது கிரியை செய்யாது” என்றான். மேலும் அவன், “நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், நீங்கள் மீண்டும் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும்” என்றான். நீங்கள் அதைப் போன்று காணப்படுகிற ஏதோ ஒரு காரியத்தைப் பெற்றுக் கொள்ளலாம், அதைப் போன்று செயல்படுகிற ஏதோ ஒன்றை, சற்று அதைப் போன்றதைப் பெற்றுக்கொள்ளலாம்; ஆனால் அது உண்மையானக் காரியம் அல்ல, ஏனென்றால் நீங்கள் வந்து, “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றான். அவர்கள் ஞானஸ்நானம் பெற்ற போது, அவன் அவர்கள் மேல் கைகளை வைத்தான், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்தார். அவர்கள் அதைப் பெற்றிருந்ததாக எண்ணியிருந்தனர். 168 இங்கே அந்த சபையில் உள்ள சகோதரன் அல்லது அது எங்கோ உள்ள அவர் மூல கிரேக்க வேதாகமத்தில் அவ்வாறு கூறவில்லை என்று கூறினதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். “நீங்கள் விசுவாசிக்கும்போது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறீர்கள்” என்றே கிரேக்க வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது என்றார். அது தவறு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது ஒரு பிழையாகும்; அவ்வாறு கிரேக்க வேதாகமத்திலும் இல்லை, எபிரேய வேதாகமத்திலும் இல்லை அல்லது அரமிய மொழியிலும் கூட இல்லை. அது, “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்றே கூறப்பட்டுள்ளது. நீங்கள் விசுவாசிக்கும்போது என்றல்ல. ஆகையால் அதைக் கூறினது யாராயிருந்தாலும், சகோதரனே, நீங்கள் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை, புரிகிறதா? இல்லை ஐயா. நீங்கள் விசுவாசித்த “பிறகு” பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறீர்கள், நீங்கள் விசுவாசிக்கும்போது அல்ல. 169 பரிசுத்த ஆவி என்பது உங்கள் மீது வந்து உங்களை மாற்றுகிற, உலகத்திலிருந்தும், மற்ற ஜனங்கள் என்னவாயிருக்கிறார்கள் என்பதிலிருந்து உங்களை முற்றிலும் மாற்றுகிற ஒரு தேவனுடைய வரமாயுள்ளது. நீங்கள் வித்தியாசமாயிருக்கிறீர்களே! அவர்கள்…நீங்கள் வித்தியாசமாய் எந்த உடையும் உடுத்த வேண்டியதில்லை, நீங்கள் ஒரு வட்டமான கழுத்துப் பட்டையை அணிந்து ஒரு நீண்ட அங்கியை உடுக்க வேண்டியதில்லை. நீங்கள் வித்தியாசமாக ஜீவிக்கிறீர்கள். நீங்கள் வித்தியாசமாக செயல்படுகிறீர்கள். தேவனுடைய வல்லமை உங்களோடு உள்ளது. நீங்கள் எங்கு சென்றாலும் நீங்கள் குறியிடப்பட்டிருக்கிறீர்கள் என்பதை ஜனங்கள் அறிந்திருக்கிறார்கள். சரி. தேவன் தம்முடையவர்களை அறிந்திருக்கிறார். அவர் தம்முடையவர்களை அடையாளமிடுகிறார். அதுதான் இது. ஆனால் நீங்கள் சத்தியத்திற்கு வர வேண்டும். பாருங்கள். 170 அந்த சிம்சோனுக்குள் என்ன இருந்தது? ஒரு ஸ்திரியின் பின் செல்பவனா? நிச்சயமாக. அவன் தன்னுடைய தகப்பனுக்கும் தாயுக்கும் திமிர்பிடித்தவனாயும், அடங்காதவனுமாயிருந்தான். அவர்கள் அந்த ஸ்திரியோடு, அந்த யேசபேலோடு அங்கே போக வேண்டாம் என்று அவனிடத்தில் கூறியிருந்தனர், ஆனால் அவன் அவர்களுக்கு செவிகொடுக்க மனதில்லாதிருந்தான். அது என்னவாயிருந்தது? சிம்சோன் பெலனை உடையவனாயிருந்தான். இப்பொழுது கவனியுங்கள். சிம்சோன் தன்னுடைய பெலனை சமர்ப்பிக்க ஆயத்தமாயிருந்தான். சிம்சோன் தன்னுடைய பெலனை தேவனுக்கு அளித்தான், ஆனால் அவன் தன் இருதயத்தை தெலீலாளுக்கு அளித்தான். 171 அது இன்றைக்கும் அந்தவிதமாகவே உள்ளது. இப்பொழுது, அநேக புருஷர்கள், ஒரு வேதாகம கருத்தரங்கிற்குச் சென்று, கற்று, ஓ, அறிவில் சிறந்த பேராற்றல் வாய்ந்தவர்களாகி, எல்லா கிரேக்க மொழி மற்றும் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் கற்றுக் கொள்கிறார்கள்; ஆனால் அது சத்தியம் என்று வரும்போது, அவன் தன்னுடைய கல்வியின் பெலனைக் கர்த்தருக்கு அளித்து, ஆம், ஆனால் தன்னுடைய இருதயத்தையோ அவன் சபைக்கு அளிக்கிறான், தேவனுக்கு அல்ல. அதுதான் இன்றைக்கு ஜனங்களோடுள்ள காரியமாய் உள்ளது. அவர்கள் தங்களுடைய கோட்பாடுகளைப் பின்பற்ற விரும்புகிறார்கள். 172 அவர்களுக்கு பரிசுத்த ஆவியின் உண்மைத் தேவையில்லை. அவர்கள் எப்பொழுதும் செயல்பட்டு வந்த விதத்தைக் காட்டிலும் வேறெந்த வித்தியாசமாகவும் செயல்பட விரும்புகிறதில்லை. ஆனால் நீங்கள் ஒரு கிறிஸ்தவராகும்போது, நீங்கள் ஒரு சொந்தமான ஜனமாயும், ஒரு ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், ஒரு விநோதமான ஜாதியாயும், விநோதமான ஜனமாயும், விநோதமான காரியங்களையும் மற்றும் விசித்திரமான காரியங்களையும் செய்கிறவராயும், உலகத்திற்கு ஏற்றவராயில்லாமலாகிவிடுகிறீர்கள். நீங்கள் உலகத்தில் இருக்கும்போது, நீங்கள் தேவனுக்கு ஏற்றவராயில்லாமலாகிறீர்கள். ஒன்று மற்றொன்றிலிருந்து மாறுபடிகிறதாய் உள்ளது. ஒன்று அவர்கள் பரலோகத்தில் செய்கிறது போல உங்களை செயல்படச் செய்கிறது, மற்றொன்று அவர்கள் பூமியில் செய்கிறதுபோல உங்களைச் செயல்படச் செய்கிறது. 173 ஜனங்கள் அவர்கள் பூமியில் செய்கிறதுபோல செயல்படவே விரும்புகிறார்கள், அதன்பின்னர் அப்படியே செயல்பட்டு, தாங்கள் பரலோகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள், ஆனால் என்ன ஒரு ஏமாற்றமாய் இருக்கப் போகிறது. இயேசு, “அநேகர் அந்த நாளில் என்னிடத்தில் வருவார்கள். அவர்கள் கோடிக்கனக்கானவர்களாய் நின்று, ‘நான் இதைச் சேர்ந்திருந்தேன், நான் இதை செய்திருக்கிறேன்’” என்று கூறுவார்கள். அப்பொழுது அவர், “அக்கிரம செய்கைக்காரராகிய நீங்கள் என்னை விட்டு அகன்று போங்கள். நீங்கள் கோட்பாடுகளை சேவிக்கிறீர்கள்” என்றார். 174 நீங்கள் ஆவியினால் வழி நடத்தப்பட்டிருந்தால் நலமாயிருக்குமே! எல்லா தேவனுடைய குமாரரும், குமாரத்திகளும் தேவனுடைய ஆவியினால் வழி நடத்தப்படுகின்றனர். அவர்கள் ஆவியினால், விநோதமாக, விசித்திரமாக ஏவப்படுகின்றனர். அவர்கள் சரியாக தரித்திருந்து, அவர்கள் புரிகிற ஒவ்வொரு செயலும் வேதத்தோடு உள்ளது. அவர்கள் தங்களுடைய எல்லா உபதேசங்களிலும் வேதாகமத்தோடு சரியாக தரித்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு காரியத்தின் பேரிலும் மாறுபடுகிறதில்லை. வேதம் அதை எங்கே கூறுகிறதோ, அவர்கள் அதற்குள் முன்செல்வார்கள். அவர்கள் ஒரு நிமிடம் நின்று, எந்த வழிச் செல்ல வேண்டும் என்று பார்க்கும்படி அவர்கள் ஆராய்ந்து பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தால், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்துகிறார், அவர்கள் சரியாக முன் செல்லுகிறார்கள். அவன் அதேக் காரியத்தைச் செய்து, அதே சட்டதிட்டங்களை பின்பற்றி, அதே அஸ்திபாரத்தைப் போடும்போது, அதே தேவன் அவன் மீது வந்து அதே அதிசயங்களையும், அதே அற்புதங்களையும், அவரைப் பின்தொடர்ந்த அதே அடையாளங்கள் அவனைப் பின்தொடரச் செய்கிறார். 175 அவர், “நான் ஒரு மனிதனாயிருக்கிறபடியால், உங்களால் என்னை விசுவாசிக்க முடியவில்லையென்றால், நான் செய்கிற கிரியைகளை விசுவாசியுங்கள். என்னை விசுவாசியுங்கள். நான் என் பிதாவின் கிரியைகளை செய்யவில்லையென்றால், அப்பொழுது என்னை விசுவாசிக்காதீர்கள்,” என்றார். பாருங்கள், இந்த விசுவாசத்தோடு கூடிய கிரியைகள் உள்ளன. “உன்னுடைய விசுவாசமில்லாமல் உன்னுடைய கிரியைகளை எனக்குக் காண்பி (உன்னுடைய கிரியையினால்), அப்பொழுது நான் என்னுடைய விசுவாசத்தினால் என்னுடைய கிரியைகளை உங்களுக்குக் காண்பிப்பேன்” என்று பவுல் கூறினான். புரிகிறதா? 176 இப்பொழுது, சிம்சோனுக்குள் இருந்தது என்ன? அவன் தன்னுடைய இருதயத்தை ஒப்புக்கொடுக்க மனதில்லாதிருந்தான். 177 இன்றைக்கு மனுஷர் தங்களுடைய கோட்பாடுகளை குறித்தே அதிகமாக சிந்திக்கிறார்கள்…அவர்கள்…ஜனங்கள் தங்களுடைய கோட்பாடுகளைக் குறித்தே அதிகம் சிந்திக்கிறார்கள். இப்பொழுது, சபைகளுக்கு எதிராக நான் ஒன்றையும் கூறிக்கொண்டிருக்கவில்லை. 178 நான் பெந்தேகோஸ்தேவைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன்! இது, இந்த சபை பெந்தேகோஸ்தேவை நோக்கியே சார்ந்துள்ளது. இது ஒரு பெந்தேகோஸ்தே ஸ்தாபனமல்ல. நாங்கள் எந்த ஸ்தாபனத்தையும் சார்ந்திருக்கவில்லை, ஒருபோதும் சாரும்படி கருதுகிறதுமில்லை. நாங்கள் கிறிஸ்துவையே சார்ந்திருக்கிறோம். அது உண்மை. ஆகையால் இப்பொழுது பெந்தேகோஸ்தே ஒரு ஸ்தாபனமல்ல. பெந்தேகோஸ்தே ஒரு ஜனங்கள் ஏற்றுக் கொள்ளுகிற ஒரு அனுபவமாயுள்ளது. மெத்தோடிஸ்டுகள் அதை ஏற்றுக்கொண்டனர். கத்தோலிக்கர் அதை ஏற்றுக் கொள்கிறார்கள், பாப்டிஸ்டுகள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். எவரும் அதை ஏற்றுக் கொள்ள முடியும், ஆனால் அது ஒரு அனுபவமாயுள்ளது. 179 கோடிக்கணக்கானவர்கள் தங்களை “பெந்தேகோஸ்தே” என்று அழைத்துக்கொண்டு, அதே சமயத்தில் பெந்தேகோஸ்தேவின் முதல் செய்தி என்ன என்று கூட அறியாதிருக்கிறார்கள். நீங்கள் எப்போதுமே சரியாக துவங்கப்படுவதற்கு முன்னர், நீங்கள் சரியான அஸ்திபாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் பெந்தேகோஸ்தே அஸ்திபாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். பெந்தேகோஸ்தே அஸ்திபாரம் என்றால் என்ன? 180 பெந்தேகோஸ்தே நாளில் சபையின் துவக்க விழா நடத்தப்பட்டபோது, அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை அவர்கள் கண்டபோது, கன்னி மரியாள் அங்கே அவள் குடித்து வெறித்திருப்பது போல நடந்து கொண்டாள், மற்ற எல்லோரும் அதைப் போன்றே தள்ளாடிக் கொண்டிருந்தனர், எனவே மற்றவர்கள், “என்ன? இது என்ன? இவர்கள் எல்லோரும் குடித்து வெறித்திருக்கிறார்களா?” என்று கேட்டனர். 181 பேதுரு, “நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிக்கொண்டவர்கள் அல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. இது…திட்ட வரை படத்தின்படி உரைக்கப்பட்ட விதமாய், முன்பிருந்த சாலை வரை படத்தின்படியே உள்ளது. இது சாலை வரைபடம் கூறியுள்ளதாய் உள்ளது” என்றான். யோவேல், நாம் இந்த இடத்திற்கு வருவோம் என்றும், நாம் இந்த சந்திப்பிற்கு வருவோம் என்றும், “இது கடைசி நாட்களில், கடந்த இரண்டு நாட்களில், கடைசி இரண்டாயிரம் வருடங்களில் நிறைவேறும் என்று தேவன் உரைக்கிறார், நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள், உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள். அல்லாமலும் நான் உயர வானத்திலே அற்புதங்களையும், அடையாளங்களையும், அதுபோன்றக் காரியங்களையும் காண்பிப்பேன்” என்று கூறினார். அப்பொழுது அவர்கள், “நாங்கள் இதைப் பெற்றுக்கொள்ள என்ன செய்யலாம்?” என்று கேட்டனர். 182 “பேதுருவே, நீ எந்தவிதமான ஒரு அஸ்திபாரத்தைப் போடப்போகிறாய்? நீ பரலோகத்தின் திறவு கோல்களை வைத்திருக்கிறாய்” என்றனர். அப்பொழுது அவன், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது அதே பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்கள். வாக்குத்தத்தமானது ஒவ்வொரு தலைமுறையையும் பின்தொடர்ந்து வரும் உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்றான். அங்குதான் அஸ்திபாரமே உள்ளது. 183 பாருங்கள், அவர்கள்—அவர்கள் வந்து தங்களுடைய—தங்களுடையதைத் தந்து…அவர்கள் போய்…அவர்கள் பள்ளிக்குச் செல்வார்கள். பையன்கள் ஒரு ஊழியக்காரராகும்படிக்கு கற்றுக் கொள்ள பள்ளிக்குச் செல்வார்கள். அது சரியே, ஒரு ஊழியக்காரராகும்படிக்கு கற்பதற்கு எதிராக ஒன்றுமில்லை; ஆனால் நீங்கள் ஊழியக்காரராயிருப்பதற்கு கற்க முடியாது, ஊழியக்காரருடைய வரம் தேவனிடத்திலிருந்து வருகிற ஒரு வரமாயுள்ளது. அந்த அப்போஸ்தலர்கள் தங்களால் முடிந்தளவு புத்திக் கூர்மையும், மிக உயரிய கல்வி பயின்றவர்களாய் இருக்க முடிந்திருந்தாலும், அவர்கள் அவ்வாறில்லை, இயேசு…அவர்…ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும் வரையில் இயேசு அவர்களைப் பிரசங்கிக்க அனுமதிக்கவேயில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியியைப் பெற்றுக்கொண்டபோது…இப்பொழுது நீங்கள் ஒரு வேதபாட கருத்தரங்கிற்குச் சென்றால், பெந்தேகோஸ்தேவின் பேரில் அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவம் உங்கள் மேல் வருகிறது, ஆமென். ஆனால் நீங்கள் அப்படியே அறிவாற்றல்கொண்ட கருத்துக்களினூடாக வெளி வந்தால், ஓ, கிரேக்க மொழியின் முதுகலையையும், ஒரு முதுகலைப் பட்டத்தையும், இந்த எல்லா வித்தியாசமான காரியங்களையும், ஒரு—ஒரு இளங்கலைப் பட்டத்தையும், இந்த எல்லா மற்றக் காரியங்களையும் பெற்றிருப்பீர்கள். நீங்கள் அந்தப் பட்டங்களோடு வெளியே வருவீர்களேயானால், நீங்கள் உங்களுடைய பெலனை உங்களுடைய கல்விக்கு அளித்திருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய இருதயத்தை தேவனுக்கு அளிக்க வேண்டும். தேவனுக்கு உங்களுடைய இருதயமே தேவையாயிருக்கிறது. ஆம் ஐயா. அவன் தன்னுடைய பெலனைக் கொடுக்கிறான், அவனுடைய இருதயத்தை அல்ல. ஆம் ஐயா. நாம் என்ன தேவனுக்கு அளிக்கிறோமோ, அதை மாத்திரமே அவரால் உபயோகிக்க முடியும். 184 இப்பொழுது உங்களில் அநேகர், “நான் ஞாயிற்றுக் கிழமை காலை பதினைந்து நிமிடங்கள் செலவு செய்வேன்… நீங்கள் அதைவிட அதிக நேரம் பிரசங்கம் செய்தால், அப்பொழுது நான் அப்படியே எழுந்து வீட்டிற்கு சென்று விடுவேன்” என்று கூறுபவர்கள் உண்டு. பரவாயில்லை, நீங்கள் ஞாயிறு காலை பதினைந்து நிமிடம் செலவிட்டீர்களே. ஹம்ப்! அவ்வளவுதான் நீங்கள் தேவனுக்கு அளிக்கிறீர்கள். அவர்களில் சிலர், “ஒருகால் என்னால் அரைமணி நேரம் பொருத்துக் கொள்ள முடியும். அதை எப்படிச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினர். பரவாயில்லை, பாருங்கள், அந்தளவுதான் நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்கள், பதினைந்து நிமிடங்கள், அரைமணி நேரம். புரிகிறதா? 185 நீங்கள் என்ன அளிக்க முடியும்? நீங்கள் அளிப்பதையே தேவன் பெற்றுக்கொள்வார், ஆனால் தேவனுக்கு உங்களுடையதெல்லாமே தேவைப்படுகிறது. உங்களுடைய ஒவ்வொரு சிறு துணுக்கும் அவருக்கு தேவையாயிருக்கிறது. அவருக்கு எல்லாமே தேவையாயிருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு காரியமும் அவருக்குத் தேவையாயிருக்கிறது. அவருக்கு உங்களுடைய ஜீவியம் தேவையாயிருக்கிறது. அவருக்கு உங்களுடைய சாட்சி தேவைப்படுகிறது. நீங்கள் ஜீவிக்கிற ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு தேவையாயிருக்கிறது. நீங்கள் சரியாக ஜீவிக்கும்படிக்கு, சரியாக நடந்து கொள்ளும்படிக்கு, சரியாக பேசும்படிக்கு, சரியானதை செய்யும்படிக்கே அவர் விரும்புகிறார். அவர் உங்களை வழி நடத்தி, உங்களுக்கு வழிகாட்டி, நீங்கள் எங்கே போக வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அந்த இடங்களில் உங்களை அமர்த்தும்படிக்கு ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாக அவரிடத்தில் ஒப்புவிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆவியினல் வழி நடத்தப்படுதல்! 186 ஆனால் ஜனங்கள் இன்றைக்கு, “இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள், என்னுடைய மேய்ப்பர் இருபது நிமிடங்களுக்கு மேல் பிரசங்கித்தால்!” என்கிறார்கள். 187 நான் அநேக முறை அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல மேய்ப்பர்கள் சபைகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிருக்கிறேன், ஏனென்றால் உதவிக்காரரின் குழு, “இப்பொழுது இங்கே பாருங்கள், சங்கை அவர்களே, நீங்கள் இங்கு வருவதற்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம். நீங்கள் இங்கு வந்து, காலை முழுக்க எங்களிடத்தில் முழக்கமிட நாங்கள் உங்களுக்கு ஒருபோதும் பணம் கொடுக்கவில்லை. நீர் எங்களுக்குத் தேவை, எனவே நாங்கள்—நாங்கள் இருபது நிமிட நேரத்தை ஒதுக்கி வைத்துள்ளோம்; ஆகையால் மணி ஒலிக்கும்போது, நீங்கள் நிறுத்திக் கொள்வது நலமாயிருக்குமே!” என்று கூறியிருப்பர். 188 உங்களுக்குத் தெரியும், அதைப் போன்ற ஒரு சபையில் ஒரு முறையாவது நான்—நான்—நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுது நான் அவர்களைக் குறித்து என்ன நினைக்கிறேன் என்றும், வார்த்தை அவர்களைக் குறித்து என்னக் கூறுகிறது என்றும் நான் அவர்களிடத்தில் கூறும் சிலாக்கியத்தை உடையவனாயிருக்க விரும்புகிறேன். ஆம். காரணம், அதற்கு முழு நாளுமே தேவைபட்டாலும், அப்படியே தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருப்பேன். ஆம். தேவன் ஒரு முற்றிலுமான ஒப்புவித்தலையே விரும்புகிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] தேவன் ஒரு ஒப்புவித்தலையே விரும்புகிறார். நீங்கள் அவரண்டை உங்களையே ஒப்புவிப்பதற்கு முன்னர் தேவனால் எப்படி உங்களுக்கு உண்மைகளைக் காண்பிக்க முடியும்? நீங்கள் சரணடைய வேண்டும். கவனியுங்கள். 189 நீங்கள் எல்லாவற்றையும் ஒப்புவிக்கும்போது! நீங்கள், “நான் ஒப்புவிக்கிறேன், நான் எல்லாவற்றையும் ஒப்புவிக்கிறேன்” என்ற அந்த பாடலைப் பாடுகிறீர்கள். அப்படியானால் அந்த சிகரெட்டுகளைக் குறித்து என்ன? அந்த உடை உடுத்தலைக் குறித்து என்ன? அந்த எரிச்சலைக் குறித்து என்ன? அதனோடு செல்லுகிற மற்றக் காரியங்களைக் குறித்து என்ன? நீங்கள் பெற்றுள்ள சிறு குணாதிசயத்தைக் குறித்து என்ன? அந்த சிறு திருட்டுத்தனமான எண்ணத்தைக் குறித்து என்ன? இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிற எவரையும் கடிந்து கொள்ளுகிறதைக் குறித்து என்ன? 190 எவரேனும் எங்கேயாவது வேதாகமத்தில் வேறு வகையில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்று உங்களுக்கு எந்த இடத்திலுமே இல்லை. கடைசி அப்போஸ்தலனின் மரணத்திற்குப் பிறகு முந்நூறு ஆண்டுகள் கழித்து ஆரம்பிக்கப்பட்ட கத்தோலிக்க சபையைத் தவிர, எவராவது எங்கேயாவது எப்போதாவது “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தை ஞானஸ்நானத்தில் உபயோகித்தார்கள் என்பதை எந்த நபராவது எங்கிருந்தாவது எனக்குக் காண்பிக்கும்படிக்கு நான் எவருக்கும் சவாலிடுகிறேன். என்னிடத்திற்கு வந்து அதற்கான வேதவாக்கியத்தையோ அல்லது சரித்திரத்தையோ காணிபியுங்கள். அது ஒரு கத்தோலிக்க கோட்பாடு! அது பிராடஸ்டெண்டுகளுக்கான ஒன்று அல்ல. இப்பொழுது, அவர்கள் அந்த நேரம் வரையில் அவருடைய நாமத்தை உபயோகிப்பார்கள் என்றும், அதன்பின் ஒரு பொய்யான ஒரு நாமத்தைக் கொண்டு, அவர்கள் “உயிருள்ளவர்கள்” என்று பெயர் கொண்டிருந்தும், அவர்கள் செத்தவர்களாயிருக்கிறார்கள் என்று வேதம் எங்கே முன்னுரைக்கிறது என்பதை என்னால் உங்களுக்கு வேதத்தில் காண்பிக்க முடியும். என்னால் வேத வாக்கியத்தின் மூலம் அதை உங்களுக்கு காண்பிக்க முடியும். அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று வேதம் உரைத்துள்ளது. 191 இதோ அது ஜனங்களுடைய முகத்திற்கு நேராக கொண்டுவரப்பட்டிருக்கும்போது, ஏன் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது? அப்படியே சரியாக அவர்கள் இயேசுவின் நாட்களில் செய்தது போலவே உள்ளது. அவர்களுக்கு உண்மைகள் வேண்டியதில்லை. அவர்களுக்கு ஒரு கோட்பாடே தேவையாயுள்ளது. அவர்களுக்கு ஏதோ ஒரு காரியம் வேண்டும், காலம் கடந்து செல்ல, “நான் இந்த இடத்தைச் சார்ந்தவன். நான் இந்த சபையை சார்ந்தவன். நான் சார்ந்திருப்பதோ!” என்று கூறுகிறார்கள். என்ன? 192 நீங்கள் பரலோகத்தைச் சார்ந்தவராயிருக்க வேண்டுமே! அங்கேதான் உங்களுடைய அன்பு இருக்க வேண்டும், மேலான காரியங்களின் பேரில் இருக்க வேண்டும். இயேசு, “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். பூமியிலுள்ளவைகள் ஒழிந்துவிடப் போகின்றன” என்று கூறினார். தேவனோடு தரித்திருங்கள். உண்மைகளோடு தரித்திருங்கள். தேவன் உண்மையின் ஒரே தேவனாயிருக்கிறார். அவர் எல்லாக் காலங்களிலும் எப்பொழுதுமே அதேவிதமாகவே இருந்து வருகிறார். எந்த நேரத்திலும் எப்போதும் தேவனோடு சஞ்சரித்த மனிதனுக்கு தம்முடைய ஜனங்களோடு அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தின ஒரே உண்மையான தேவனானார். அது அவ்வண்ணமாய்ச் செய்யும்படியான தேவனுடைய நோக்கமாயுள்ளது. எல்லாவற்றையும் ஒப்புவியுங்கள். 193 அண்மையில் இங்கே கென்டக்கியில் உள்ள லூயிவில்லில் மிக அருமையான ஜனங்களைக் கொண்ட ஒரு குடும்பம் இருந்தது. அவர்கள் ஒரு சுகவீனமான குழந்தையை உடையவர்களாயிருந்தனர். அதற்காக ஜெபிக்கும்படி அழைத்தனர். அப்பொழுது மருத்துவரோ மருத்துவமனையிலிருந்து நடந்து வந்தார். அவர்கள், “அந்தக் குழந்தையைக் குறித்து என்ன?” என்று கேட்டனர். 194 அதற்கு அவர், “அந்தக் குழந்தை மரித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக ஒன்றுமே செயயப்பட முடியாது, அதற்கு இரத்தத்தில் மிகுதியான வெள்ளை அணுக்களைக் கொண்ட புற்று நோய் வந்துவிட்டது. எனவே அது மரிக்க வேண்டியதாயுள்ளது,” என்றார். 195 அப்பொழுது நான், “ஓ, தேவனே, நீர் அதை இன்னும் கூறவில்லையே. நீர் அதை ஒருபோதும் சாட்சிபகரவேயில்லையே” என்று எண்ணினேன். எனவே நான் சென்று பெற்றோர்களிடத்தில் பேசினேன், பெற்றோர்களோ அழுது கொண்டும், தேம்பியழுது கொண்டுமிருந்தனர். அவர்களுக்குத் தெரிந்திருந்த வரையில் அவர்களுடைய—அவர்களுடைய—அவர்களுடைய குழந்தை மரிக்கும் நிலைக்கு போய்விட்டது என்று எண்ணியிருந்தனர். ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? 196 மருத்துவர் சரியாயிருந்தார். அவர், அவர் செய்யும்படி அறிந்திருந்த ஒவ்வொரு காரியத்தையும், அவர் செய்து விட்டிருந்தார். அதிகமான வெள்ளை அணுக்களைக் கொண்ட இரத்தப் புற்று நோய் ஒரு கொலையாளியாயுள்ளது, அதை ஒன்றுமே தடுத்து நிறுத்த முடியாது. எனவே அவர், “அந்தக் குழந்தை மரிக்கப் போகிறது” என்று கூறிவிட்டார். 197 அந்தக் குழந்தையினுடைய வயோதிக தாத்தா. நீங்கள் எல்லோரும் அந்த சம்பவத்தை அறிவீர்கள். அந்த குழந்தையின் வயோதிக தாத்தாவும் அவர்களோடு வந்திருந்தார். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து நான் பேசுவதை அவர் கேட்டபோது, அவர், “நான் முன்னர் அநேக ஆண்டுகளுக்கு முன்னர், ஜனங்கள் மீண்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு நேரம் வரும் என்றும், அப்பொழுது அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும் என்று ஒரு வயோதிக பிரசங்கியார் கூறியிருந்தது நினைவிற்கு வருகிறது” என்று கூறினார். மேலும் அவர் தாமே ஒரு அறைக்குள் சென்றார். அவர் அதற்குப்பின் தன்னுடைய மகனோடோ அல்லது தன்னுடைய மருமகளோடோ தரித்திருக்க விரும்பவில்லை. எனவே அவர் அங்கே உள்ளே தரித்திருந்து அழுது ஜெபித்துக் கொண்டிருந்தார். அதன்பின் அந்த வயோதிக நபர் அங்கிருந்து வெளியே நடந்து வந்தபோது, அவருடைய வழுக்கைத் தலை நெற்றியில் வியர்வை வழிந்து கொண்டிருந்தது, அவருடைய கண்களோ மின்னிப்பிரகாசித்தன. அப்பொழுது அவர், “அந்தக் குழந்தை பிழைத்துவிடும்” என்றார். அப்பொழுது மருத்துவரோ, “என்ன?” என்று கேட்டார். 198 அதற்கு அவர், “மருத்துவரே, நீங்கள் ஒரு விஞ்ஞானத்தை அறிந்த மனிதன் என்ற காரணத்தினால் நான் உங்களுக்கு மரியாதை அளிக்கிறேன். நான் உங்களுக்கும், மருத்துவ ஆராய்ச்சியினூடாக நீங்கள் கற்றறிந்துள்ள உங்களுடைய அறிவாற்றலுக்கும் மரியாதை அளிக்கிறேன். ஆனால்” என்று கூறி, “நான் ஜெபித்தேன், நான் ஜெபித்தேன், நான் ஒப்புவிக்க வேண்டியிருந்த ஒவ்வொரு காரியத்தையும் நான் ஒப்புவிக்கும் வரையில் ஜெபித்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், ‘அந்தக் குழந்தை பிழைக்கும்’ என்றார்” என்று கூறினார். அது பிழைத்தது. ஏன்? அவருக்கிருந்த ஒவ்வொரு காரியத்தையும் அவர் ஒப்புவித்துவிட்டார். 199 அவர் ஒவ்வொரு காரியத்தையும் ஒப்புவிக்க மனதாயிருந்தபோது, தேவனால் அவரைப் பற்றிப் பிடித்து, அவரிடத்தில் பேச முடிந்தது. அதில்தான் நாம் குறைவுள்ளவர்களாயிருக்கிறோம். நீங்கள் உங்களுடைய வழிகளை ஒப்புவிக்க விரும்புகிறதில்லை. உங்களுடைய சங்கங்களை நீங்கள் ஒப்புவிக்க விரும்புகிறதில்லை. நீங்கள் உங்களுக்குச் சொந்தமான சிறு காரியத்தை ஒப்புவிக்க நீங்கள் விரும்புகிறதில்லை. நீங்கள் ஜெபிப்பதற்கு பதிலாக நீங்கள் இதைச் செய்ய வேண்டும். அதை அல்லது மற்றதை செய்ய வேண்டும் என்று எந்த நேரத்திலுமே நீங்கள் ஒப்புக்கொடுக்க விரும்புகிறதில்லை. நீங்கள் காரியங்களை தேவனிடத்தில் ஒப்புக் கொடுக்க விரும்புகிறதில்லை. நீங்கள் சரணடைய வேண்டும் என்றே தேவன் விரும்புகிறாரே! முடிக்கையில் நான் இதைக் கூற விரும்புகிறேன். இன்னும் முழுமையாய் ஏராளமானவற்றை நான் கூற விரும்புகிறேன், ஆனால் எனக்கு நேரமில்லை. தேவன் ஒரு முழுமையான ஒப்புவித்தலையே விரும்புகிறார். நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும் ஒப்புவிக்கும்போது, அப்பொழுது நான் சத்தியத்தைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். 200 நீங்களோ, “அவர்கள் என்னுடைய சபையிலிருந்து என்னை வெளியேற்றிவிடுவார்கள். அவர்கள் என்னைப் பிரசங்கிக்க அனுமதிக்கமாட்டார்கள்” என்று கூறுகிறீர்கள். அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது? அது ஒரு விஞ்ஞானப் பூர்வமான ஸ்தாபன அமைப்பாயுள்ளது. நாம் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோமென்றால் ஆவியில் சஞ்சரிப்பதைக் குறித்தேயாகும். தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். 201 மோசே, “இப்பொழுது பொறும். இதைக் குறித்த ஆதிக்கம் எல்லாவற்றையுங் குறித்தும், மந்திரவாதிகள் போன்றவற்றைக் குறித்து எகிப்தில் எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. என்னால் எகிப்தியர்களுக்கு சில—சில—சில தந்திரங்களைப் போதிக்க முடியும். என்னால் அவர்களுக்கு மனோத்தத்துவத்தைப் போதிக்க முடியும். என்னால் அவர்களுக்கு அநேகக் காரியங்களைக் குறித்த நெறிமுறைகளைப் போதிக்க முடியும். நான் அதற்கு ஒரு தலைவனாய் இருக்கிறேன்” என்று கூறியிருந்தால் என்னவாயிருக்கும்? ஆனால் அவன் எப்போதும் அறிந்திருந்த ஒவ்வொரு காரியத்தையும் மறக்க வேண்டியதாயிருந்தது. தேவன் அவனிடத்திலிருந்து ஒவ்வொரு காரியத்தையும் அப்படியே கிழித்தெறிந்திருந்தார்; அதைச் செய்ய அவருக்கு நாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் அவன் தேவனை முகமுகமாய் சந்தித்தபோது, ஜீவனுள்ள தேவன் ஒருவர் உண்டு என்பதை அவன் அறிந்து கொண்டான். அவன் எரிகிற முட்செடியில் அவரைக் கண்டான், அவன் அவரிடத்தில் பேசினான். அதன்பின்னர் அவன் புறப்பட்டுப்போய், அந்தப் பணியை அவனே செய்து முடித்தான், அவன் ஒரு சேனையை உடையவனாயிருக்கவில்லை. அவன் தேவனோடு தனியாக சென்றான். அவன் சாலை வரைபடத்தைப் பின்பற்றினான். அவன் தேவனுடைய வல்லமையை உடையவனாயிருந்தான். அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உடையவனாயிருந்தான். அவன் தேவனுடைய ஆவியை உடையவனாயிருந்தான். அவனுக்கு தன்னுடைய நெறிமுறைகளோ அல்லது அவனுடைய கல்வியோ தேவைப்படவில்லை. 202 இயேசு இங்கே பூமியின் மேலிருந்தபோது, அவர் மீண்டும் ஒரு மனிதனைக் கண்டு படிக்க தேட வேண்டியதாயிருந்தது. அவர் மிக உயரிய கல்விபயின்ற மற்றும் அறிவாற்றலுள்ளவர்களிடம் சென்றும், அவரால் எவரையாவது கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லை ஐயா, அவர்கள் அவரை, “பெயல்செபூல், பிசாசு” என்று அழைத்தனர். அவரைப் பின்பற்ற மனதுள்ள ஒருவரையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்ன செய்தார்? அவரால் கண்டறிய முடிந்த மிகச் சிறந்தவரை அவர் தேர்ந்தெடுக்க வேண்டியதாயிருந்தது. அது ஒரு பரிதாபமாயிருக்கவில்லையா? 203 நான் இதைக் குறித்து அவ்வப்போது நினைத்திருக்கிறேன். நாம் முடித்துக் கொண்டிருக்கையில், சபையே இந்த கருத்துக்களுக்கு செவிகொடு. நாம் பெற்றுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அவரிடத்தில், நம்முடைய ஜீவியங்களை அவரிடத்தில் முற்றிலுமாக ஒப்புவிக்காமல், நாம் எப்படி தேவனுடைய திட்டத்தை அவரிடத்தில் களவாடியுள்ளோம் என்றும், நாம் எப்படி நம்மை இழந்துவிட்டிருக்கிறோம், என்ன, ஏன், என்னவென்று அவ்வப்போது நான் நினைத்துப்பார்த்திருக்கிறேன். நாம்—நாம் எப்படி அவருடைய—அவருடைய திட்டத்தை அனுமதிக்காமலிருக்கிறோம். நாம் எப்படி தாமதித்து, அவர் யாரோ ஒருவரினுடாக கிரியை செய்யும்படி கண்டறிய முயற்சிக்கும்படி, ஒவ்வொரு காரியத்தையும் ஒப்புவிக்க மனதாயுள்ள யாரோ ஒரு மனிதனில் அவர் நம்பிக்கை வைக்கும்படி, அந்த மனிதனை எங்காவது கண்டறிய முயற்சிக்கும்படி காத்திருக்க, காத்திருக்க, அவரைக் காத்திருக்கும்படிச் செய்துவிட்டோம். 204 ஒரு நல்லறிவோடு, விவேகமான வழியில் தேவனிடத்தில் வந்து, “பிதாவே, இதோ நான் இருக்கிறேன். நான் எதைப் பற்றிலும் கவலைப்படுகிறதில்லை, நான் வேதத்தை, திட்ட வரைபடத்தை பின்பற்றப் போகிறேன். யார் என்னக் கூறினாலும் கவவலைப்படாமல் நான் அதனோடு தரித்திருப்பேன்” என்று உண்மையாக அதைப் பொருட்படுத்திக் கூறுங்கள். “அது எனக்கு என்ன கிரயமானாலும், கர்த்தாவே, நான் கவலைப்படுகிறதில்லை. நான் துவக்கத்திலிருந்தே ஒன்றுமில்லாதிருக்கிறேன். ஆனால் நீர் என்னை வழி நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த வேதாகமத்தை எழுதின அந்த பரிசுத்த ஆவியானவர், இந்த வாக்குத்தத்தங்களை உண்டுபண்ணினார். என்னுடைய ஜீவியத்தினூடாக அதை திரும்ப உறுதிபடுத்தட்டும். நீர் என்னை அந்தவிதமாகவே வழி நடத்திக் கொண்டிருக்கிறீர் என்பதை நான் உணருகிறேன்” என்று கூறுங்கள். 205 ஏசாயா கேரூபின்கள் தங்கள் முகங்களை செட்டைகளால் மூடி, தங்கள் கால்களை மூடி, மற்ற இரண்டு செட்டைகளில் பறப்பதைக் கண்டபோது, அவன் தேவாலயத்தில், “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்றான். அப்பொழுது அந்த சேராபீன்களில் ஒருவன் ஒரு நெருப்புத்தழலைக் கொண்டு வந்து, அவனுடைய வாயைத் தொட்டான், அதன்பின்னர் தேவனுடைய ஆவி அவன் மீது வந்தது. ஏன் நம்மால் பெற்றுக் கொள்ள முடியாதா? தேவனால் அதைப் போன்ற மனிதனைக் கண்டறிய முடியவில்லை. 206 அவர் தம்முடைய சீஷர்களுக்காகத் தேடினபோது, “அவர் தமக்குச் சொந்தமானவர்களிடத்தில் வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” அவரால் யாரையுமே கண்டறிய முடியவில்லை. அவர்கள் அதற்காக காத்துக்கொண்டிருந்தனர். 207 இன்றைக்கு உலகமானது தெய்வீக சுகமளிதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள்—நீங்கள் எவ்வளவு தான் தெய்வீக சுகமளித்தலைச் செய்தாலும் நான் கவலைப்படமாட்டேன், அவர்கள் இன்னமும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 208 அவர்கள் இயேசுவைப் புறக்கணித்துவிட்ட பிறகு, எழுபது பேரும் விலகிச் சென்றபோது, அவர் அந்த மற்ற சீஷர்களிடத்தில் திரும்பி, “நீங்களும் கூட போய்விட மனதாயிருக்கிறீர்களா?” என்று கேட்டார். 209 அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கே போவோம்?” என்றனர். பேதுரு, அவன், “நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்றான். புரிகிறதா? 210 அவர் புறப்பட்டுச் சென்றபோது, கண்விழிகளேயில்லாமல் வெறுமென விழிப்பள்ளம் மட்டுமே கொண்டிருந்த ஒரு மனிதன் இருந்தான். அப்பொழுது அவர் கொஞ்சம் சேற்றை எடுத்து, அவனுடைய கண்களில் பூசி, “போய் சீலோவாம் குளத்திலே கழுவு” என்று அவனிடத்தில் கூறினார். அவன் கழுவினபோது, அவன் பார்வையடைந்தவனாய்த் திரும்பி வந்தான். 211 அது அவர்களை மாற்றினதா? அவருடைய புகழ் உயர்ந்ததா? இல்லை. அது குறைந்து கொண்டே, குறைந்து கொண்டே, குறைந்து கொண்டே சென்றது. ஏன்? அவர் பாதையில் தர்த்திருந்தார். அவர் சாலை வரைபடத்தின்படி தரித்திருந்தார். 212 அது அதேவிதமாய் இன்றைக்கும் உள்ளது. அவர்கள் அடையாளங்களையும், அதிசயங்களையும், அற்புதங்களையும், ஒவ்வொரு காரியம் நிகழ்ந்ததையும் காண்கிறார்கள். அவர்கள், “ஹா, அது, அது ஒன்றுமேயில்லை. அது எப்படியோ சம்பவித்திருக்கும்” என்கிறார்கள். புரிகிறதா? 213 லாசருவை கல்லறையிலிருந்து உயிரோடெழுப்பினபோது, அது முழு தேசத்தையுமே அசைத்திருக்க வேண்டும் என்பது போல காணப்பட்டது. அவர் அதைச் செய்வார் என்று வேதம் கூறியிருந்தது. அவை பின்தொடர வேண்டியிருந்த அடையாளங்களாயிருந்தன. அவர் சமாரிய ஸ்திரீயண்டை நின்று, “உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்” என்றார். அது முழு உலகத்தையும் அசைத்திருக்க வேண்டியதாயிருந்தது. 214 அவர் இன்றைக்கு தம்முடைய ஜனங்களிடத்தில் நின்று, அவ்வப்போது அதேக் காரியத்தைச் செய்வதை நீங்கள் காண்கிறீர்கள். அவர்களே, “ஹா, உ—ஊ பரவாயில்லை. அது சரியாயிருந்தது என்று நான் யூகிக்கிறேன்” என்று கூறுகின்றனர். பாருங்கள், வெறுமென அக்கறையற்று, சரணடையாமலிருக்கின்றனர். ஓ, அவர்கள் எப்பொழுதாவது ஒருமுறை சபைக்குச் செல்ல கொஞ்சம் நேரம் ஒதுக்குவார்கள், அதைப்போன்ற ஏதோ ஒரு காரியத்தைச் செய்வார்கள். ஆனால் அது ஒரு ஒப்புவித்தலைச் செய்யும்படி வருகிறபோது, அவர்கள் அதைச் செய்யமாட்டார்கள், இல்லை, ஒப்புவிக்கவேமாட்டார்கள். அவர்கள் அதை விரும்புகிறதில்லை. 215 இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்தபோது, அவர் என்ன செய்ய வேண்டியிருந்தது? மிகவும் படிபறிவற்ற மாதிரியான மனுஷரை, தங்களுடைய சொந்த பெயரையும் கூட கையெழுத்திட முடியாத ஜனங்களை அழைத்துக்கொண்டார். “பேதுரு, யோவான்,” வேதமோ “அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களுமாயிருந்தனர்” என்று கூறியுள்ளது. அப்படிப்பட்டவர்களை அவர் அழைக்க வேண்டியதாயிருந்தது. 216 ஆனால் அறிவாற்றல் கொண்டவர்களாயிருந்தால், அப்பொழுது அவர்கள் அவர் பேசுவதைக் கேட்டிருக்கமாட்டார்கள். அவர்கள் இப்பொழுதும் அவர் பேசுவதைக் கேட்கமாட்டார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த மார்க்கத்தைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த பாதையில் இருக்கின்றனர். அவர்கள் அந்தவிதமாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறபடியால், அவர்கள்—அவர்கள் அந்தப் பாதையைப் பின்பற்றுகிறார்கள், ஏனென்றால் அவர்களுடைய மேய்ப்பர்கள், அவர்களுடைய—அவர்களுடைய பேராயர்கள், அவர்களுடைய போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்கள், போப்பாண்டவர்கள், இன்னும் யாரெல்லாம் உள்ளார்களோ அவர்கள்தான் அந்தப் பாதையில் அவர்களை நடத்துகின்றனர். 217 ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு முறையும் உங்களை பெந்தேகோஸ்தேவிற்கு திரும்பக் கொண்டுவருவார். அது வேதத்தில் ஒவ்வொருவருக்கும் என்ன செய்ததோ, அது இந்த நாளிலும் ஒவ்வொருவருக்குமானதாய் இருக்கும். அது உங்களை அந்த உண்மைக்குத் திரும்பக் கொண்டுவரும். அது உங்களை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் வல்லமைக்குத் திரும்ப கொண்டுவந்து, உங்களை வழி நடத்தும், அது ஒருபோதும் வேதாகமத்திலிருந்து ஒரு வார்த்தையும் எடுத்துப் போடாது. அது வேதத்தில் சரியாக தரித்திருக்கும். அது எங்கே இதைக் கூறுகிறதோ, அது அதனூடாக சரியாக பின் தொடரும். பரிசுத்த ஆவியானது பின் தொடரும். அது ஒரு உண்மையைக் கொண்டு வருகிறது. 218 அவர் என்ன செய்தார்? அவர் இந்த படிப்பறிவில்லாத செம்படவர்களை தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது, அவர்கள் சரியான ஆடைகளை கூட உடுத்தியிருக்கவில்லை, வெறுமென அவர்களைச் சுற்றி ஏதோ ஒரு மீன்களை வைக்கும் துணியில், அது போன்ற ஏதோ ஒன்றில் தங்களை சுற்றிக்கொண்டு, சரியான ஆடையேயில்லாமலிருந்தனர். அவ்வளவு படிப்பறிவில்லாதவர்கள், அவர்கள் தங்களுடைய பெயரையும் கையொப்பமிட முடியாது; படிப்பறிவற்றவர்கள், கல்வியறிவே இல்லாதவர்கள். ஆனால் அவர் யாரோ ஒருவரை கண்டு பிடித்தார். அவர் யாரோ ஒருவரை கண்டறிய வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர் மனப்பூர்வமாய் ஒப்புவிக்கக் கூடிய அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்த மனுஷரைக் கண்டுபிடித்தார், அது மனப்பூர்வமானதாயிருந்தது. அவர்கள் வேறெந்த ஒரு காரியத்தையும் பற்றிக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கவில்லை. அவர்கள் எந்த சபைகளையும், ஸ்தாபனங்களையும், மற்ற எந்தக் காரியத்தையும் உடையவர்களாயிருக்கவில்லை. அவர்கள் வெறுமென படிப்பறிவில்லாத செம்படவர்களாய், ஆடு மேய்ப்பவர்களாய் இருந்தனர்; அவர்களுக்கு எப்படி எழுத வேண்டும் என்று தெரியாதிருந்தது, எப்படி படிக்க வேண்டும் அல்லது வேறெந்தக் காரியமும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் எந்தக் காரியத்தையும் இழக்க வேண்டியதாயிருக்கவில்லை, அவர் அவர்களைத் தெரிந்துகொண்டார், அவர்கள் அதை ஒப்புவித்தனர். அவர்கள், “கர்த்தாவே, நீர் என்னக் கூறினாலும், நாங்கள் அதைச் செய்வோம். நாங்கள் உம்மைப் பின்பற்றுவோம்” என்றனர். 219 ஆனால் அவர்கள் முற்றிலும் சரணடைந்து, தங்களையே தேவண்டை அளித்தபோது, தேவன் அவர்களுக்கு ஒரு பெந்தேகோஸ்தே உண்மையை அளித்தார். அவர் அவர்களை பெந்தேகோஸ்தேவிற்கு வழிநடத்தி, பரிசுத்த ஆவியை அவர்களுக்கு அளித்தார். அங்கே, அவர்கள் அங்கே தேவ ஆவியின் கீழிருந்து, எல்லாவிதமான முட்டாள்தனமான அடையாளங்களையும், ஜனங்களிடத்தில் செய்துகொண்டிருந்தனர், தொடர்ந்து பரியாச உதடுகளினால் பேசிக்கொண்டிருந்தனர்…என்று வேதம் உரைத்துள்ளது. அவர்கள் எதன் மேல் இருந்தனர்? அவர்கள் நெடுஞ்சாலையின் மேல் இருந்தனர். 220 வேதம், “பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் நான் இந்த ஜனத்தோடே பேசுவேன், இதுவே ஆத்தும இளைப்பாறுதல்” என்று கூறியுள்ளது. இதுவே வரப்போகும் காரியமாயுள்ளது. ஏசாயா 28:18- ல் அதை வாசித்துப் பாருங்கள். “பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் நான் இந்த ஜனத்தோடே பேசுவேன். இதுவே இளைப்பாறுதல்.” ஞாயிற்றுக்கிழமை அல்ல; இளைப்பாறும் நாளில் அல்ல. பரிசுத்த ஆவியே இளைப்பாறும் நாளாய் உள்ளது. ஏழாம் நாள் ஆசரிப்புக்கார சகோதரரே உங்களைத்தான், ஒய்வு நாளான ஏழாம் நாள் இளைபாறுதல் அல்ல. பரிசுத்த ஆவியே இளைப்பாறுதலாய் உள்ளதே! “பரியாச உதடுகளினாலும், அந்நிய பாஷையினாலும் நான் இந்த ஜனத்தோடே பேசுவேன். இதுவே ஓய்வு. இதுவே அதுவாகும்!” “ஓய்வு” என்றால் இளைப்பாறுதல் என்று பொருள்படுகிறது. இதுவே ஆத்துமாவுக்கு இளைப்பாறுதலாய் உள்ளது, நீங்கள் நித்திய இளைப்பாறுதலை உடையவராயிருக்கிறீர்கள். 221 தேவனைப் போன்றே, அவர் உலகத்தை உண்டாக்கினபோது, அவர் அதன்பின்னர் ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். அவர் ஓய்ந்திருந்தார், அவர் இளைப்பாறச் சென்றார். 222 நாம் தேவனுக்குள்ளாக பிரவேசிக்கும்போது, நாம் எல்லா நேரத்திலும் இளைப்பாறுகிறோமேயன்றி ஒரு ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மற்றொன்றிற்கு அல்ல. நாம் நித்தியமாய் இளைபாறுகிறோம். நாம் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம். பரிசுத்த ஆவி உங்களுக்கு இளைப்பாறுதலை அளிக்கிறார். 223 இப்பொழுது, அவர்கள் ஒரு பெந்தேகோஸ்தே அனுபவத்தை, ஒரு தேவனுடைய உண்மையை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் ஏதோ ஒன்றை கண்டறிந்திருந்தனர். 224 நான் இன்னும் ஒரு காரியத்தைக் கூறட்டும். ஸ்தாபன கோட்பாடுகள் ஒரு பசியுள்ள இருதயத்தைத் திருப்திபடுத்துகிறதில்லை. கோட்பாடுகள் திருப்திபடுத்தாது. ஒரு மனிதன் தேவனுக்காக பசியாயிருந்து கொண்டிருந்தால், நீங்கள் அவனிடத்தில், “அப்போஸ்தல பிரமாணத்தைக் கூறி, சபையில் சேர்ந்துகொண்டு, உன்னுடைய பெயரை இங்கே பதிவு செய், தெளிக்கப்படும் அல்லது முழுக்கு ஞானஸ்நானம் பெற்றுக்கொள்” என்று சொல்லிப் பாருங்கள் அல்லது நீங்கள் என்னவெல்லாம் கூற விரும்பினாலும், அது ஒரு பசியுள்ள ஆத்துமாவை ஒருபோதும் திருப்திபடுத்தாது. காரணம் அவர்கள் ஜீவனுக்காக ஆராய்ந்து பார்க்கும்படி தேவனால் முன் குறிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஒரு காலத்தில் தூதர்களாயிருந்தனர், ஒரு காலத்தில் தூதர்களின் ஸ்தானத்தில் இருந்தபோது விழுந்து விடவில்லை. பரலோகத்தின் தூதர்களில் மூன்றில் இரண்டு பாகம் விழுந்து போயினர்; அந்த பொல்லாத ஆவிகளே ஜனங்கள் மத்தியில் கிரியை செய்கின்றன, மிகவும் பயபக்தியானவை. வேதம் அதைக் கூறுகிறதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இங்கே எப்பொழுதுமே சரியாயிருந்ததில்லை. நீங்கள் ஒரு காலத்தில் வேறெங்கோ இருந்தீர்கள். 225 பாவம் பூமியில் துவங்கவில்லை என்பது நினைவிருக்கட்டும். பாவம் பரலோகத்தில் துவங்கினது, அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி…அவன், “எனக்கு ஒரு ஸ்தாபனம் தேவை, ஒரு மிகப் பெரிய காரியத்தை உண்டுபண்ண வேண்டும்” என்று கூறி, தேசத்தின் வடப்பக்கம் சென்று, மிகாவேல் கொண்டிருந்ததைக் காட்டிலும் ஒரு மேலான காரியத்தை ஸ்தாபித்தான். அப்பொழுது அவன் பரலோகத்திலிருந்து உதைத்துத்தள்ளப்பட்டான். 226 அந்தத் தூதர்கள் முன்னர் அங்கே ஆவிகளாய் இருந்தனர். அந்தக் காரணத்தினால்தான், “இந்த பூமிக்குரியக் கூடாரம் அழிந்துபோகும்போது, நமக்கு ஏற்கெனவே ஒன்று காத்திருக்கிறது.” புரிகிறதா? அந்தக் காரணத்தினால்தான், “உலகத்தோற்றத்திற்கு முன்னே நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.” “பிதாவானவர் எனக்கு கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” 227 உங்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? “உங்களுக்கு கண்கள் இருந்தும் காண முடியாது: காதுகள் இருந்தும் கேட்க முடியாது” என்பதில் வியப்பொன்றுமில்லை, பாருங்கள். அங்கே இந்த எல்லாக் காரியங்களையும், பாருங்கள், அதாவது தேவன் அங்கே முன்னமே வாக்குப்பண்ணினார், அது யாவுமே… அன்றொரு இரவு நான் ஒரு மனிதனைக் குறித்துக் கூறினபோது… 228 இயேசு கூறினார். பூமியின் மீது வருகிறதான மிருகமான அந்திக்கிறிஸ்து மிகவும் பக்தியானதாயிருக்கிறபடியால், “அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவிற்கு மிகவும் நெருக்கமாயிருக்கும்.” மகத்தானதாய், எப்படியாய் பெரிய ஸ்தாபனமாய்த் துவங்கும், அவர்கள் மற்ற ஸ்தாபனங்களையும் உடையவர்களாயிருப்பர். அந்த பண்டைய தாய் வேசி; அவள் சிறு குமாரத்திகளை உடையவளாயிருந்தாள், அவர்களும் ஸ்தாபனங்களால் வேசிகளாய்ப் போய்விட்டனர். அதாவது, “அவைகள் கிட்டத்தட்ட முழு உலகத்தையே வஞ்ச்சிக்கும், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் கூட வஞ்ச்சிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. 229 ஆனால் அது கூடாத காரியம்; அவர்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் இருந்தன. “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைபடுத்தியுமிருக்கிறார்.” ஆகையால் இனிமேல் ஒன்றுமில்லை, நீங்கள் பாருங்கள். அது உண்மை. தேவன் உங்களை அழைத்தாலொழிய உங்களால் வர முடியாது. “ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.” அது சரியே. அது அவ்வாறுதான் உள்ளது என்று அதைத்தான் வேதம் உரைத்துள்ளது. 230 ஆகையால் அவர்கள் அதற்கு செவிகொடுக்க விரும்புகிறதில்லை. ஏன்? அவர்கள் அந்தகாரத்தில் இருக்கின்றனர். அவர்கள் கோட்பாட்டைப் பின்பற்ற விரும்புகின்றனர். “உங்களைப் போலவே நானும் நல்லவனாகவே இருக்கிறேன்.” நன்மையானதைக் குறித்து ஒன்றுமே கூறப்படவில்லை. யாருமே நல்லவர் இல்லை. அது தேவனே நல்லவராயிருக்கிறார் என்பதாகும், பாருங்கள். ஆனால் நீங்கள் அவரிடத்தில் ஒப்புவிக்க மனப்பூர்வமாயிருக்கிறீர்களா? அதைத்தான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சரணடைய ஆயத்தமாயிருக்கிறீர்களா? புரிகிறதா? அது ஒரு பசியாயுள்ள ஆத்துமாவை திருப்திபடுத்தாது. கவனியுங்கள். 231 பவுல், அவன் ஒரு—அவன் ஒரு வேத பண்டிதனாயிருந்தான் என்பதை எத்தனைபேர் அறிந்திருக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஆனால் அவன் ஒரு மாபெரும் அறிவாற்றல் கொண்ட மேதையாயிருந்தான். அவன், நிச்சயமாகவே, அந்நாளில் மிகச் சிறந்த வேதபண்டிதர்களில் ஒருவரான கமாலியேலின் கீழிருந்து கற்பிக்கப்பட்டிருந்தான். ஆனால் அவன் சபைக்கு வந்தபோது அவன் என்னக் கூறினான்? கொரிந்தியர் இரண்டாம் நிரூபத்தில் 2-ம் அதிகாரம் 4-ம் வசனத்தை வாசித்துப் பாருங்கள். கொரிந்தியர் இரண்டாம் நிரூபம் 2-ம் அதிகாரம் 4-ம் வசனத்தில் அவன், “நான் உங்களிடத்தில் நயவசனிப்பான வார்த்தைகளோடும், இப்பிரபஞ்சத்தின் மனிதனுடைய ஞானத்தோடும் வரவில்லை; ஏனென்றால் நான் அப்படி வந்திருந்தால், உங்களுடைய நம்பிக்கை மனிதனுடைய ஞானத்தின் மேலும், ஸ்தாபன அமைப்புகள், மற்றும் ஸ்தாபனங்களின் பேரிலும் கட்டப்பட்டிருக்கும். ஆனால் நான் உங்களிடத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமையில் கிரியைகளை காண்பிக்குபடிக்கு வந்துள்ளேன். என்ன கிரியைகள்? பரிசுத்த ஆவியினால் அடையாளங்களையும், அதிசயங்களையும் காண்பித்தல். நான் உங்களிடத்திற்கு வந்தபோது…அதாவது உங்களுடைய—விசுவாசம், ஏதோ ஒரு சபையின் பெரிய ஸ்தாபன ஞானத்தின் பேரில் சார்ந்திருக்கவில்லை, ஆனால் அது பரிசுத்த ஆவியின் வல்லமையின் பேரிலும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் பேரிலும் சார்ந்திருந்தது” என்றான். எப்போதும் வாழ்ந்திருந்ததிலேயே மகத்தான வேதபண்டிதன், முறைப்படி கிறிஸ்துவைக் கண்டறிய அவன் அறிந்திருந்த ஒவ்வொரு காரியத்தையும் தான் மறக்க வேண்டியதாயிருந்தது என்று அவன் கூறினான். மேலும் அவன், “நான் அறிவாற்றலுள்ள காரியங்களைப் பிரசங்கிக்கிறதில்லை. நான் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் எளிமையைப் பிரசங்கிக்கிறேன். நான் அதைப் பிரசங்கிக்கவே உங்களிடத்திற்கு வந்தேன்” என்றான். அவன் தொடர்ந்து, “என்னால் வேறு விதமாகவும் பிரசங்கிக்க முடிந்தது, ஆனால்” என்று கூறி, “என்னுடைய கிரியைகள்—என்னுடைய—என்னுடைய கிரியைகள் அந்தவிதமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கவில்லையா” என்றான். 232 “இப்பொழுது, நாம் இந்த ‘34” அல்லது ’44-ல் பத்து இலட்சத்திற்கு அதிகமானோரை சேர்க்க முடியாதா என்று நாம் பார்ப்போம், அது என்னவாயிருக்கிறதென்றால் அதாவது அதுவே அவர்களுடைய சுலோகங்களாயுள்ளன: “நாம் அநேக அங்கத்தினர்களை இந்த வருடம் சேர்த்துவிட வேண்டும்.” 233 அவன், “என்னால் அதைச் செய்ய முடியும். நான் அதை நீண்ட காலமாக உடையவனாயிருந்தேன், ஆனால் நான் அதிலிருந்து விலகிச் சென்றுவிட்டேன். நான் உங்களிடத்தில் நயவசனிப்பான மற்றும் யாரோ ஒரு வேதபண்டிதனின் பெரிய வார்த்தைகளோடும் வரவில்லை. உங்களுடைய விசுவாசம் சில மனுஷரின் ஞானத்தினால் கட்டப்படாமல், பரிசுத்த ஆவிக்குள் கட்டப்படும்படிக்கு வல்லமையிலும், பரிசுத்த ஆவியின் கிரியைகளினாலும் நான் உங்களிடத்திற்கு வந்தேன்” என்று கூறினான். ஓ, என்னே! 234 தேவன் அப்படிபட்ட மனுஷர்களையே தேடிக்கொண்டிருக்கிறார். தேவன் அதைப் போன்று பற்றிப்பிடிக்கக் கூடிய மனுஷர்களையே இன்றைக்கு அவர் தேடிக் கொண்டிருக்கிறார். 235 அண்மையில் லண்டனில், இங்கிலாந்தில் சற்று தூரம் நடைபயணம் செய்தேன். இங்கிலாந்து தேசத்தில் உள்ள பிரிட்டிஷ் ஜல்ஸ் என்ற இடம் ஜனங்களால் நிரம்பி வழியப்பட்டிருக்கும். இங்கிலாந்தில் உங்களால் ஒரு சிறு காலி இடத்தைக் கூட கண்டறிய முடியாது, ஆனால் அந்த சிறு இடத்திலும் ஒரு வீடு கட்டப்பட்டிருக்கும். அவர்கள் தங்களுடைய…ஜெர்மெனி போன்றவைகளில், அவைகள் பழமைவாய்ந்த நாடுகளாயிருக்கின்றன, அங்கே நிலங்கள் சீர் செய்யப்படாமல் உள்ளன. அவர்களோ ஒரு தோட்டம் அமைத்திருப்பர். ஜெர்மனியிலும் அதைப் போன்ற இடங்கள் உள்ளன. ஆனால் உங்களால் இங்கிலாந்தில் வீட்டின் கொல்லைப் புறத்தில் கொஞ்சம் அருமையான வயல்வெளிப் புற்கள் மற்றும் ஏராளமான மரங்களைக் காண முடியாது. நீங்கள் தக்காளிச் செடிகள் மற்றும் அவரை, உருளைக்கிழங்கு, மற்றும் புசிப்பதற்கு ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டறியலாம். அவர்கள் அதைச் செய்ய வேண்டியதாயுள்ளது. நிலங்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும்… 236 அங்கே சுற்றும் முற்றும் பார்த்து என்னோடு பேசிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் இராணுவ வீரனோடு நானும், இந்தப் பையனும், சகோதரன் பாக்ஸ்டர் அவர்களுமாக அங்கிருந்த குன்றின் உச்சிக்கு ஏறிச் சென்றோம். நாங்கள் அழகாயிருந்த ஒரு இடத்தண்டை வந்தோம். அங்கே மரங்களும், பசுமையான புற்களும் இருந்தன. அப்பொழுது நான், “அது ஒரு அழகான இடமாயிருக்கிறதல்லவா!” என்று எண்ணினேன். அப்பொழுது நான் இந்த இராணுவ வீரனிடம் கூறினேன், நான், “ஐயா, நான்—நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களுடைய தீவு இங்கே முழுவதும் ஆகிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை நான் காண்கிறேன். ஆனால் அதே சமயத்தில் பல ஏக்கர்களைக் கொண்ட இந்த ஒரு பெரிய இடம் மட்டும் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் மரங்களால் நிறைந்த ஒரு பள்ளத்தாக்காய், அழகான இடமாய் ஏன் உள்ளது என்றும், நீங்கள் ஏன் அதை காலியாக விட்டுவிட்டீர்கள் என்றும், ஏன் எவருமே இங்கு ஒரு வீடு கூட கட்டவில்லை?” என்றும் கேட்டேன். 237 அப்பொழுது அவன், “சங்கை அவர்களே, நான்—நான் இதைக் கூற விரும்புகிறேன். ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே இங்கிலாந்தில் மிகவேகமான பரவக்கூடிய தொற்று நோயான கறுநீர்க்காய்ச்சல் பரவியது” என்றான். மேலும், “அவர்கள் அதற்கு தடுப்பு மருந்து வைத்திராதபடியால் ஜனங்கள் ஈக்களைப் போல மரித்து வந்தனர்” என்றான். தொடர்ந்து அவன், “வாகனங்கள் இரவும் பகலும் இந்த இடத்திற்கு வந்த வண்ணமாயிருக்கும் என்று அவர்கள் என்னிடம் கூறினர். அவர்கள் மரித்தவர்களை அடக்கம் பண்ணக்கூட முடியவில்லை. எனவே குருமார்கள் இங்கு வெறுமென வந்து, எப்பொழுதாவது ஒரு முறை தங்களுடைய கரங்களை உயர்த்தி ஜெபித்துவிட்டு, திரும்பிச் சென்றுவிடுவர். அதன்பின்னர் அவர்கள் மரித்த அனைவரையும் இங்கே இந்தப் பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்துவிடுவார்களாம். அப்பொழுது அவர்களால் இறந்தவர்களை அடக்கம் கூட செய்ய முடியாமற்போயிற்றாம்” என்று கூறினான். மேலும் அவன், “பிள்ளைகள், பெரியவர்கள், வாலிபர்கள் மற்றும் அநேகர், இலட்சக்கணக்கானவர் மரித்தார்களாம், அவர்கள் மரித்துக் கொண்டேயிருந்தார்களாம். அவர்கள் அதன்பின்னர் அங்கிருந்து மண்ணை எடுத்து, மரித்தவர் மீது தூவினார்களாம்” என்றான். 238 அவன் தொடர்ந்து, “பின்னர் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். மேலும் அவன், “அந்த நாள் முதற்கொண்டு இதுவரை ஆங்கிலேயன் அதுபோல ஒரு காலத்தில் இருந்த அதன் மேல் தன்னுடைய அஸ்திபாரங்களைப் போட்டு எதையும் கட்டுவதில்லை என்று மிக உறுதியாய் இருக்கிறான். அதுபோன்ற காரியங்களின் மேல் அவன் கட்டும்படி எந்த அஸ்திபாரத்தையும் போடவே மாட்டான்…அவன் மரித்தோர் கிடந்த அதைபோன்ற ஒரு இடத்தின் மேல் ஒருபோதும் தன்னுடைய வீட்டை கட்டவேமாட்டான்” என்று கூறினான். நான் அங்கு சற்று நின்று யோசித்துப் பார்த்தேன். அவனிடத்தில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அவன் அதைப் புரிந்து கொள்ளமாட்டான். 239 ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கறுநீர்க்காய்ச்சலில் இறந்தவர்கள் கிடந்த அந்த நிலத்தில் ஏற்படும் விளைவை எப்படி இந்த உலகில் உள்ள ஒரு நபர் மிக உத்தமமாய் எதிர் நோக்கிப் பார்க்க முடிகிறது? நீங்கள் அங்கே எப்போதாவது உங்களுடைய வீட்டைக் கட்டிவிட்டால், அப்பொழுது உங்களுக்கு கறுநீர்க் காய்ச்சல் வந்துவிடலாம் என்று நீங்கள் கொஞ்ச காலம் வாழக்கூடிய வாழ்க்கையைக் குறித்து அவ்வளவு அக்கறையும், மிகுந்த சந்தேகமும் உடையவர்களாயிருக்கிறீர்கள். அப்படியானால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மரித்த சில மனிதனால்-உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளின்பேரில் நீங்கள் உங்களுடைய நித்திய பயண இலக்கினை வைக்க விரும்புகிறீர்களே, ஏதோ ஒரு வேத சாஸ்திரத்தின் பேரில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஒரு அலமாரியில் கிடந்து வருகிற ஒரு சபையின் வேத சாஸ்திரத்தின் பேரில் உங்கள் நித்திய பயண இலக்கினை வைக்க மனதாயிருக்கிறீர்கள்; அவர்களுக்குள் ஒரு தேவனுடைய அசைவும் இல்லை, எந்த ஒரு காரியமும் இல்லை. நீங்கள் உங்களுடைய பெயரை, கோட்பாடு மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் சரியாக அங்கே பதித்து, தொடர்ந்து வாழ விரும்புகிறீர்கள். கவனியுங்கள், நண்பனே, நீங்கள் அதைச் செய்யாதீர்கள். 240 “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடும், உங்களுக்குள் இருக்கிறேன்; இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” 241 தேவன் உண்மையின் ஒரே தேவனாயிருக்கிறார். ஒரு கோட்பாட்டை எடுத்துக்கொள்ளாதீர்கள். ஒரு உணர்ச்சிவசப்படுதலை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு உண்மையை எடுத்துக்கொள்ளுங்கள்! ஒரு உண்மையான தேவனை, தேவனாயிருக்கிற உண்மையின் ஒரே தேவனை ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு உறுதியை அளிக்கிறது. அது உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. அது உங்களுக்கு விசுவாசத்தை அளிக்கிறது. அது உங்களுக்கு ஆவியை அளிக்கிறது. அது உங்களுக்கு அடையாளங்களை அளிக்கிறது. அது உங்களுக்கு அதிசயங்களை அளிக்கிறது. அது கிறிஸ்துவுக்குள் செய்தது போன்றே உங்களுக்குள்ளும் செய்கிறது. ஏனென்றால் தேவனை மனிதணன்டை கொண்டு வருவதே அவருடைய வருகையின் நோக்கமாயிருந்தது, தேவனையும் மனிதனையும் ஒன்றாக்கினார். 242 ஆனால் நாம் ஸ்தாபனங்களை ஏற்றுக்கொண்டு, அவரை வெளியே துரத்திவிட்டோம்; கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு அவரை வெளியே துரத்திவிட்டோம். இப்பொழுது நாம் இங்கே பக்க வழிகளில் இருக்கிறோம். ஆனால் ஒரு உண்மையான மெய்யான பெரும்பாதை உண்டு, பெரும்பாதையில் “ஒரு வழி” உண்டு. 243 இப்பொழுது நசரேய ஸ்தாபன சகோதரர்களாகிய உங்களுக்கு நான் இதைக் கூற விரும்புகிறேன். நீங்களோ, “அந்த ஆசீர்வதிப்பட்ட பண்டைய பெரும்பாதை” என்று கூறுகிறீர்கள். 244 நீங்கள் கவனிப்பீர்களேயானால், அது பெரும்பாதையாயிருக்கவில்லை. அதாவது, “ஒரு பெரும்பாதை உண்டு மற்றும்” மற்றும் என்ற ஆங்கில இடைச் சொல்லுக்குப் பிறகு “ஒரு வழி” என்று கூறப்பட்டுள்ளது. “அந்த வழி” பெரும்பாதையில் உள்ளது. எல்லோரும் அந்தப் பெரும்பாதையில் போய்க் கொண்டிருக்கவில்லை, ஆனால் எல்லாம் அந்த “வழியில்” உள்ளது, அது ஒரு போகிற வழியாய் உள்ளது. புரிகிறதா? “ஒரு பெரும்பாதை உண்டு, மற்றும்…” ஏசாயா 35-ஐ வாசித்துப் பாருங்கள், “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்” என்று உள்ளது. புரிகிறதா? அந்தப் பெரும்பாதை ஒரு மையத்தைக் கொண்டுள்ளது, அது பாதையின் மையத்தில் உள்ளது. பாதையின் மையத்தில் எங்கே உள்ளது. ஆகையால் மழை வரும்போது, அது எல்லாவற்றையும் அந்த பக்கவாட்டில் அடித்துக் கழுவிச் சென்றுவிடுகிறது. 245 இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஒரு மனிதன் மனமாற்றமடையும்போது, அவன் தன்னுடைய கண்களை நேராக கிறிஸ்துவின்மேல் வைக்கிறான். இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், அன்றொரு இரவு நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோல… 246 யாக்கோபும் ஏசாவும் பிறந்தபோது, அவர்கள் ஒரு பரிசுத்தமான தகப்பனுக்கும், ஒரு பரிசுத்தமான தாயுக்குமே பிறந்திருந்தனர். ஆனால் அவர்கள் இரட்டையர்களாயிருந்தனர். ஒருவன், ஒரு மாம்சபிரகாரமான மனிதனாய், பக்தியாயிருந்து, சபைக்குச் சென்று, ஒரு நல்ல, மிக நல்ல மனிதனாயிருந்தான். யாக்கோபு ஒரு வஞ்சகமானவனாயிருந்தான், ஆனால் அவன் தன்னுடைய சிந்தையில் ஒரு காரியத்தை உடையவனாயிருந்தான். அந்த சேஷ்ட புத்திகாரமே அவனுக்கு ஒவ்வொரு காரியத்திலும் குறியாயிருந்து வந்தது, அவன் அதை எப்படி பெற வேண்டியதாயிருந்தாலும் அதைக் குறித்துக் கவலைப்படாதிருந்தான். காரணம் வேதம், “அவன் அதை எதிர்நோக்கியிருக்கும்படி உலகத்தோற்றத்திற்கு முன்னே அவன் தெரிந்துகொள்ளப்பட்டிருந்தான்” என்று உரைத்துள்ளது. 247 இன்றைக்கு உள்ள ஜனங்கள், அவர்கள் எவ்வளவுதான் புகழை பயன்படுத்திக்கொண்டாலும், எவ்வளவுதான் அவர்கள் புகழை இழக்க வேண்டியிருந்தாலும் அல்லது அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தாலும் நான் கவலைப்படுகிறதில்லை, அவர்கள் பண்டைய நாகரீகத்தவர் என்று அழைக்கப்பட்டாலும் அது அவர்களுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை. அவர்கள் என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், நித்திய ஜீவனுக்கென்று அவர்கள் முன்குறிக்கப்பட்டிருக்கிற காரணத்தால், அவர்கள் கிறிஸ்துவின் மேல் தங்களுடைய கண்களை வைத்திருக்கின்றனர். அவர்கள் அதன்பேரில் சரியாக நடுகிறார்கள். அது எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டாலும், அது அவர்கள் பெற்றுள்ள ஒவ்வொருகாரியத்தையும் எடுத்துக் கொண்டாலும், அவர்கள் அங்கே நடுகிறார்கள். 248 மற்றொரு பெயரளவிலான ஒரு மனிதன் இருக்கிறான். அவன் சபைக்குச் சென்று, மற்றவர்களைப் போன்றே நலமாக உணர்ந்து வீட்டிற்குச் சென்று விடுகிறான். பாருங்கள், அதுதான் ஏசாவினுடைய வாழ்க்கையாயுள்ளது, பாருங்கள். மற்றொன்று ஒரு யாக்கோபுடைய வாழ்க்கையாயுள்ளது. இப்பொழுது அங்குதான் உங்கள் காரியமே உள்ளது, இரு பக்கங்கள். 249 கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் அஸ்திபாரத்தை நாட்டுங்கள்! அது அவருக்குள் இருக்கிறது என்று உறுதியாயிருங்கள். நீங்கள் எப்படி அவருக்குள் சென்றடைகிறீர்கள்? கரங்களை குலுக்குவதன் மூலமாக, தெளிப்பதனாலா, எதன் மூலமாக? “ஒரே ஆவியினாலே,” I கொரிந்தியர் 12-ல் “நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டோம்” என்று உள்ளது. ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம், அங்கே ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் மற்றும் நான்கு ஆவிக்குரிய உத்தியோகங்கள் அந்த ஒரே சரீரத்திற்குள் இருக்கின்றன. அங்கே தேவன் சபையில் அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகள் போன்றவர்களை இந்த சபையில் ஏற்படுத்தியிருக்கிறார். அங்கே அதில் சுகமளிக்கும் வரங்களும், அற்புதங்களும், அந்நிய பாஷை பேசுதலும், ஞானமும், அறிவும் உள்ளன, மேலும் விசுவாசியைப் பின்தொடருகின்ற காரியங்களும் (அடையாளங்கள்) உள்ளன. 250 கன்மலை முழுவதும் தேனால் நிரம்பியிருக்கும்போது, ஏன் ஜனங்கள் சில பண்டைய திருச்சபையின் களைகளை பெற்றுக்கொள்ள மனதாயிருக்கிறார்கள்? நீங்கள் ஏன்…நீங்கள் ஏன் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று…என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னே, என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 251 நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. நீங்கள், “தேவனே என்னுடைய இருதயத்தின் வாஞ்சையை எனக்குத் தாரும். நான் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறேன்” என்று கூறி, ஜெபத்தில் நினைவு கூறப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? 252 எங்கள் பரலோகப் பிதாவே, ஆராதனைக்குப் பின்னர் சில சமயங்களில் நான் வியப்புறுகிறேன். ஏன் பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து சபையை இடிக்கிறார்? அவர் எப்படி அதை செய்கிறார்? அதே சமயத்தில் ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட மனிதனால் அவர்கள் கூற விரும்புகிறதைக் கூற முடியாது, அவர்கள் ஆவியானவர் கூறுகிறதையே கூற வேண்டுமே. தங்கத்தை அடித்து சுத்தமாக்குபவர்களை நாங்கள் பண்டைய வேதத்தில் கண்டறிகிறோம், தங்கத்தை அடிக்கிறவன் அதை அடித்து, அதைத் திருப்பி மீண்டும் மீண்டும் அதனுடைய எல்லாக் கசடுகளும் அதிலிருந்து போகும்வரை அடிக்கிறான்; அவன் தன்னுடைய சொந்த உருவம் தங்கத்தில் பிரதிபலிப்பதைக் காணும் வரையில் அவன் அதை அவ்வளவு நீண்ட நேரம் அடிக்கிறான், அதன்பின்னரே அது சுத்தமாயிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறான். ஆகையால் பரிசுத்த ஆவியானவர் சபையை அடித்து, அதைத் திருப்பிப் போட்டு, இதற்காக அதைக் கண்டித்து, அதற்காக அதைக் கண்டித்து, அவர் எல்லா கசடுகளும் போகும்வரையில், தம்முடைய ஜனங்களில் உண்மையான இயேசு கிறிஸ்துவின் பிரதிபலிப்பு பிரதிபலிக்கும் வரையில் அடிக்கிறார்; அதன்பின்னரே அவர்கள் அதே ஜீவனை உடையவர்களாயிருக்கிறார்கள், அதே அடையாளங்களை, அவர் செய்த அதே அற்புதங்களைச் செய்கிறார்கள், பரிசுத்த ஆவியின் பிரதிபலிப்பு ஜனங்களுக்குள் உள்ளது. 253 தேவனே, பரிதாபமான என்னுடைய இருதயத்தை ஏற்றுக்கொள்ளும். என்னை அடியும், என்னை சுற்றி திருப்பி, கர்த்தாவே, நீர் விரும்புகிற எந்த விதத்திலும் அடியும், ஆனால் நான் இயேசுவை பிரதிபலிப்பேனாக. கர்த்தாவே நான் அவரை பிரதிபலிக்கட்டும். இன்றைக்கு இங்குள்ள எல்லா ஜனங்களும், கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் உம்மை பிரதிபலிப்போமாக; உம்முடைய அன்பின் ஜீவியத்தை, பிதாவினிடத்திலிருந்த உம்முடைய கீழ்படிதலை பிரதிபலிப்போமாக. 254 நீர் உம்முடைய புகழில் குறைவுற்றுக் கொண்டே மங்கினீர் என்று நாங்கள் அவர்களிடத்தில் கூறியிருக்கிறோம். நீர் வியாதியஸ்தரை சுகப்படுத்தச் சென்றபோது, நிச்சயமாகவே, நீர் மகத்தானவராயிருந்தீர், ஜனங்களோ உம்மைக் காண வந்தனர். ஆனால் அது என்னவாயிருந்தது? அப்பங்களும், மீன்களுக்குமானதாயிருந்தன. நீர் அவர்களுக்கு சத்திய வார்த்தையைக் கூறினபோது, அவர்கள் அதில் நடக்க மனமில்லாதவர்களாயிருந்தனர், அதன்பின்னர் உம்முடைய புகழானது தொடர்ந்து வீழிச்சியுற்றது. நீரோ தொடர்ந்து அற்புதங்களைச் செய்தீர், ஆனாலும் உம்முடைய புகழானது வீழ்ச்சியடைந்தது. 255 நீர் உண்மையின் ஒரே தேவனாயிருக்கிறீர். நீர் எப்பொழுதுமே அந்தவிதமாகவே இருந்து வருகிறீர். நீர் மாறுகிறதில்லை. பிதாவே, அதாவது சபையில் இங்கே தங்களுடைய கரங்களை உயர்த்தினவர்கள் இன்றைக்கு அதைக் குறித்த ஒரு தரிசனத்தைப் பெற்றுக் கொள்வார்களாக. கர்த்தாவே, அது ஒரு மனிதனாயிருக்கவில்லை என்பதை அவர்கள் காண்பார்களாக. நாங்கள் மனிதனைப் பின்பற்றினால், அப்பொழுது நாங்கள் பரிதபிக்கப்பட்டவர்களாயிருப்போம். ஆனால் நாங்கள் பரிசுத்த ஆவியைப் பின்பற்றினால், அவர் எங்களை வேதாகமத்தின் ஒவ்வொரு வாக்குத்தத்திற்கும் வழி நடத்துவார். இன்றைக்கு இங்குள்ள ஜனங்களுடைய ஜீவியங்களில் ஒவ்வொரு காரியமும் நிறைவேற்றப்படுவதாக. 256 நான் என்னுடைய கரத்தில் சிறு குழந்தைகளின் துணிகளையும், சிறு மேற்சட்டைகளையும், உறுமால்களையும், பொட்டலங்களையும் பிடித்துள்ளேன். அவர்கள் பரிசுத்த பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் எடுத்தபோது, அசுத்த ஆவிகள் ஜனங்களைவிட்டுப்போய், வியாதிகள் குணமாக்கப்பட்டன என்று நாங்கள் வேதத்தில் கற்பிக்கப்பட்டுள்ளோம். ஜனங்கள் இன்றைக்கு இன்னமும் அதே தேவனைக் காண்கிறார்கள். இப்பொழுது நாங்கள் பரிசுத்த பவுல் அல்ல, ஆனால் நீரோ இன்னமும் இயேசுவாயிருக்கிறீர். அதுவும் பரிசுத்த பவுலாயிருக்கவில்லை; அது இயேசு கிறிஸ்துவண்டை அர்ப்பணிக்கப்பட்ட பரிசுத்த பவுலினுடைய ஜீவியமாயிருந்தது. “கர்த்தர் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்,” பவுல் அல்ல; கர்த்தரே! 257 இப்பொழுது பிதாவாகிய தேவனே, பவுல் கற்பித்ததுபோல பாதம் கழுவுதல், இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தில் ஞானஸ்நானங்கொடுத்தல், பெண் பிரசங்கிமார்களைத் தடை செய்தல், ஆத்துமாவின் நித்திய பாதுகாப்பில் நம்பிக்கைக் கொள்ளுதல் என்ற காரியங்கள் ஏராளமான முறைகள் விமர்சனம் செய்யப்படுகின்ற ஒரு காரியத்தை நாங்கள் அறியோம் என்று நாங்கள் நம்புகிறோம். எபேசியர்களிடத்தில், “அவர்கள் உலகத்தோற்றத்திற்கு முன்னரே தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கும்படி முன்குறிக்கப்பட்டிருந்தனர்” என்று கூறப்பட்டது. கொரிந்தியரிடத்தில், “ஏசாவும், யாக்கோபும் பிறக்கும் முன்னே, அவருடைய—அவருடைய முன்குறித்தலின் நிமித்தமாக, அவர்கள் சரியானதையும், தவறானதையும் அறிந்துகொள்ளும்படியான ஒரு வாய்ப்பு உண்டாயிருந்ததற்கு முன்னமே, தேவன் ஏசாவை வெறுத்து, யாக்கோபை நேசித்தார்” என்று கூறப்பட்டது. அவருடைய முன்னறிவு அவரை அறிந்து கொள்ளும்படிச் செய்தது. பிதாவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம், நீர் வாக்களித்துள்ளபடியால் நடைபெறுகின்ற அடையாளங்கள் மற்றும் அற்புதங்களினாலும், “நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர்” என்று வேதம் கூறுகிற அப்படிப்பட்ட அதைப் போன்ற காரியங்களின் பேரில் ஏன் அவர்கள் விழுந்துபோகிறார்கள்? பிதாவே, நாங்கள் வித்தியாசமாயிருக்க வேண்டும் என்று பொருள்படுத்திக் கூறவில்லை. ஆனால் நாங்கள்…உம்முடைய ஊழியக்காராயிருக்கும்படியான முறையில்…நாங்கள் உம்முடைய வார்த்தையைப் பின்பற்ற வேண்டும். பிதாவே, இது வித்தியாசமாயிருக்க வேண்டும் என்பதற்காகவல்லவென்றும் அல்லது சுயநலமாயிருக்க வேண்டுமென்றல்லவென்றும் அல்லது நாங்கள் இல்லாத யாரோ ஒருவராக இருக்க வேண்டும் என்று முயற்சிக்கும்படியானதல்லவென்பதை நீர் ஜனங்கள் புரிந்து கொள்ளும்படிக்குச் செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் உம்முடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டிருக்க மாத்திரமே முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். பிதாவே, ஒவ்வொருவரும் அதைக் காணட்டும். 258 நான் வியாதியஸ்தரண்டைக்கு இந்த துணிகளை அனுப்புகையில், கர்த்தாவே, அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைவார்களாக. உம்முடைய பரிசுத்த ஆவியானவர் இந்த விசுவாசத்தின் கிரியைக் காண்பாராக, கர்த்தாவே, அவர்கள் போய் குணமடைவார்களா. கர்த்தாவே, இதை அருளும். 259 சகோதரன் நெவிலை ஆசீர்வதியும். சபையை ஒருமிக்க ஆசீர்வதியும். ஞாயிறு வேதபாட பள்ளி ஆசிரியர்களை ஆசீர்வதியும். இங்குள்ள எல்லா போதகர்களையும் ஆசீர்வதியும், எங்களுடைய வாசல்களில் உள்ள புதிய வருகையாளர்களை ஆசீர்வதியும். 260 கர்த்தாவே, எனக்கு உதவி செய்யும். தேசத்திற்கு அப்பால் அங்கே நூற்றைம்பது மைல்கள் அல்லது இன்னும் அதிகமான தூரத்தில் உள்ள ஒரு மனமுடைந்துபோன குடும்பத்தை ஆறுதல்படுத்தும்படி முயற்சிக்க நான் இப்பொழுது வேகமாக காரோட்டிச் செல்ல வேண்டும், அங்கு சென்றடைய சற்று நேரம் ஆகும். கர்த்தாவே, என்னோடிரும் எனக்கு உதவி செய்யும். இதில்…உம்மை ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு வாய்ப்போடு அருகில் நின்று கொண்டிருக்கிற அவர்களிடத்தில் நான் இதைக் கூறும் வரையில் இறந்துபோன நபரைக் குறித்துகூட நான் பேச ஒருபோதும் விரும்புகிறதில்லை. தேவனே, அந்த மெத்தோடிஸ்டு சபையில் இந்த பிற்பகல் அந்த பீடத்தண்டை அந்த ஏழ்மையான கென்டக்கி ஜனங்களில் அநேகர் தாழ்மையாய் நடந்து வந்து தங்களுடைய இருதயங்களை உமக்குத் தரும்படி அருள்புரியும். கர்த்தாவே இதை அருளும். இப்பொழுது இரக்கமாயிரும். 261 எங்களை ஒருமிக்க ஆசீர்வதியும். வியாதியஸ்தரை சுகப்படுத்தி, இழக்கப்பட்டவர்களை இரட்சியும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 262 நான் சகோதரன் நெவில் அவர்களை இப்பொழுது ஒரு சில நிமிடங்கள் ஆராதனையை தொடர்ந்து நடத்தும்படியாக எடுத்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்ளப் போகிறேன். அவர் இந்த முறை என்ன செய்யப் போவதாயிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் எல்லாரும் எனக்காக ஜெபியுங்கள், நான் உங்களை பின்னர் காண்பேன். சகோதரன் நெவில், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.